சந்தேகங்களை தீர்க்கும் மருத்துவர்

சந்தேகங்களை தீர்க்கும் மருத்துவர்

3 mins read
00a2b335-d55a-4d26-98ee-a3cedfe0c36a
டாக்­டர் தினேஷ் விஷ்வா குண­சே­க­ர­ன். -

கொவிட்-19 கிருமி பர­வி­வ­ரும் இந்­தக் கால­கட்­டத்­தில் நம்­ப­க­மான சுகா­தார தக­வல்­க­ளைப் பொது­மக்­க­ளி­டம் கொண்­டு­சேர்க்க விரும்­பு­பவர்­களில் டாக்­டர் தினேஷ் விஷ்வா குண­சே­க­ர­னும் (படம்) ஒரு­வர். இவ­ரது முயற்­சிக்­குக் கைகொ­டுக்­கிறது 'ஆஸ்க் டாக்­டர்' இணை­யத்­த­ளம்.

பிப்­ர­வரி மாதத்­தில் தொடங்­கப்­பட்ட இந்த இணை­யத்­த­ளம், கொவிட்-19 கிருமி பர­வல் பற்­றிய கேள்­வி­க­ளு­டன் சுகா­தா­ரம் தொடர்­பாக மற்ற கேள்­வி­க­ளைக் கேட்­ப­தற்­கான சிறந்த தள­மாக உள்­ளது. மக்­கள் கேட்­கும் கேள்­வி­க­ளுக்கு டாக்­டர் தினேஷ் உள்­ளிட்ட சான்­ற­ளிக்­கப்­பட்ட மருத்­துவ நிபு­ணர்­கள் இரண்டு, மூன்று நாட்­க­ளுக்­குள் பதி­ல­ளிப்­பர்.

கிருமி பர­வத் தொடங்­கிய காலத்­தி­லி­ருந்து தம்மை நாடு­ப­வர்­கள் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பு­வ­தாக ராஃபிள்ஸ் மருத்­து­வக் குழு­மத்­தில் பணி­பு­ரி­யும் டாக்­டர் தினேஷ் தெரி­வித்­தார். இந்த இணை­யத்­த­ளத்தை நிறு­விய திரு பிர­யன் டோ என்­ப­வர், இச்­சே­வையை வழங்க கடந்த ஆண்டு தம்மை அணு­கி­ய­தாக டாக்­டர் தினேஷ் கூறி­னார்.

அடுத்த மாதம்­தான் இந்த இணை­யத்­த­ளம் அதி­கா­ர­பூர்­வ­மாக தொடங்கப்­ப­ட­வி­ருந்­தது. இருந்­த­போ­தும், கொரோனா கிரு­மித்­தொற்­றின் கார­ண­மாக கடந்த ஜன­வரி மாதத்­தி­லேயே இந்­தத் தளம் தொடங்­கப்­பட்­டது.

"இந்­தத் தளத்­திற்­குக் கூடு­த­லான அம்­சங்­களை முன்­ன­தா­கத் திட்­ட­மிட்­டி­ருந்­தோம். நீங்­கள் காணும் இந்த இணை­யத்­த­ளம் எங்­கள் திட்­டத்­தின் ஓர் அங்­கம்­தான். ஆயி­னும், கிரு­மித்­தொற்று தொடர்­பான பொய்த் தக­வ­லும் பதற்­ற­மும் அதி­க­ரித்­துள்­ள­தைக் கண்டு நாங்­கள் எங்­க­ளது உத்­தி­களை மாற்­றி­னோம்," என்­றார் பகுதி நேர மருத்­து­வ­ரா­க­வும் ஆய்­வா­ள­ரா­க­வும் பணி­யாற்­றும் டாக்­டர் தினேஷ், 28.

கிருமி பர­வத் தொடங்­கி­யது முதல் பல­ரும் அது பற்றி தொடர்ந்து கேள்­வி­க­ளைக் கேட்டு வரு­வ­தைச் சுட்­டிய டாக்­டர் தினேஷ், மக்­க­ளி­டையே தவ­றான கருத்­து­கள் பர­வ­லாக இருப்­பதை அவ­ரது கேள்­வி­கள் தமக்கு உணர்த்­தி­ய­தா­கக் கூறி­னார்.

"காண்டா மிரு­கத்­தின் கொம்பு, மஞ்­சள் உள்­ளிட்ட பொருட்­கள் கொரோனா கிரு­மித்­தொற்­றால் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பைக் குணப்­ப­டுத்­தும் என மக்­கள் பலர் நம்பி அவற்றை வாங்­கு­கின்­ற­னர். பதற்­றத்­தால் அவர்­கள் பேரங்­கா­டி­களில் டிஷ்யூ தாட்களை வாங்க்கி ­கு­விக்­கின்­ற­னர். இதைக் கண்டு கவ­லை­ய­டைந்த நான், அவர்­க­ளுக்­குச் சரி­யான ஆலே­சா­னையை வழங்க வேண்­டும் என விரும்­பி­னேன்," எனத் தெரி­வித்­தார்.

நூல­கங்­களில் இர­வல் பெறும் புத்­த­கங்­கள் மூலம் கிருமி பர­வுமா, பொதுப் போக்­கு­வ­ரத்து அல்­லது பொது இடங்­களில் இருக்­கை­களில் அம­ரு­வ­தன் மூலம் கிரு­மி ஒரு­வரைத் தொற்­றிக்­கொள்ளுமா போன்ற தேவை­யற்ற அச்­சங்­களை இந்த இணை­யத்­த­ளத்­தின்­வழி தாம் போக்கியதாக டாக்­டர் தினேஷ் குறிப்­பிட்­டார்.

இந்­தத் தளத்­தில் வழங்­கப்­படும் ஆலோ­ச­னை­க­ளைப் பிற மருத்­துவ நிபு­ணர்­கள் வழி­மொ­ழி­ய­வும் விமர்­சிக்­க­வும் முடி­யும் என அவர் கூறி­னார். பயன்­த­ரும் ஆலோ­ச­னை­களை மக்­க­ளின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரும் தொழில்­நுட்­பத்தை இந்த இணை­யத்­த­ளம் கொண்­டுள்­ளது என்­றும் டாக்­டர் தினேஷ் சொன்­னார்.

இந்த முயற்­சிக்­குச் சிறந்த வர­வேற்பு கிடைத்­துள்­ள­தா­கக் கூறிய இவர், அண்­மைக் காலத்­தில் பல­ரும் இச்­சே­வையைப் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­தைச் சுட்­டி­னார்.

"எங்­கள் தளத்­தில் இணைந்­தி­ருக்­கும் மருத்­துவ நிபு­ணர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துள்­ளது," என்­றும் இவர் குறிப்­பிட்­டார்.

ஃபேஸ்புக், இன்ஸ்­ட­கி­ராம் உள்­ளிட்ட சமூக ஊட­கங்­கள் வழி­யா­க­வும் நேர­டி­யா­கப் பல­ரைத் தொடர்­பு­கொண்டு மருத்­து­வக் குழு­வி­னர் இந்த இணை­யத்­த­ளம் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

இளை­யர்­க­ளை­யும் நடுத்­தர வய­தி­ன­ரை­யும் இத்­த­ளம் அதி­கம் ஈர்க்­கும் எனக் கூறிய டாக்­டர் தினேஷ், 60 வய­திற்­கும் மேற்­பட்ட பல­ரும் தயக்­க­மின்றி கேள்­வி­க­ளைக் கேட்டு தெளி­வு­ப­டுத்­திக்­கொண்­ட­தைச் சுட்­டி­னார்.

இந்த இணை­யத்­த­ளத்­தைப் பயன்­ப­டுத்த சொந்தப் பதிவு ஒன்றை உரு­வாக்­கத் தேவை இல்லை என்­ப­தால் மக்­கள் தங்­க­ளது தனிப்­பட்ட தக­வல்­களை இத்­த­ளத்­தில் பதி­வி­டும் அவ­சி­யம் இருக்­காது என டாக்­டர் தினேஷ் தெரி­வித்­தார்.

தனிப்­பட்ட முறை­யில் சுகா­தா­ரம் தொடர்­பான மேல் விவ­ரங்­க­ளைத் கேட்க விரும்­பு­வோ­ருக்கு காணொளி தொலைத்­தொ­டர்பு வச­தி­கள் கூடிய விரை­வில் அமைக்­கப்­படும் என்­றார் டாக்­டர் தினேஷ். தற்­போது சிங்­கப்­பூ­ரில் உள்­ள­வர்­க­ளுக்­காக செயல்­படும் இத்­த­ளம் இனி பிற நாடு­க­ளுக்­கும் அறி­மு­கம் செய்­யப்­ப­ட­லாம் என்­றும் ஆங்­கி­லம் தவிற பிற மொழி­களில் இது இயங்­க­லாம் என்­றும் இவர் கூறி­னார்.

கிரு­மித்­தொற்று பற்­றிய சந்­தே­கங்­க­ளு­டன் மருந்­துப் பொருட்­கள் குறித்து ஏதே­னும் ஐயம் இருந்­தால் தாரா­ள­மாக இந்த இணை­யத்­த­ளம் வழி­யாக தெளி­வு­பெற பொது­மக்­களை அழைப்பதாக டாக்­டர் தினேஷ் தெரி­வித்­தார்.

"இத்­த­ளம் வழி­யாக மக்­கள் சரி­யான தக­வல்­க­ளைத் தெரிந்து­கொண்டு பய­ன­டைய வேண்­டும் என்­பதே என் விருப்­பம்," என்­றார் இவர்.

மேல் விவ­ரங்­க­ளுக்கு https://www.askdr.co/ எனும் இணை­யத்­ த­ளத்­திற்­குச் செல்­ல­லாம்.