இயக்­கு­நர் கனவை நனவாக்­க ஒரு வாய்ப்பு

தேசிய இளை­யர் படப்­பி­டிப்பு விரு­து­க­ளுக்கு (National Youth Film Awards) உங்­க­ளது படைப்­பைச் சமர்ப்­பித்­துப் பரி­சு­களை வெல்­லும் அரிய வாய்ப்பு உங்­க­ளுக்­காக காத்­தி­ருக்­கிறது.

2015ஆம் ஆண்­டி­லி­ருந்து இத்­தே­சிய அள­வி­லான விரு­து­கள், படப்­பி­டிப்­புத் துறை­யின் வெவ்­வேறு பிரி­வு­களில் தலை­சி­றந்த இளை­யர்­களை கெள­ர­வித்து வரு­கிறது. ‘ஸ்கேப்’ (SCAPE) ஏற்­பாட்­டில் நடக்­கும் இப்­போட்டி, இளை­யர்­கள் தங்­க­ளது படப்­பி­டிப்­புத் திறனை அடுத்த நிலைக்­குக் கொண்டு செல்ல வாய்ப்­ப­ளிக்­கிறது.

இப்­போட்­டி­வழி படப்­பி­டிப்­புத் துறை­யின் நிபு­ணர்­க­ளு­டன் தொடர்­பு­களை வளர்த்­துக்­கொள்­ள­லாம். வெற்­றி­யா­ளர்­க­ளுக்கு உள்­ளூர், வெளி­நாட்டு திரைப்­பட, குறும்­பட விழாக்­களில் கலந்­து­கொள்­ள­வும் படப்­பி­டிப்­புத் துறை­யில் வேலை அமை­ய­வும் வாய்ப்­புள்­ளது.

இவ்­வாண்­டின் வெற்­றி­யா­ளர்­கள் வட்­டார அள­வி­லான குறும்­பட விழாக்­களில் கலந்­து­கொள்­வ­து­டன் கிட்­டத்­தட்ட $70,000 மதிப்­பி­லான பரி­சு­களை வெல்­ல­வும் முடி­யும்.

சொந்த குறும்­ப­டத்­தினை இயக்­கு­வ­தற்­கான நிதி ஆத­ர­வும் கிடைக்­கப்­பெ­றும் அதிர்­‌‌ஷ்­ட­சாலி நீங்­க­ளாக இருக்­க­லாம். இப்­போட்­டிக்­கான இவ்­வாண்­டின் கருப்­பொ­ருள், ‘உடைக்­க­மு­டி­யாத நமது இளை­யர்­க­ளின் உணர்வு’.

15 வய­து­மு­தல் 35 வய­துக்­கு உட்­பட்ட இளை­யர்­கள் இப்­போட்­டி­யில் பங்­கேற்­க­லாம்.

இது குறித்த மேல் விவ­ரம் அறிய https://www.scape.sg/media/nyfa/ எனும் இணை­யப்­பக்­கத்தை நாட­வும். உங்­கள் படைப்­பு­களை அனுப்­பு­வ­தற்­கான இறுதி நாள் வரும் ஏப்­ரல் 30ஆம் தேதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!