மக்களுக்கு தைரியமூட்டும் இளம் தொண்டூழியர்கள்

பல்­க­லைக்­க­ழ­கத் தேர்­வு­கள் நெருங்­கிக்­கொண்­டி­ருந்­த­போ­தும் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான முயற்­சி­களில் பங்­கேற்க தொண்­டூ­ழிய நட­வ­டிக்­கை­யில் முகம்­மது ஜௌஹர், 23, ஈடு­பட்டார்.

ஜூரோங் ஈஸ்ட் வட்­டா­ரத்­தி­ல் உள்ள ஐஎம்­எம் கடைத்­தொ­கு­தி­யில் கடந்த மாதம் 31ஆம் தேதி பொது­மக்­க­ளுக்கு கிருமி நாசி­னி­களை விநி­யோ­கம் செய்­த­வர்­களில் பல்­க­லைக்­க­ழக மாண­வ­ரான இவ­ரும் ஒரு­வர்.

சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத்­தில் (எஸ்­ஐடி) போக்­கு­வ­ரத்துப் பொறி­யி­யல் துறை­யில் பயி­லும் முத­லாம் ஆண்டு மாண­வ­ரான இவர், தொண்­டூ­ழி­ய சேவையிலும் ஈடுபட்டுள்ளார்.

“கொவிட்-19 நில­வ­ரம் குறித்து அர­சாங்­கம் கூறும் வழி­மு­றை­க­ளைப் பின்­பற்ற வேண்­டும். பதற்­றம் கொள்­ளா­மல் வீட்­டில் இருந்­த­வாறு அன்­றாட வாழ்க்­கை­யைத் தொடர வேண்­டும்,” என்று ஜௌஹர் தெரி­வித்­தார்.

இத்­த­கைய நட­வ­டிக்கை மூலம் மக்­க­ளுக்கு பொரு­ளு­தவி மட்­டு­மின்றி மனோ­ரீ­தி­யான உத­வி­யும் கிடைப்­ப­தாக இவர் கூறி­னார்.

“தங்­க­ளது நலன் மீது அக்­கறை காட்ட மற்றவர்களும் இருக்­கி­றார்­களே என்­பதை உண­ரும் மக்­க­ளுக்­குத் தைரி­யம் கூடு­கிறது,”

இதேபோன்ற சமூக உணர்­வு­டன் தாமும் தம் நண்­பர்­களும் இதில் தொண்­டூ­ழி­யர்­க­ளாக சேர்ந்­த­தா­கக் கூறி­னார் இந்­நி­கழ்ச்­சி­யில் பங்­கேற்ற மற்­றொரு இளை­ய­ரான நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழக (என்­டியு) வர்த்­த­கப் பாடப் பிரிவில் இரண்­டாம் ஆண்டு பயிலும் ருஃபினா ஆன் ஆன்ட்ரூ, 22.

கொவிட்-19 கிருமி பர­வி­வ­ரும் காலத்­தில் பலர் என்ன செய்­வது எனத் தெரி­யா­மல் திண­றி­ய­தைக் கண்ட ருஃபினா, கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போரில் இறங்க வேண்­டும் என முடி­வெ­டுத்­தார்.

“அனை­வ­ரின் பாது­காப்­பை­யும் கருதி பெரும்­பா­லா­னோர் வீட்­டி­லேயே முடங்­கி­யுள்­ள­னர். அது­தான் சரி­யான நட­வ­டிக்கை.

“எனி­னும், அத்­தி­யா­வ­சிய சேவை­யில் ஈடு­ப­டு­ப­வர்­கள், குறிப்­பாக சுகா­தா­ரத் துறை­யில் பணி­பு­ரி­ப­வர்­கள் பாது­காப்­பு­டன் வெளியே செல்­ல­வேண்­டும்.

“இந்­தச் சூழ­லில் தொண்­டூ­ழி­யர்­க­ளின் பங்கு முக்­கி­யம். இளை­யர்­க­ளான நாங்­கள் சமு­தா­யத்­திற்கு உதவி செய்­யா­விட்­டால் வேறு யார் அத­னைச் செய்­வார்?” என்று ருஃபினா கூறி­னார்.

கிருமி நாசி­னி­க­ளைப் பெற வந்த குடி­யி­ருப்­பா­ளர்­களில் பலர் தம்­மி­டம் கனி­வு­டன் நடந்­து­கொண்டு பாராட்டை வெளிப்­ப­டுத்­தி­ய­தாக அவர் கூறி­னார்.

கொவிட்-19 கிருமி பர­வும் சூழல் எப்­படி வேண்­டு­மா­னா­லும் மாறும். அதை எதிர்­கொள்ள, அதற்கேற்ற வகையில் பிற­ருக்கு உதவ வேண்­டும் என்­றார் அவர்.

கிருமி நாசி­னி­க­ளைப் பெற்­றுக்­கொண்ட பொது­மக்­களில் ஒரு­வ­ரான கவிதா நாகேந்­தி­ரன், 40, தொண்­டூ­ழி­யர்­க­ளின் சேவையைப் பாராட்­டி­னார்.

அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு தம் கண­வ­ரு­டன் புலம்­பெ­யர்ந்த திரு­மதி கவிதா, சிங்­கப்­பூர் மக்­கள் நல­னில் அர­சாங்­கம் அக்­கறை கொண்­டி­ருப்­பது பாராட்டுக்­கு­ரி­யது என்று சொன்­னார்.

“இங்கு நான் பாது­காப்­பாக இருப்­பதை உணர்­கி­றேன். அர­சாங்­கம் சொல்­வதை மக்­கள் மதித்து நடப்­பதே இதற்­குக் கார­ணம்,” என்று அவர் கூறி­னார்.

ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் 500 மில்லி லிட்­டர் கொள்ளளவு கிருமி நாசி­னி வழங்­கப்­படும் எனக் கடந்த மாதம் நடுப்­ப­கு­தி­யில் தெமா­செக் அற­நி­று­வ­னம் அறி­வித்­தி­ருந்­தது.

தீவு முழு­வ­தும் 109 சமூக மன்­றங்­க­ளி­லும் 16 கடைத்­தொ­குதி­க­ளி­லும் கிருமி நாசி­னி­கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!