தேசத்தை ஒன்றிணைக்கும் இசைப் படைப்பு

2 mins read
a499ecc5-3527-4659-bc86-8c4ea2159bb6
(இடமிருந்து) புல்லாங்குழல் இசைக்கலைஞர் ராகவேந்திரன் ராஜசேகரன், தபலா இசைக்கலைஞர் கமல் பென்ஸரா, வயலின் இசைக்கலைஞர் குமாரி ஷரண்யா.படம்: திரு கமல் பென்ஸரா -

இந்து இளங்­கோ­வன்

இனம், மொழி, சமயம் பாரா­மல் அனை­வ­ரை­யும் ஒன்­றி­ணைக்­கும் தன்மையை இசை கொண்­டுள்ளது.

அவ்­வ­கை­யில் தேசிய தினத்தை முன்­னிட்டு இந்­திய மர­பு­டைமை நிலை­யம், மலாய் மர­பு­டைமை நிலை­யம், சன் யாட் சென் நன்­யாங் நினைவு மண்­ட­பம் ஆகிய சிங்­கப்­பூ­ரின் மூன்று மர­பு­டைமை நிலை­யங்­களும் 'வீ ஆர் சிங்­கப்­பூர்' என்ற பிர­பல தேசிய தினப் பாடலைப் பாரம்­ப­ரிய இசை­யில் படைக்­கும் காணொ­ளி­களை வெளி­யிட்­டுள்­ளன.

உள்­ளூர் இசைக் கலை­ஞர்­களைக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட இந்த இசைக் காணொ­ளி­க­ளுக்கு சமூக ஊட­கங்­களில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

இந்­திய மர­பு­டைமை நிலையத்தின் ஏற்­பாட்­டில் கர்நாடக, இந்­துஸ்தானி இசை மெட்­டில் படைக்­கப்­பட்ட இக்­கா­ணொ­ளி­யில் மூன்று இந்­திய கலை­ஞர்­கள் இடம்பெற்றுள்ளனர்­.

'வீ ஆர் சிங்­கப்­பூர்' என்ற பாடலை அனை­வ­ரும் ரசிக்­கும் வண்­ணம் வார்த்­தை­கள் இல்­லா­மல் ஒரு இசைக் கோர்­வை­யா­கப் படைத்து நாட்­டின் பிறந்­த­நாள் கொண்­டாட்­டத்­திற்கு மேலும் சிறப்பு சேர்த்­துள்­ள­னர்.

காணொ­ளி­யில் ராக­வேந்­தி­ரன் ராஜ­சே­க­ரன் புல்­லாங்­கு­ழல் வாசித்து மனதை இதப்­ப­டுத்த, திரு கமல் பென்­ஸரா தபலா வழி உற்­சா­கம் எழுப்ப, குமாரி ஷரண்­யா­வின் வய­லின் இசை அனைத்­தை­யும் சங்­க­மிக்­கும் வித­மாக அமைந்­துள்ளது.

காணொ­ளி­யில் மூவ­ரும் இந்தியப் பாரம்­ப­ரிய உடை­களை அணிந்து இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தில் வாசித்­தது தேசிய தினத்தை முன்­னிட்டு நிலை­யத்­தின் ஃபேஸ்புக் பக்­கத்­தில்

பதி­வேற்­றம் செய்யப்பட்டது.

சிறு வய­தி­லி­ருந்தே புல்­லாங்­குழல் வாசித்­து­வ­ரும் 32 வயது ராக­வேந்­தி­ரன் தற்­போது இசை

பயிற்­று­விப்­பா­ள­ரா­க­வும் இசை­ய­மைப்­பா­ள­ரா­க­வும் செயல்­ப­டு­கி­றார்.

"நாட்­டின் பல கொண்­டாட்­டங்­களில் பல பரிச்ச­ய­மான பாடல்­களை வாசித்­தி­ருக்­கி­றேன். ஒவ்­வோர் ஆண்­டும் தேசி­ய­ தி­னத்­தின்­போது பல இசைக் கலை­ஞர்­

க­ளுக்கு தேசிய தினப் பாடல்­களை வாசிக்க வாய்ப்பு கிடைக்­கும். பல முறை செய்த ஒன்று என்­றா­லும் தேசிய தினப் பாடலை வாசிப்­பது என்­பது ஒரு தனி இன்பம். இசை­யின் மூலம் நாட்டு மக்­களை ஒருங்­கி­ணைப்­பது ஒரு பெரு­மை­யான அம்சம். இசையின் வழி நாட்டுப் பற்றை வெளிப்­ப­டுத்த முடிவதால் மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன்," என்று தெரி­வித்­தார் ராகவேந்தி­ரன்.