மெய்நிகர் தொழில்நுட்பத்தால் மாறுபட்ட கற்றல் அனுபவம்

கி. ஜனார்த்­த­னன்

மருத்­து­வ­ரா­க­வும் பொறி­யா­ள­ரா­க­வும் தகு­தி­பெ­று­வ­தற்­காக ‘எஸ்­யு­டிடி-டியூக் என்­யு­எஸ்’ பயிற்­சித்­திட்­டத்­தில் படித்­து­வ­ரு­கி­றார் இளை­யர் வைஷ்­ணவி திவ்யா ஸ்ரீதர். இவ­ரின் கற்­றல் பய­ணத்­தில் மெய்­நி­கர் தொழில்­நுட்­பம் மாறு­பட்ட அனு­ப­வத்தை அளித்­துள்­ளது. சிறு வய­தி­லி­ருந்து கணக்கு மற்­றும் அறி­வி­யல் பாடங்­களில் அதீத ஆர்­வம் காட்டி வந்த 20 வயது திவ்யா, இத்­த­கைய தொழில்­நுட்­பத்­தின்­மூ­லம் கொவிட்-19 கிரு­மித்­தொற்று போன்ற சவால்­க­ளைச் சமா­ளிப்­ப­தில் மாண­வர்­கள் ஆர்­வம் காட்­டு­வ­தாக கூறி­னார். சிறு­வ­ய­தி­லி­ருந்தே மெய்­நி­கர் தொழில்­நுட்ப அம்­சங்­களில் ஆர்­வம் கொண்­ட­வர் திவ்யா.

தம்­மைச் சுற்றி சமு­தா­யத்­தில் ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளைப் பற்றி அடிக்­கடி சிந்­திப்­ப­தாக கூறிய திவ்யா, கணக்கு, அறி­வி­யல் முறை­களில் இருக்­கும் நேர­டிப்­போக்­கை­யும் நம்­ப­கத்­தன்­மை­யை­யும் எப்­போ­தும் விரும்­பி­ய­தால் அப்­பா­டங்­களில் சிறப்­பா­கச் செய்து வந்­த­தாக தெரி­வித்­தார். இந்த ஆர்­வத்­தால் திவ்யா, பல்­க­லைக்­க­ழ­கப் படிப்­பைத் தொடங்­கி­ய­தற்கு முன்­னரே, ‘ஏ-ஸ்டார்’ நிறு­வ­னத்­தின் வேலைப் பயிற்­சித்­திட்­டம் ஒன்­றில் சேர்ந்­தார். சரு­மத்­தின்­கீழ் உற்­றுப்­பார்க்­கப் பயன்­ப­டுத்­தப்­படும் அலைக்­கற்­றைத் தொழில்­நுட்­பம் தொடர்­பான ஆய்வு ஒன்­றுக்­குத் தரவு சேர்க்­கும் பணி­யில் ஈடு­பட்­டார். பின்­னர் கடந்­தாண்டு மே மாதம் எஸ்­யு­டிடி பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சேர்ந்­தார்.

இப்­பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மெய்­நி­கர்த் தொழில்­நுட்­பம் வழி­யா­கக் கற்­பிக்­கப்­பட்ட கணித பாடத்­தைப் பயின்ற முதல் 125 மாண­வர்­களில் திவ்­யா­வும் ஒரு­வர்.

மெய்­நி­கர் தொழில்­நுட்­பத்­தின் மூல­மாக தாங்­கள் எடுக்­கும் ஒவ்­வொரு முடி­வின் தாக்­கம் உடனே காண்­பிக்­கப்­ப­டு­கிறது என்­றும் இந்த அனு­ப­வம் பாடப் புத்­த­கங்­களில் கிடைத்­தி­ருக்­காது என்­றும் திவ்யா தெரி­வித்­தார். இத­னால் உல­கப் பிரச்­சி­னை­க­ளுக்கு ஏற்ற வித­மாக இந்­தப் பாடம் இருப்­ப­தாக திவ்யா கூறி­னார்.

அவ்­வாறு அமைந்த ஒரு கணித முறை, கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லின் போக்கு எப்­படி மாறும் என்­ப­தற்­கான சாத்­தி­யங்­க­ளைத் தர­வு­களின் உத­வி­யு­டன் மெய்­நி­கர் தொழில்­நுட்­பத்­தின் மூலம் மாண­வர்­க­ளுக்கு எளி­தா­கப் புரி­யும் வகை­யில் எடுத்­துக்­காட்­டு­வ­தா­கக் கூறி­னார். கொவிட்-19 சூழ­லில் இது­போன்ற கணித மாதி­ரி­கள் நேரத்­தை­யும் உழைப்­பை­யும் மிச்­சப்­ப­டுத்­தும் எனக் கூறி­னார்.

“இந்­தத் தொழில்­நுட்­பங்­க­ளின் வாயி­லாக வெவ்­வேறு முடி­வு­க­ளின் விளை­வு­களை எங்­க­ளால் புரிந்­து­கொள்ள முடி­கிறது. தேவை­யின்றி உணர்ச்­சி­வ­யப்­பட்டு தவ­றான முடி­வு­களை எடுக்­கும் வாய்ப்­பும் இத­னால் குறை­கிறது,” என்­றார். சார்ஸ் போன்ற முன்­னைய நோய்ப்­ப­ர­வ­லு­ட­னும் ஒப்­பிட்­டுக் காட்­ட­வும் இத்­தொ­ழில்­நுட்­பம் உத­வு­வ­தாக அவர் சுட்­டி­னார்.

மெய்­நி­கர் தொழில்­நுட்­பம் வழி­யா­கக் கற்­கும் பாடத்­தின் கடி­னத்­தன்மை குறை­வதை உணர்­வ­தாக மாண­வர்­கள் கூறு­கின்­ற­னர் என இதைக் கற்­பித்து வரும் ஆசி­ரி­யர் டாக்­டர் கீகன் காங், தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

“பாடப்­புத்­தகங்­களில் அச்­சி­டப்­பட்ட படங்­களை மட்­டும் பார்க்­கா­மல் மெய்­நி­கர் சூழ­லில் இவற்­றைக் காணும்­போது பாடங்­கள் மாண­வர்­க­ளுக்கு எளி­தில் புரி­கின்­றன. அத்­து­டன் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் நில­வும் இந்­நே­ரத்­தில் மாண­வர்­க­ளுக்­குத் தடை­யின்றி கற்­பிக்க இந்­தத் தொழில்­நுட்­பம் பயன்­ப­டுத்­தப்­ப­ட­லாம்,” என்று அவர் கூறி­னார். கடந்­தாண்டு இந்­தப் பாடத்­திற்­கு­ரிய வகுப்­பு­கள் முடிந்­தி­ருந்­தா­லும், மாண­வர்­கள் தாங்­கள் கற்­ற­வற்றை கொவிட்-19 கிரு­மித்­தொற்று தொடர்­பில் ஆராய்ந்­த­தாக திவ்யா தெரி­வித்­தார்.

“வெவ்­வேறு அம்­சங்­களில் நிபு­ணத்­து­வம் பெற்ற மாண­வர்­கள், ஒன்­று­சேர்ந்து வெவ்­வேறு கோணங்­க­ளி­லி­ருந்து ஆய்வு செய்­த­னர். அதில் கொரோனா கிரு­மிப் பர­வலை ஆய்வு செய்­வ­தற்­குக் கிட்­டத்­தட்ட ஐந்து திட்­டங்­கள் உரு­வாக்­கப்­பட்­டன,” என்­றார்.

தற்­போது திவ்யா, சில மாண­வர்­க­ளு­டன் என்­யு­எஸ் மருத்­து­வப் பள்­ளி­யு­டன் மற்­றொரு பயிற்­சித்­திட்­டத்­தில் ஈடு­ப­ட்டுள்ளார். நோயா­ளி­க­ளின் தக­வல்­க­ளைப் பதி­வேற்­றம் செய்­யும் தளம் ஒன்றை உரு­வாக்கி அத்­து­டன் முக அடை­யாள மென்­பொ­ருளை இவர்­கள் இணைத்­துள்­ள­னர்.

“குறிப்­பிட்ட ஒரு நோயாளி ஓர் ஆண்டு கழித்­துத் திரும்ப வந்­தா­லும் முக அடை­யா­ளத்­தைக் கொண்டு அவ­ரைப் பற்­றிய தக­வல்­களை உடனே காட்­டி­வி­டும் கரு­வி­யாக இது விளங்­கு­கிறது,” என்­றார். இது­போன்ற பயிற்­சித்­திட்­டங்­களில் சிறப்­பா­கச் செய்­வ­தற்கு சுய­மாக கற்­கும் முனைப்பு தேவைப்­ப­டு­வ­தா­க திவ்யா தெரி­வித்­தார். தனக்கு விருப்­ப­மான துறை­யைத் தேர்ந்­தெ­டுத்து அதில் நிபு­ணத்­து­வத்தை அடை­யும் பொறுப்பு மாண­வ­ரு­டை­ய­து­தான் என்று இந்த மாணவி கூறுகிறார்.

“மதிப்­பெண்­களில் மட்­டும் குறி­யாக இருந்து குறைந்­த­பட்­ச­மான உழைப்­பைச் செலுத்­தி­னோ­மா­னால் அது நமது திற­மைக்கு முட்­டுக்­கட்­டை­யாக இருக்­கும். தன்னை மேம்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என நினைக்­கும் மாண­வ­ரின் அறிவு வளர்ச்சி இறு­தி­யில் பள்ளி கற்­றுக்­கொ­டுப்­ப­தை­விட மிஞ்­சும்” என்­றார் திவ்யா. இத்­த­கைய திட்­டங்­களில் சிக்­கல்­கள் ஏற்­ப­டு­வது இயல்பு எனக் கூறும் இவர், இதற்­காக மன­மு­டைந்து முடங்­கிக் கிடக்­கா­மல் அடுத்து என்ன செய்­வது என்­ப­தைப் பற்றி சிந்­தித்­தி­ட­வேண்­டும் என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!