ஒரே ஓர் இணையத்தளம்; பல்வேறு உபகாரச் சம்பளங்கள்

உயர் கல்வி நிலை மாணவர்களுக்கான ‘ஸ்காலர்ஸ் சாய்ஸ் 2020’ இணையத்தளம் இம்மாதம் தொடங்கப்பட்டுள்ளது.

பொது, தனியார் துறை நிறுவனங்கள் வழங்கும் பலதரப்பட்ட உபகாரச் சம்பளங்கள் குறித்து ஒரே தளத்தில் தெரிந்துகொள்ள இந்த இணையத்தளம் வகை செய்கிறது.

‘ஏஸ்டார்’, தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம், தற்காப்பு அமைச்சு, உள்துறை அமைச்சு, சிங்கப்பூர் போலிஸ் படை போன்ற அரசாங்க, தனியார் அமைப்புகள் 50க்கும் அதிகமான உபகாரச் சம்பளங்களை வழங்குகின்றன. உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோரை ஊக்கமளிக்கும் காணொளித் தொடர் ஒன்றும் இந்த இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. முன்னாள் கல்விமான்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் இந்தக் காணொளித் தொடரில் இடம்பெறுகின்றனர்.

மேல் விவரங்களுக்கு www.scholarschoice.com.sg எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லலாம்.