இணையம் மூலம் வெற்றி காணும் இளையர்கள்

இணையம் மூலம் வெற்றி காணும் இளையர்கள்

2 mins read
dda9bb9e-2edc-4b09-a76d-f8f1a68e66bd
திரு­மதி ராஜ­லட்­சுமி ஜெய­பா­லன். வலது படம்:  கணினி தொழில்­நுட்­ப­ரா­கப் பணி­பு­ரி­யும் வினோ­தினி கலைக்­கண்­ணன் -

விருந்­தோம்­பல் துறை­யில் தள­வாட நிர்­வா­கி­யாக பணி­யாற்றி வந்த திரு­மதி ராஜ­லட்­சுமி ஜெய­பா­லன் (படம்), தமது இரண்டு மகள்­க­ளைப் பார்த்­துக்­கொள்­வ­தற்­காக வேலை­யைக் கைவிட்­டார். இருந்­த­போ­தும் தமக்கு தெரிந்த 'ரெய்க்கி' பயிற்­சி­யைப் பிற­ருக்கு காணொளி உரை­யா­டல் மூலம் இவர் வழங்­கு­கி­றார்.

"வாழ்க்­கை­யில் தங்­க­ளுக்கு பிடிக்­காத அல்­லது ஒத்­து­வ­ராத பாதை­யில் செல்­லும் பல­ருக்கு பதற்­றம் ஏற்­ப­டு­கிறது. காலப்­போக்­கில் அவர்­கள் இந்த உணர்­வு­க­ளைத் தங்­கள் உள்­ளத்திற்­குள் புதைத்­து­வி­டு­கின்­ற­னர்.

"இப்பிரச்சினையைக் களை­யும் வித­மாக இந்­தப் பாரம்­ப­ரிய மனோ­தத்­து­வக் கலையை நான் சொல்­லித் தரு­கி­றேன்," என்று திரு­மதி ராஜ­லட்­சுமி கூறி­னார்.

கொவிட்-19 குறித்த அச்­சங்­களை எதிர்­கொள்­வ­தற்­காக எட்டு முதல் 60 வயது வரை­யி­லான தனி­ந­பர்­க­ளுக்கு இணை­யம்­வழி இவர் கற்­றுத் தரு­கி­றார். "ஒரே நேரத்­தில் ஒரு­வ­ருக்கு மட்­டும்­தான் கற்­றுத் தரு­வேன். தங்­கள் வீட்­டி­லி­ருந்­த­வாறு கற்­ப­தால் பங்­கேற்­பா­ளர்­களுக்­குச் சௌக­ரி­ய­மாக உள்­ளது. இதில் நீக்­குப்­போக்­கும் உள்­ளது," என்று இவர் சொன்­னார்.

கிருமி பர­வும் சூழ­லில் வீட்­டி­லி­ருந்து கற்­பது பல­ருக்­குப் புதி­தாக இருப்­ப­தால் பல சிர­மங்­கள் இருக்­கத்­தான் செய்­யும் என திரு­மதி ராஜ­லட்­சுமி, 38, கூறி­னார்.

இருந்­த­போ­தும், "விண்­மீன்­கள்­கூட தூரத்­தி­லி­ருந்து மிளிர்கின்றன. அதே­போல மனதை வளப்­ப­டுத்­தும் தக­வல்­களை வீட்­டி­லி­ருந்து கற்­றா­லும் அதன் மூலம் நன்மை அடைய முடி­யும்," என்­றார் அவர்.

கணினி தொழில்­நுட்­ப­ரா­கப் பணி­பு­ரி­யும் வினோ­தினி கலைக்­கண்­ணன் (படம்), வெளி­யி­டங்­க­ளுக்­குச் சென்று தனி­யாக பொழு­தைக் கழிப்­பதை வழக்­க­மா­கக் கொண்­டி­ருந்­தார். கொவிட்-19 நோய்ப் பர­வலை முறி­ய­டிக்­கும் திட்­டம் நடப்­பில் இருந்த காலத்­தில் வீட்­டில் முடங்­கி­யி­ருப்­ப­தால் என்ன சிர­மம் ஏற்­ப­டப் போகிறது என்று நினைத்த வினோ­தினி, போகப் போகத்­தான் அதன் தாக்­கத்தை உணர ஆரம்­பித்­தார்.

வேலைக்­கும் சொந்த வாழ்க்­கைக்­கும் இடையே உள்ள எல்­லைக்­கோடே தெரி­ய­வில்லை என்­கி­றார் இவர். வாழ்க்கை முறை­யில் ஏற்­பட்­டுள்ள பெரும் மாற்­றத்­தைச் சமா­ளிக்க தடு­மா­றிய தமக்கு இனம் புரி­யாத பதற்­ற­மும் மனஅழுத்­த­மும் ஏற்­பட்­ட­தா­கக் கூறிய இவர், இத­னைக் கையாள 'சைக்­கோ­தெ­ரப்பி' எனப்­படும் மன­நல சிகிச்­சைப் பாடத்தை இணை­யம்­வழி கற்க முடிவு செய்­த­தா­கத் தெரி­வித்­தார்.

"எனது மனச்­சு­மை­யைப் பற்றி நான் என் நண்­பர் ஒரு­வ­ரி­டம் கூறி­ய­போது இந்த இணைய வகுப்­பில் சேர என்னை அவர் ஊக்­கு­வித்­தார்," என்று குமாரி வினோ­தினி, 30, கூறி­னார்.

இந்த வகுப்­பில் சிங்­கப்­பூ­ரி­லுள்ள மாண­வர்­கள் மட்­டு­மின்றி ஆஸ்­தி­ரே­லியா, மலே­சியா உள்­ளிட்ட நாடு­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளு­டன் இரு­வழி தொடர்பு அம்­சங்­கள் மூலம் இணை­வ­தால் தமது கண்­ணோட்­டம் விரி­வ­டை­வ­தா­கக் கூறு­கி­றார் வினோ­தினி. இதன் பிற­கும் இணை­யம்­வழி கூடு­த­லாக அம்­சங்­க­ளைக் கற்­றுக்­கொள்ள முடி­வெ­டுத்­துள்­ள­தா­கக் கூறிய இவர், போட்­டித்­தன்­மை­யையும் நிச்­ச­ய­மற்ற சூழ­லை­யும் எதிர்­கொள்­வ­தற்கு இதுவே முதல் படி என்­றார்.

திரு­மதி ராஜ­லட்­சுமி ஜெய­பா­லன். வலது படம்: கணினி தொழில்­நுட்­ப­ரா­கப் பணி­பு­ரி­யும் வினோ­தினி கலைக்­கண்­ணன்