சாதிக்க துடிக்கும் ஷக்தி

சாதிக்க துடிக்கும் ஷக்தி

3 mins read
2aa5f22f-ad40-45cd-90b6-b8db12391709
தமது தாயார் திருவாட்டி தீபாவுடன் குமாரி சுந்தரம் மோகன் ஷக்தி (வலது). படம்: திமத்தி டேவிட் -

ஒரு­வர் குற்­ற­வா­ளி­யாக இருந்­தா­லும் அவர் திருந்தி வாழ வழி வகுக்க வேண்­டும் என்­ப­தில் உறுதி கொண்­ட­வர் 19 வயது குமாரி சுந்­த­ரம் மோகன் ‌‌ஷக்தி.

இவ­ருக்­குப் பொதுச் சேவை ஆணை­யத்­தின் (பிஎஸ்சி) கௌர­வ­மிக்க சிங்­கப்­பூர் போலிஸ் படை உப­கா­ரச் சம்­ப­ளம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாண்­டின் பிஎஸ்சி எனப்­படும் பொது சேவை ஆணை­யத்­தின் உப­கா­ரச்­சம்­ப­ளத்­தைப் பெற்ற 23 பேரில் ஷக்­தி­யும் ஒரு­வர்.

சிங்­கப்­பூர் போலிஸ் படை­யில் பணி­யாற்ற விரும்­பும் ஆர்­வ­முள்ள இளை­ஞர்­க­ளுக்­குத் தகுதி அடிப்

படை­யில் இந்த உப­கா­ரச் சம்­ப­ளம் வழங்­கப்­ப­டு­கிறது.

கிட்­டத்­தட்ட மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு நிகழ்ந்த சம்­ப­வம் ஒன்று போலிஸ் படை­யில் சேர வேண்­டும் என்ற எண்­ணத்தை ஷக்­தி­யின் மன­தில் விதைத்­தது.

தமது வீட்­டில் ஒரு பிரச்­சினை நில­வி­ய­போது போலி­சார் விரைந்து வந்து வீட்­டி­லுள்ள தமது குடும்ப உறுப்­பி­னர்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்­த­தாக அவர் தமிழ் முர­சி­டம் பகிர்ந்­து­கொண்­டார்.

அது­மட்­டு­மல்­லாது, புலனாய்வு அதி­காரி ஒரு­வர் தமது தனிப்­பட்ட தொடர்பு எண்ணை கொடுத்து, உதவி தேவைப்­பட்­டால் தம்மை தொடர்புகொள்­ளு­மாறு கூறி­யது ‌‌தமது மனதை நெகி­ழச் செய்­த­

தாக ஷக்தி கூறி­னார்.

இது­போன்ற பணி­யில்­தான் ஈடு­பட வேண்­டும் என்று அன்று அவர் முடி­வெ­டுத்­தார். இவர் விரைவில் யேல்-என்­யு­எஸ் கல்­லூ­ரி­யில் உள­வி­யல் துறை­யில் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்ள இருக்­கி­றார்.

"ராஃபிள்ஸ் பெண்­கள் பள்­ளி­யில் பயி­லும்­போது எனது நண்­பர்­களில் சிலர் மன அழுத்­தத்­தா­லும் மனச் சோர்­வா­லும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

"அவர்­க­ளது மன­நி­லை­யைப் புரிந்­து­கொண்டு உத­வ­வேண்­டும் என்ற அக்­க­றை­யோடு இதன்

தொடர்­பில் இணை­யத்­தில் ஆராய்ந்­தேன். மன­த­ள­வில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­குத் தகுந்த ஆத­ரவு வழங்க நான் மேற்­கொள்ள

இருக்­கும் பட்­டப்­ப­டிப்பு உத­வும்," என்­றார் ஷக்தி.

மேலும் தமது பணி­யில் சந்­திக்­க­வி­ருக்­கும் பல­த­ரப்­பட்ட நபர்­க­ளின் மன­நி­லையை இன்­னும் ஆழ­மா­கப் புரிந்­து­கொள்ள இது வழி­வ­குக்­கும் என்று அவர் நம்­பு­கி­றார்.

"பொது­வாக சிங்­கப்­பூர் போலிஸ் படை உப­கா­ரச் சம்­ப­ளத்­தைப் பெறும் பெண்­க­ளின் எண்­ணிக்கை மிக­வும் குறைவு. சீரு­டைப் பிரி­வில் சேவை செய்­யும் வாய்ப்பு கிடைத்­தி­ருப்­ப­தைப் பாக்­கி­ய­மா­கக் கரு­து­கி­றேன்," என்று கூறி­னார் ‌‌ஷக்தி.

தமது வாழ்க்­கை­யில் பக்கபல­மாக இருக்­கும் அவ­ரது தாயார், எந்த பிரச்­சினை வந்­தா­லும் படிப்­பில் கவ­னம் சித­றா­மல் இருப்­பது முக்­கி­யம் என்­பதை எப்­போ­துமே ‌‌தமக்கு வலி­யு­றுத்­தி­ய­தாக ஷக்தி தெரி­வித்­தார். இந்த உப­கா­ரச் சம்­ப­ளத்­திற்கு விண்­ணப்­பிக்­க­வும் அவர் தான் ‌‌ஷக்­தியை ஊக்­கு­வித்­தார்.

எதிர்­கா­லப் பணிக்­குத் தம்­மைத் தயார்­ப­டுத்­திக்­கொள்ள உடற்­பயிற்சிக் கூடத்­தில் ஷக்தி அடிக்­கடி பயிற்சி செய்து வரு­கி­றார்.

தமது பட்­டப்­ப­டிப்­பைத் துவங்க ஆர்­வத்­தோடு காத்­தி­ருக்­கும் ஷக்தி அண்­மை­யில் தனது அடிப்­படை ராணு­வப் பயிற்­சியை மேற்­கொண்­டார். அங்கு அவரை தவிர மற்ற அனை­வ­ரும் சிங்­கப்­பூர் ஆயு­தப் படையைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­த­னர். அங்கு வய­தி­லும் அவர்­தான் ஆக இளை­ய­வர்.

"முத­லில் எனக்கு பய­மா­க­வும் பதற்­ற­மா­க­வும் இருந்­தா­லும் எங்­க­ளுக்­குக் கொடுக்­கப்­பட்ட பயிற்­சி­களைச் செய்­த­போது உற்­சா­க­மாக இருந்­தது. அது ஒரு புது­வித அனு­பவம். குறிப்­பாக, துப்­பாக்கிச் சுடும் பயிற்சி மிக சுவா­ர­சி­ய­மாக இருந்­தது," என்று கூறி­னார் ஷக்தி.

"எனது வாழ்க்­கை­யின் பல கட்­டங்­களில் பலர் எனக்கு உத­வி­உள்­ள­னர். பல சவால்­க­ளை­யும் சிர­மங்­க­ளை­யும் துணிச்­ச­லு­டன் எதிர்­கொள்ள எனக்கு தைரி­யத்­தை­யும் தந்­துள்­ள­னர். தோள் கொடுத்­த­வர்­களை நினை­வில் கொண்டு ஒரு சிறந்த போலிஸ் அதி­கா­ரி­யாக சமூ­கத்­திற்­குப் பங்

களிக்க விரும்­பு­கி­றேன்," என்று பெரு­மி­தத்­து­டன் கூறி­னார் ஷக்தி.

குற்­ற­வி­யல் உள­வி­யல் அல்­லது தட­ய­வி­யல் உள­வி­யல் தொடர்­பாக மேற்­கொண்டு படிப்­ப­தும் இவ­ரது லட்­சி­யம்.