‘தமிழா’ அமைப்பின் முதல் படைப்பாக ‘அத்தியாயம்’

‘தமிழா’ அமைப்பு வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 7ஆம் தேதி) ‘அத்தியாயம்’ என்ற அதன் முதல் மேடை நாடகத்தை அரங்கேற்ற உள்ளது.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படும் இந்தப் படைப்பில் பல்கலைக்கழக, தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் என ஏறத்தாழ 60 மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் பங்கேற்கிறார்கள்.

தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, தேசிய இளையர் மன்றம்  ஆகியவற்றின் ஆதரவில் நடக்கும் இந்த படைப்பு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கத்தில் மேடையேற்றப்படும். 

தயாரிப்புக் குழு சுமார் ஆறு மாத காலமாக இந்தப் படைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது.  கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு நீடிக்கும் ‘அத்தியாயம்’, மதியம் 3 மணி, மாலை 7.30 மணி என இரு முறை அரங்கேற்றப்படும். நுழைவுச்சீட்டுகளைப் பெற bit.ly/athiyaayam என்ற இணையப் பக்கத்தைத் தொடர்புகொள்ளலாம். படம்: தமிழா