தேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்

போகும் இடங்களில் ஆங்காங்கே நின்று செல்ஃபி எடுத்துக்கொள்பவர்களாக நீங்கள் இருந்தால், இந்தத் தீபாவளிப் பண்டிகைக் காலத்தில், தேக்கா பக்கம் சென்றே ஆகவேண்டும். ஃபேஸ்புக்கில் ‘செக்-இன்’ செய்யவும் இன்ஸ்டகிராமில் கண்கவர் படங்களைப் பதிவேற்றம் செய்யவும் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள கவர்ச்சிமிக்க அலங்காரம் மிகப் பொருத்தமாக இருக்கும். வண்ண வண்ண விளக்குகளால் மிளிரும் சாலை, வண்ணமயமான விளக்குகள் அமைந்த மயில், நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அழகு தேர் ஆகிய அலங்காரங்களை இந்தத் தீபாவளிக்குப் படம் பிடித்து, பதிவேற்றம் செய்து உங்கள் சமூக ஊடக நண்பர் கூட்டத்தைப் பரவசப்படுத்துங்கள். படங்கள்: எஸ்டி

 

Loading...
Load next