பிடித்ததைப் படித்ததால் முன்னேற்றம் சரியான நேரத்தில் சரியாக முடிவெடுத்து சாதித்த மாணவியர்

பிடித்ததைப் படித்ததால் முன்னேற்றம் சரியான நேரத்தில் சரியாக முடிவெடுத்து சாதித்த மாணவியர்

3 mins read
a5fa7494-266a-42fd-9a09-e03e9a87e2eb
-

சரி­யான நேரத்­தில் எடுக்­கப்­படும் முடி­வு­கள் வாழ்க்­கை­யில் நல்ல திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­தும் என்­ப­தற்கு தெமா­செக் பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யில் ஆரம்­ப­கால பாலர்­ப­ருவத் துறை­யில் பட்­ட­யப் படிப்பை முடித்த டெனிஸ் ஹேமா ராயன் சிறந்த உதா­ர­ண­மா­கத் திகழ்­கி­றார்.

பல­துறை தொழிற்­கல்­லூ­ரிக்கு முன்­பாக தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் (காலேஜ் சென்ட்­ரல் கிளை) கணக்­கி­யல் துறை­யில் டெனிஸ் சேர்ந்­தார்.

ஆனால், இத்­து­றை­யில் சேர்ந்த இரண்­டா­வது வாரத்­தி­லேயே இந்­தப் பாடம் தமக்­குச் சரிப்­பட்டு வராது என உணர்ந்த இவர், ஆரம்­ப­கால பாலர்­ப­ருவ துறைக்கு மாற முடிவு செய்­தார்.

தொடக்­கப்­பள்ளி பரு­வத்­தி­லி­ருந்தே ஆசி­ரி­யர் பணி­யில் தமக்கு ஆர்­வம் இருந்­த­போ­தும் உள­வி­யல் துறை­யில் சேர­லாம் என அப்­போது தாம் நினைத்­தி­ருந்­த­தாக இவர் தெரி­வித்­தார்.

"ஆனால் சாதா­ரண நிலைத் தேர்வு முடி­வு­கள் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இல்லை. எனினும் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் (ஐடிஇ) பயில்வதற்குத் தகு­தி­பெற்­றேன். மன­தில் குறிக்­கோள் எது­வு­மின்றி கணக்­கி­யல் பாடத்­தில் சேர்ந்­தேன்," என்று டெனிஸ் நினை­வு­கூர்ந்­தார்.

அந்­நே­ரத்­தில்­கூட இது­தான் தமக்­குச் சரி­யான துறையா என்ற குழப்­பம் அவருக்கு ஏற்­பட்­டது.

"எனது திற­மைக்­கேற்ற படிப்பு இது எனக் கூறி எனது குடும்­பத்­தி­னர் என்னை ஊக்­கப்­ப­டுத்­தி­னர். இருந்­த­போ­தும் சரியா தவறா என்ற சிறு குழப்பத்துடன் தொடர்ந்து படித்­தேன். 'கார்ப்பேடியம் ஸ்கூல்­

ஹ­வுஸ்' பாலர் பள்­ளி­யில் ஆறு மாத­கால பயிற்­சித்­திட்­டம் ஒன்றை முடித்த பின்­னர்­தான் எந்­தத் துறை­யில் எனக்கு விருப்­பம் உள்­ளது என்­பது குறித்த தெளிவு பிறந்தது," என்று கூறி­னார் டெனிஸ், 23.

ஐடிஇ கல்­வியை முடித்த பின்­னர் பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யில் சேர்ந்த டெனிஸ், ஒரே துறை­யில் படித்­த­தால் பாடங்­க­ளின் சுமையை அவ்­வ­ள­வாக உண­ர­வில்லை எனத் தெரி­வித்­தார்.

'ஜிபிஏ' மதிப்­பீட்டு முறை­யின்­கீழ் 4க்கு 3.33 புள்­ளி­க­ளைப் பெற்ற டெனிஸ், கொவிட்-19 கிரு­மித்­தொற்று நில­வ­ரத்­தின்­போது பாலர் பள்ளி ஆசி­ரி­ய­ராக வீட்­டி­லி­ருந்­த­

ப­டியே மாண­வர்­க­ளுக்­குக் கற்­றுக்­கொ­டுத்து வந்­தார். பிள்­ளை­க­ளு­டன் நேரில் இருந்து கற்­பிப்­ப­தையே தாம் பெரி­தும் விரும்­பு­வ­தா­கக் கூறிய இவர், தற்­போது கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டி­ருப்­பது குறித்து மகிழ்ச்சி தெரி­வித்­தார்.

நன்­யாங் பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யைச் சேர்ந்த ஐஸ்­வ­ர்யா ரவீந்­தி­ரன், டெனிசைப் போலவே உரிய நேரத்­தில் சரி­யான முடிவை எடுத்­த­தால் இவர் கல்­வி­யில் முன்­னே­று­ வ­தற்­கான வாய்ப்பு கிட்­டி­யது.

இவர் உயர்­நிலை 4ல் பயின்­று­கொண்­டி­ருந்­த­போது மாண­வர்­களை முன்­கூட்­டியே பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யில் சேர்க்­கும் திட்­டத்­திற்கு ஐஸ்­வ­ர்யா விண்­ணப்­பித்­தி­ருந்­தார். நேர்­மு­கத் தேர்வு சுற்­று­கள் பல­வற்­றைக் கடந்து இறு­தி­யில் அந்­தத் திட்­டத்­திற்கு இவர் தகு­தி­பெற்­றார்.

பள்­ளி­யில் இணைப்­பாட நட­வ­டிக்­கை­க­ளின் மீது அதிக ஆர்­வம் காட்­டி­னா­லும் அதே அள­வுக்கு ஈடு­பாட்டை இவ­ரால் கல்­வி­யில் காட்ட முடி­ய­வில்லை. குறிப்­பாக, மானு­ட­வி­யல் பாடத்­தில் சிறப்­பாக செய்ய முடி­யா­மல் போனது இவ­ருக்கு வருத்­தம்.

அறி­வி­யல் பாடம் மீது அதிக நாட்­டம் கொண்ட தமக்கு பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யின் கல்வி­ முறை தமக்­குப் பொருத்­த­மாக அமைந்­த­தாக ஐஸ்­வ­ர்யா தெரி­வித்­தார்.

"நான் தொடர்ந்து இணைப்­பாட நட­வ­டிக்­கை­களில் கலந்து­கொண்டு மற்ற மாண­வர்­களு­டன் பழ­கு­வேன். இருந்­த­போ­தும் என் கல்வி பாதிக்­கப்­ப­ட­வில்லை. அதில் நான் சிறப்­பா­கத்­தான் செய்­தேன்," என்று இவர் கூறி­னார்.

நேனோ தொழில்­நுட்­பம் மற்­றும் பொருள் அறி­வி­யல் (Nanotechnology and Material Sciences) துறை­யில் பட்­ட­யக் கல்­வியை முடித்­துள்ள ஐஸ்வர்யா, இறு­தி­யில் 4க்கு 3.55 ஜிபிஏ புள்­ளி­க­ளைப் பெற்­றார். தமது வெற்­றிக்­குப் பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யின் விரி­வு­ரை­யா­ளர்­கள் உறு­து­ணை­யாக இருந்­த­தாக இவர் தெரி­வித்­தார்.

'பிஎன்ஜி' நிறு­வ­னத்­தில் வேலைப்­ப­யிற்­சித் திட்­டத்­தில் சிறப்­பா­க­வும் செய்து அங்கு விருது பெற்ற ஐஸ்­வர்யா, நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பொருள் அறி­வி­யல் துறைக்கான பொறி­யி­யல் படிப் பில் சேர­ இருக்­கி­றார்.

பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் கிடைத்த வாய்ப்பை நன்­றாக பயன்­ப­டுத்­தி­ய­தால் தாம் இன்று நல்ல நிலை­யில் இருப்­பதை எண்ணி மகிழ்­வ­தாக இவர் கூறி­னார்.