உன்னத நிலையைத் தந்த தேசிய சேவை

ஐக்கிய அரபு நாடுகள், கத்தார், இந்தியா போன்ற நாடுகளில் வாழ்ந்ததைவிட சிங்கப்பூரில் தேசிய சேவை ஆற்றிய அனுபவமே தன்னைச் செம்மையாகச் செதுக்கியதாகக் கூறுகிறார் 19 வயது த. தரணீதரன்.

, இந்தியாவி குஜரா மாநிலத்தில் தன்னுடைய பன்னிரெண்டாம் நிலை 'சிபிஎஸ்இ' தேர்வுகளை முடித்த பிறகு, சிங்கப்பூரில் தேசிய சேவை ஆற்ற வந்தார் இவர். 

தேசிய சேவையின்போது முதல் முறையாக தன் குடும்பத்தினரை விட்டு தனியாக  வாழும் சூழ்நிலை தரணீதரனுக்கு நேர்ந்தது. பெற்றோரையோ வேறு தெரிந்தவர்களையோ பார்க்க முடியாமல் இருந்தது. ஆனால் முகாமிலுள்ள அவருடைய நண்பர்கள் அவரின் தனிமை உணர்வை மறக்க உதவினர்.

அடிப்படை ராணுவப் பயிற்சிக்குப் பிறகு 'ஓசிஎஸ்' எனும்  அதிகாரி பயிற்சி பெற அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒன்பது மாதப் பயிற்சிக்குப் பிறகு கடந்த மாதம் 15ஆம் தேதியன்று  அணிவகுப்பு நிகழ்ச்சியில் இரண்டாம் 'லெஃப்டினெண்ட்' ஆகப் பதவியேற்றார். தற்போது ஆகாயப்படை போர் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். 

அதிகாரிகளுக்கான 38 வாரத் தீவிரப் பயிற்சியின் நிறைவை இந்நிகழ்ச்சி சிறப்பித்தது. இப்பயிற்சித் திட்டம் வீரர்களின் திட்டமிடும் திறன், தலைமைத்துவப் பொறுப்பு, போர் ஆற்றல் ஆகியவற்றை வளர்த்துள்ளது. இப்புதிய அதிகாரிகள் சிங்கப்பூர் ஆயுதப் படையில் புதிய பொறுப்புகளை மேற்கொள்வர். 

மொத்தத்தில் தேசிய சேவை தன்னை மாற்றியிருப்பதாகக் கூறுகிறார் தரணீதரன். “தேசிய சேவைக்கு முன்னால், நான் பொறுப்புடனோ தன்னம்பிக்கையுடனோ இருக்கமாட்டேன். ஆனால் இப்போது நான் முன்னேறியிருக்கிறேன். மாற்றத்தையும் சவால்களையும் நான் இன்னும் நன்றாகச் சமாளிக்கிறேன். மேலும், தற்போது நான் என் பெற்றோரை விட்டு தனியாக தங்கி இருப்பதால் சுதந்திரமாக பொறுபை கையாளத் தெரிந்தவனாக தேசிய சேவை கைகொடுத்துள்ளது,” என்றார்.    

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹாலிவுட் திரைப்படம் 'அவெஞ்சர்ஸ். படத்தின் வெற்றிக்குத் தானும் கைகொடுத்திருக்கிறார் என்று எண்ணுவதில் பெருமிதம் கொள்கிறார் இந்த இருபது வயது இளையர். படம்: அக்‌ஷ்யா

22 Jul 2019

ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா

மன அழுத்தத்தைச் சமாளிக்கச் சிலர் இவ்வாறு சிறு வயதிலிருந்தே தங்கள் கைகளை வெட்டிக்கொண்டு காயப்படுத்திக்கொள்கின்றனர். கோப்புப்படம்

22 Jul 2019

உதவி கேட்பதும் பலமே, பலவீனம் அல்ல

இவ்வாண்டு 'சங்கே முழங்கு' நிகழ்ச்சிக்கான நடன அங்கத்திற்குப் பயிற்சி செய்யும் இளையர்கள். படம்: என்யுஎஸ் தமிழ் கலாசாரச் சங்கம்

22 Jul 2019

இருநூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்கும் ‘சங்கே முழங்கு 2019’