வலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை 

தந்தையின் மரணம் உயர்­நிலை மூன்­றில் படித்துக்கொண்டிருந்த சிந்­தியாவின் வாழ்க்­கை­யையே புரட்­டிப்­போட்­டது. அக்கா, மூளை வளர்ச்சி குன்­றிய அண்­ணன் இருவருடன் சிந்தியாவையும் கவ­னித்­துக்­கொள்­ளும் முழுப் பொறுப்­பும் தாயாரின் தலையில் விழுந்தது.

“அந்­தச் சம­யத்­தில் என் குடும்­பம் அடைந்த வேத­னை­யைச் சொல்ல வார்த்­தை­கள் இல்லை. படிப்­பில் கவ­னம் செலுத்­து­வது சவால்­மிக்கதாக இருந்­தது,” என்­றார் 21 வயது சிந்­தியா சிவ­குரு.

தந்­தை­யின் இறப்பினால் மன­மு­டைந்து போன அம்மா மார்­க்ரெட் மேரிக்­கா­க கல்­வி­யில் சிறக்க உறுதிபூண்­டார் சிந்தியா. “என் வெற்றியே அம்­மா­வுக்கு மிகப் பெரிய ஆறு­தலாக இருக்கும் என்­பதை உணர்ந்­தேன். நான் என் வாழ்க்­கையை வீண­டிப்­பதை என் தந்­தை­யும் விரும்­பி­யி­ருக்­க­மாட்­டார். எனவே, உயர்­நிலை மூன்­றில் இறு­தித்­தேர்­வுக்கு கடு­மை­யாக உழைத்­தேன்,” என்­றார் அவர்.

பாயா லேபார் மெத்­த­டிஸ்ட் உயர்­நிலை பள்­ளி­யில் ‘என்‘ நிலை தேர்­வில் பத்து புள்­ளி­க­ளு­டன் சிறந்த ­தேர்ச்சி பெற்ற சிந்தியா, ரி­பப்­ளிக் பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யில் அடிப்­ப­டைக் கல்­வித் திட்­டத்­தின் கீழ் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார். அங்கு தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் படிப்பை முடித்து, அவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பட்டப் படிப்பை மேற்கொள்ளவுள்ளார்.

“குடும்­பச் செல­வு­க­ளைச் சமா­ளித்­து, எங்­க­ளைப் பொறு­மை­யு­டன் நன்கு கவ­னித்து வரும் என் அம்மா எனக்கு ஒரு முன்­னு­தா­ர­ணம். என் அக்கா சிறு வய­தி­லி­ருந்தே எனக்கு ஒரு வழி­காட்­டி­யாக இருந்து வரு­கி­றார். முக்­கி­ய­மான முடி­வு­கள் எடுக்­கும்­போது எனக்கு சரி­யான ஆலோ­சனை வழங்­கு­வார்,” என்­றார் சிந்­தியா.

அறுபது வயதாகும் சிந்­தி­யாவின் அம்மா ஒரு தொழிற்­சாலை துப்­பு­ர­வா­ளராகப் பணிபுரிகிறார். மன­நல குறை­பா­டு­டைய 39 வயது மக­னை­யும் உடல்­ந­ல­மற்ற தாயா­ரை­யும் அவர் கவ­னித்­து­வ­ரு­கி­றார். சிந்­தி­யா­வின் 28 வயது அக்கா தற்­போது துணை போலிஸ் படை­யில் பணி­பு­ரி­கி­றார்.

குடும்ப பாரத்­தைக் குறைக்க, பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பயி­லும்போது பல இடங்­களில் பகுதி நேர வேலை­க­ளை­யும் பார்த்து வந்­தார் சிந்­தியா.

அவ­ரது கல்விக்கு அர­சாங்­கம், தேவா­ல­யங்­கள், பள்ளி ஆகி­ய­வை நிதி உத­வி­க­ளை­யும் நன்­கொ­டை­க­ளை­யும் வழங்கி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார் சிந்­தியா.

“எதிர்­கா­லத்­தில் நான் நல்ல நிலை­யில் இருக்­கும்­போது என்னை போன்ற வச­தி­கு­றைந்த பிள்­ளை­க­ளுக்கு உதவ விரும்­பு­கி­றேன். சீருடை, புத்­த­கங்­கள் போன்ற அத்­தி­யா­வ­சிய பொருட்­களை வாங்­கு­வ­தற்­குக்­கூட சிர­மப்­பட்ட எனக்கு, வச­தி­கு­றைந்த பிள்­ளை­க­ளின் சிர­மம் புரி­யும்,” என்று கூறி­னார்.

மக்­கள் தொடர்பு அதி­கா­ரி­யாக வேண்­டும் என்ற தன் விருப்­பத்­திற்கு எப்­போ­துமே கல­க­லப்­பாக இருக்கும் தனது இயல்பு பெரி­தும் உத­வும் என்­று நம்புகிறார் சிந்தியா.

தைரி­ய­மாக பேசும் தன்­மை­யு­டைய இவர் பல மேடை நிகழ்ச்­சி­களில் பங்கேற்று நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார். 2017ஆம் ஆண்டில் ரி­பப்­ளிக் பல­துறை தொழிற்கல்­லூ­ரி­யின் மாண­வர் மன்­றத்­தின் தலைமை குழு­வில் இடம்பெற்ற சிந்தியா, அறி­முக முகாம் போன்ற பெரிய அள­வில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்துள்ளார்.

சிந்­தியா சிறந்த ஊடக உள்­ள­டக்க தயா­ரிப்­பா­ள­ரா­க­வும் உரு­வெ­டுத்­தி­ருக்­கி­றார். ரி­பப்­ளிக் பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யின் செய்­தித்­தா­ளில் துணை மின்­னி­லக்­கச் செய்தி ஆசி­ரி­ய­ராக, பல்­வேறு சமூக ஊட­கங்­களை நிர்­வ­கிப்­ப­தற்­கும் புகைப்­ப­டங்­க­ளைத் தொகுத்து வெளி­யி­டு­வ­தற்­கும் உத­வி­னார்.

“எந்­தத் துறையைத் தேர்ந்­தெடுத்­தா­லும் அதில் சிறந்து விளங்க வேண்­டும் என்று என் அப்பா கூறு­வார்,” என்ற சிந்­தியா, சமூ­கத்­திற்கு உதவி புரிந்து, தன் பெற்­றோ­ரைப் பெரு­மை­ய­டையச் செய்­ய­வேண்­டும் என்ற இலக்கு­டன் பல்­க­லைக்­க­ழக பய­ணத்தை துவங்க ஆர்­வத்­து­டன் காத்­தி­ருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!