கிறிஸ்டியாேனா ரொனால்டோ (Cristiano Ronaldo) உங்களுக்கு விருப்பமான காற்பந்து வீரரா?
அவர் விளையாடிய முதல் காற்பந்து குழு எது என்று தெரியுமா?
ரொனால்டோ போர்ச்சுக்கல் (Portugal) நாட்டைச் சேர்ந்தவர்.
அவருடைய சொந்த நாட்டில் 'ஸ்போர்ட்டிங்' (Sporting) என்ற காற்பந்துக் குழு மிகவும் பிரபலமானது.
அந்த குழுவில்தான் ரொனால்டோ காற்பந்து விளையாடத் தொடங்கினார்.
அக்குழுவின் இளையர் காற்பந்து பயிலகத்தில் சேர்ந்தார் ரொனால்டோ.
அங்கு அவருக்கு ஒரு நல்ல அடித்தளம் அந்தது.
தொடர்ந்து நன்றாக விளையாடி காற்பந்து உலகில் சிறந்த ஆட்டக்காரராக மாறினார் கிறிஸ்டியாேனா ரொனால்டோ.
ரொனால்டோ இத்தாலி நாட்டின் யுவண்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
முன்பு இவர் ரியால் மட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார்.
இவர் காற்பந்து உலகில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.
உலகம் முழுவதும் இவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.
கடந்த இருபது வருடங்களாக காற்பந்து உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
ரொனால்டோவிற்கு புகை மற்றும் குடிப்பழக்கங்கள் கிடையாது.
காரணம் இவரது தந்தை இந்த காரணங்களால் இறந்ததால் ரொனால்டோ இந்த பழக்கங்கைள வெறுத்தார்.
மேலும் ஆண்டுக்கு ஒருமுறை தனது சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் இரத்த தானம் செய்யும் பழக்கம் உள்ளதால் தன்னுடைய உடலில் பச்சைக் குத்திக்கொண்டதில்லை.
இத்தனைப் பெருமைக்குரிய கிறிஸ்டியானோ ரொனால்டோ முதன் முதலாக சேர்ந்த இளையர் காற்பந்து பயிலகத்தில் சேர சிங்கப்பூர் மாணவர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அம்மாணவரின் பெயர் செல்சியன். இவர் பயனியர் தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பில் பயில்கிறார்.
செல்சியன் நான்கு வயதிலிருந்து காற்பந்து விளையாடி வருகிறார்.
தமது தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வு முடிந்ததும், இவர் ஐேராப்பா செல்லக்கூடும்.
அங்கு ஒரு காற்பந்து பயிலகத்தில் சேர விரும்புகிறார்.
பயிலகத்தில் அவர் படித்துக்கொண்டே காற்பந்தும் விளையாடுவார்.
செல்சியனுக்குப் பிடித்த விளையாட்டாளர்களில் ஒருவர் இடன் ஹசார்ட் (Eden Hazard).
அவரைப் போலவே மத்திய திடல் ஆட்டக்காரராக செல்சியன் விளையாடுகிறார்.
எதிர்காலத்தில் சிறந்த காற்பந்து வீரராக வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி செல்சியன் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார்.
ஒரு நாள் இவர் சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவையும் பிரதிநிதிக்கலாம்!

