சமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

முதல் நாள் தமது தோழியைச் சந்தித்துப் பேசிவிட்டு வீடு திரும்பினார் நந்தினி மாரிமுத்து. அந்தச் சந்திப்பின்போது நந்தினியின் தோழி வெகு இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், மறுநாள் அந்தத் தோழி மன உளைச்சலால் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றார் நந்தினி.

நந்தினியின் இரு நண்பர்கள் மனவுளைச்சலால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அவர் கள்  மன உளைச்சலில் இருந்தது அவர்களுக்கு மிகவும் நெருக்க மானவர்களுக்குக்கூட தெரியாது. 

இவர்களைப்போல மனவுளைச் சலால் பாதிக்கப்படும் இளையர் களுக்கான தீர்வைக் காண விழைந்தார் 20 வயது நந்தினி. அதன் காரணமாக சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) இளைய தலைவர்கள் திட்டத்தில் சேர்ந்தார்.  

சிண்டா இளைய தலைவர்கள் திட்டம் (எஸ்எல்ஒய்பி) சிண்டா வின் இளையர் பிரிவால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்தப் பட்டு வருகிறது. சமூகத்தில் நிலவும் சவால்களுக்குச் சுயமாக தீர்வுகள் காண முனையும் இளைய தலைவர்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். 

இத்திட்டத்தின் மூலம் இளை யர்களுக்குத் தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிகள், வளரும் நாடு ஒன்றுக்கு பயணம், சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது போன்ற நட வடிக்கைகளை ஏற்பாடு செய்கிறது இளையர் பிரிவு.

இத்திட்டத்தின் வாயிலாக இளையர்கள் உருவாக்கிய தீர்வுகளைப் பற்றி மக்களிடையே 

விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிண்டாவின் இளையர் பிரிவு ‘கால் டு ஆக்‌ஷன்’ எனும் நிகழ்ச்சியை மே 26ஆம் தேதி நடத்தியது.

குட்மன் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 20 இளையர்கள் பங்கெடுத்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்ட  தற்காப்பு மூத்த துணை அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் இளையர்களுடன் கலந்துரை யாடினார்.

தலைமைத்துவம்,  சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது ஆகியன பற்றி அவர்கள் உரையாடினார்கள்.

“சமூகத்திலுள்ள சவால்களைக் கண்டறிவதற்கு, சிறு வயதி லிருந்தே இளையர்கள் சமூகத் திற்கு சேவை அளிக்கத் தொடங்குவது முக்கியம்,” என்று டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் கூறினார். 

சமூகப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான திட்டங்களை உருவாக்கி, விழிப்புணர்வு நிகழ்ச் சியில் பங்கெடுத்த இளையர்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

எஸ்எல்ஒய்பி திட்டத்தைச் சேர்ந்த இளையர்கள் தங்களது தீர்வுகளை நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களிடம் விளக்கினர். 

இவ்வாண்டு மொத்தம் ஏழு திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவை மன ஆரோக்கியம், போதைப்பொருள் புழக்கம், உணவு விரயம் போன்ற சமூக சவால்களுக்கான தீர்வு களாக அமைந்தன. 

தம் குழுவினருடன் சேர்ந்து ‘எவ்ரி லைஃப் மேட்டர்ஸ்’  என்று பெயரிடப்பட்ட,  மனவுளைச்சலால் ஏற்படும் சவால்களைச் சமாளிப் பதற்கான திட்டம் ஒன்றை உருவக்கியுள்ளார் நந்தினி. 

உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைமைக்கு ஒருவரை மன உளைச்சல் எவ்வாறு இட்டுச் செல்கிறது, இதனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு எவ்வாறு உதவலாம், இப்பிரச்சினையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்து வது எப்படி என்பதைப் பற்றி இவர்களின் திட்டம் ஆராய்ந்து உள்ளது. 

"மன ஆரோக்கியத்தைப் பற் றிய அதிக விழிப்புணர்வு இல்லை. பெற்றோர்கள் அவர்களது பிள்ளை களிடம் மன ஆரோக்கியத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மன ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசக்கூடிய ஒருவர் இருக்க வேண்டும். அப்போதுதான் பிள் ளைகளும் மன ஆரோக்கியத்தைப் பற்றி மனந்திறந்து உரையாடு வார்கள்," என்றார் நந்தினி.  

அவர் தற்போது நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஆரம்பகாலக் கல்வியுடன் கூடிய தமிழ் பட்டயப் படிப்பில் இரண்டாம் ஆண்டு மாணவி.

கண்டிப்பின் வரம்பு

இளம் பருவத்தில் தமக்கு நேர்ந்த கொடுமைகளைப்போல வேறு யாருக்கும் நிகழக்கூடாது என்ற எண்ணத்தில் ‘அப்யூஸ்டு நோ மோர்’ என்ற முயற்சியை மேற்கொண்டார் 17 வயது ஹரிகரன் ஞானசேகரன். 

தொழில்நுட்பக் கல்விக் கழகத் தில் தாதிமைப் படிப்பின் முதலாம் ஆண்டு மாணவரான இவர், பெற்றோர்களுக்கும் பெரியவர் களுக்கும் கண்டிப்பிற்கும்  தவ றான அதிகாரப் பிரயோகத்திற் கும் இடையே உள்ள வித்தியா சத்தை உணர்த்த விரும்புகிறார். 

"கண்டிப்பிற்கும் தவறான அதிகாரப் பிரயோகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப்  பெற்றோர்களுக்கு விளக்கினால் தான் அவர்களுக்கும் அவர்களது கண்டிப்பு முறைமீது போதுமான அக்கறை ஏற்படும். தங்களது கண்டிப்பு முறைகள் எல்லை மீறும்போது தாமாகவே அந்தச் செயலிலிருந்து தம்மை விடுவித் துக்கொள்ள வேண்டும்," என்றார் ஹரிகரன்.

நந்தினியும் ஹரிகரனும் தாங்கள் ஆலோசித்திருக்கும் திட்டங்களை சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முதல் படியாகக் கருதுகிறார்கள். 

மேலும் முயற்சிகள் எடுத்து சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த இந்த இளையர்கள் விரும்பு கிறார்கள். 

"எஸ்எல்ஒய்பி திட்டத்தின் மூலம் என்னுடைய ஆலோசனை களையும் சிந்தனைகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள் ளும் நம்பிக்கை எனக்கு வந்திருக் கிறது. இப்போது சமூக அமைப்புகளிடம் என்னுடைய திட்டத்தைப் பற்றி என்னால் பேச முடிகிறது. நான் தொடங்கியுள்ள ‘இன்ஸ்டகிராம்’ பக்கத்தின் மூலம் இப்பிரச்சினையை என் னுடன் சேர்ந்து தீர்க்க முயற்சி செய்யும் மற்ற தொண்டூழியர் களுடன் தொடர்புகொள்வேன்," என்று ஹரிகரன் கூறினார். 

தாங்கள் உருவாக்கியுள்ள திட்டங்களைச் செயல்படுத்தி, சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதே சிண்டா இளையர் பிரிவின் நோக்கமாகும்.

 

Read more from this section

சிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

07 Oct 2019

சாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்

(மேல் படம்) சிக்க வைக்கும் கலிங்க பாம்பைப் போல் பாவனை செய்த ‘தத்வா’ குழு நடனமணிகள். படம்: திமத்தி டேவிட், எஸ்பிஎச்

30 Sep 2019

இளையர் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்த ‘கலிங்கா’