கவிதைகளைக் குறும்படங்களாக வழங்கிய ‘திரைக்கவி’

- ஸ்ரீ.ஸாந்­தினி -

கொவிட்-19 கிரு­மித்­தொற்று நில­வ­ரத்­தால் ஆண்­டு­தோ­றும் ஏப்­ரல் மாதம் நடக்­கும் தமிழ்­மொழி விழா நிகழ்ச்­சி­களில் சில­வற்றை மெய்­நி­கர் பாணி­யில் நடத்த, சில அமைப்­பு­களும் குழுக்­களும் முன்­வந்­தன.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தமிழ் இலக்­கிய மன்­றம் கடந்­தாண்டு சிங்­கப்­பூர் தேசிய அரும்­பொ­ரு­ள­கத்­தில் இளை­யர்­க­ளுக்­காக நடத்­திய ‘திரைக்­கவி’ குறும்­பட போட்­டியை இம்­முறை இணை­யத்­தில் அரங்­கேற்­றி­யது.

இளை­யர்­க­ளின் தமிழ் ஆர்­வத்­தைத் தூண்டி உள்­ளூர் தமிழ் இலக்­கி­யத்தை அவர்­க­ளி­டம் கொண்டு போய் சேர்ப்­பது இப்­போட்­டி­யின் நோக்­கம். வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஆத­ர­வில் நடத்த இப்­போட்டி, உள்­ளூர் எழுத்­தா­ளர் திரு க.து.மு இக்­பா­லின் ‘இரு­ளில் வெளிச்­சம்’ கவிதை நூல் தொகுப்பை மைய­மா­கக் கொண்­டது.

போட்­டி­யா­ளர்­கள் அக்­க­வி­தைத் தொகுப்­பி­லி­ருந்து தங்­க­ளுக்கு விருப்­ப­மான ஒரு கவி­தை­யைத் தேர்ந்­தெ­டுத்து, அதனை மைய­மா­கக் கொண்டு ஒன்­றரை மாதங்­க­ளுக்­குள் குறும்­ப­டம் ஒன்­றைத் தயா­ரிக்க வேண்­டும். குறும்­பட உரு­வாக்­கத்­திற்கு முன், போட்டி விவ­ரங்­கள் அவர்­க­ளுக்கு விளக்­கப்­பட்­ட­தோடு பிர­பல உள்­ளூர் இயக்­கு­நர் முகம்­மது யாசிர், அவர்­க­ளு­டன் குறும்­ப­டம் தயா­ரிப்­ப­தற்­கான உத்­தி­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டார்.

பல­து­றைத் தொழிற்­கல்­லூரி மற்­றும் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த மூன்று குழுக்­கள் ‘மடல்’, ‘தொடு வானம்’, ‘பாத­ரட்சை’ ஆகிய தலைப்­பு­க­ளைக் கொண்ட குறும்­ப­டங்­க­ளைப் போட்­டிக்­காக சமர்ப்­பித்­தன.

கடந்த மே 16ஆம் தேதி, போட்­டி­யில் பங்­கெ­டுத்த குறும்­பட இயக்­கு­நர்­கள் ‘திரை­யில் தமிழ்’ எனும் தலைப்­பி­லான இணை­யக் கலந்­து­ரை­யா­ட­லில் ஈடு­பட்­ட­னர். அதில் போட்­டி­யா­ளர்­கள் தங்­க­ளது குறும்­ப­டக் கதை­களை நான்கு உள்­ளூர் ஒளி­வ­ழித் துறை நிபு­ணர்­க­ளி­டம் விளக்­கி­னர். உள்­ளூர் திரைப்­ப­டத் துறை­யில் தமிழ்­மொ­ழி­யின் நிலை­யைப் பற்றி அந்த நிபு­ணர்­களும் கருத்­து­க­ள் பகிர்ந்­து­கொண்­ட­னர். இறு­தி­யில், எழுத்­தா­ளர் திரு க.து.மு இக்­பா­லின் ‘இரட்­டை­யர்’ என்ற கவி­தையை மைய­மா­கக் கொண்ட 4 நிமிட குறும்­ப­ட­மான ‘பாத­ரட்சை’ குழு­வி­ன­ருக்கு முதல் பரிசு வழங்­கப்­பட்­டது.

“இரட்­டை­யர் கவிதை கால­ணி­யைப் பற்றி இருந்­த­தால் சற்று வித்­தி­யா­ச­மாக இருக்­கி­றதே என்று நினைத்து அதனை தேர்ந்­தெ­டுத்­தோம். திரு இக்­பா­லின் கவி­தை­யைக் குறும்­பட வடி­வில் காட்ட முடிந்­த­தில் பெரு­மி­தம் கொள்­கி­றோம்,” என்று தெரி­வித்­தார் வெற்­றி­யா­ளர் குழு­வான ‘நச்­சுன்னு பிலிம்ஸ்’ உறுப்­பி­னர் திரு செம்­பி­யன் சோம­சுந்­த­ரம், 27.

கூடு­தல் செய்தி: ப.பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!