கொவிட்-19 சூழலில் இணையத்தில் தொடரும் நூலக சேவைகள்

கொவிட்-19 சூழலில் இணையத்தில் தொடரும் நூலக சேவைகள்

2 mins read
ea03e0a5-bb47-417f-aed3-7c321c1d1790
இளையர்கள் திறன்பேசிகளில் இதுபோன்ற மின்நூல்களை வாசித்திடலாம். -

கொவிட்-19 நோய்ப் பர­வலை முறி­ய­டிப்­ப­தற்­கான திட்­டம் இம்­மா­தம் 7ஆம் தேதி நடை­மு­றைக்கு வந்­த­தி­லி­ருந்து அத்­தி­யா­வ­சி­யச் சேவை­கள் தவிர்த்த மற்ற அனைத்­துத் தொழில்­களும் சேவை­களும் முடங்­கிப் போயுள்­ளன. தேசிய நூல­க­மும் பொது நூல­கங்­களும் அவற்­றின் வர­லாற்­றில் முதல்­மு­றை­யா­கத் தங்­க­ளது கத­வு­களை மூடி­யி­ருக்­கின்­றன. நூல­கத்­தின் வழக்­க­மான சேவை­கள் முடங்­கி­யி­ருந்­தா­லும் தொழில்­நுட்­பத்­தின் துணை­கொண்டு வாச­கர்­க­ளுக்கு உதவ அது பல்­வேறு திட்­டங்­களை விரை­வாக அறி­வித்து செயல்­ப­டுத்தி வரு­கிறது. நூல­கத்­தின் தமிழ் மொழிச் சேவை­கள் பிரி­வும் சில புதிய முயற்­சி­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

தமிழ்ப் புத்­தாண்டு தினத்­தி­லி­ருந்து நாளும் ஒரு நூல் என்ற தலைப்­பில் அது தமிழ் மின்­நூல்­களை அறி­மு­கம் செய்து வரு­கிறது. நூல­கத்­துக்கு நேர­டி­யாக வர முடி­யா­விட்­டா­லும் வீட்­டி­லி­ருந்­த­வாறே தங்­க­ளது திறன்­பே­சி­களில் தமிழ் மின்­நூல்­களை இர­வல் வாங்­க­லாம்.

"2000க்கும் மேற்பட்ட தமிழ் மின்­நூல்­களை எங்­க­ளது திரட்­டில் சேர்த்­தி­ருக்­கி­றோம். அவற்றை வாச­கர்­கள் எங்­கி­ருந்­த­வா­றும் இர­வல் பெற்று வாசித்து மகி­ழ­லாம். குறிப்­பாக நாம் வீட்­டில் தங்­கி­யி­ருக்க வேண்­டிய இதுபோன்ற கால­கட்­டங்­க­ளுக்கு சரி­யான தீர்வு மின்­நூல்­கள்," என்று தமிழ் மொழிச் சேவை­கள் பிரி­வின் தலை­வர் திரு அழ­கிய பாண்­டி­யன் கூறி­னார்.

மின்­நூல்­களில் உள்ள இன்­னொரு அனு­கூ­லம், 21 நாள் இர­வ­லுக்­குப் பிறகு தானா­கவே அந்த நூல் திரும்­பிச் செலுத்­தப்­பட்டு விடும். எனவே மறதி என்­ப­தற்­கும் அப­ரா­தம் செலுத்­து­வ­தற்­கும் தேவை­யி­ராது என்­றும் அவர் கூறி­னார். தேசிய நூலக வாரி­யத்­தின் திரட்­டில் தமிழ் மின்­நூல்­க­ளை­யும் சேர்த்து சுமார் 725,000 மின் நூல்­கள் உள்­ளன. மேலும் 'LyndaLibrary' என்ற வச­தி­யின் மூலம் பயிற்­சிக் காணொ­ளி­களை வாச­கர்­கள் பயன்­ப­டுத்­திக் கொள்ள முடி­யும். வீட்­டில் தங்­கி­யி­ருக்­கும் நேரத்­தில் அவர்­கள் தங்­க­ளுக்­குப் பிடித்­த­மான துறை­யில் பயிற்­சிக் காணொ­ளி­க­ளைப் பார்த்து பலன் பெற­லாம்.