கல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் தங்களது துணைப்பாட வகுப்புகளில் சேர்ந்து தொடக்கப் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வு, ‘ஜிசிஇ’ சாதாரண நிலை, வழக்கநிலைத் தேர்வுகளில் நல்ல முன்னேற்றம் கண்டு வரும் மாணவர்களை சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) சீன, மலாய், யுரேஷிய சுயஉதவிக் குழுக்கள் அங்கீகரித்து வருகின்றன.

அவ்வகையில், துணைப்பாட வகுப்புகளின்வழி கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ள 798 மாணவர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக, கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சி நேற்று முன்தினம் மெய்நிகர் பாணியில் இடம்பெற்றது. தொடக்கப் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் சிறந்த முன்னேற்றம் கண்ட மாணவர்களுக்கு $100 மதிப்பிலான புத்தகப் பற்றுச்சீட்டுகளும் ‘ஜிசிஇ’ தேர்வுகளில் முன்னேற்றம் கண்ட மாணவர்களுக்கு $150 மதிப்பிலான புத்தகப் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.

சுயஉதவிக் குழுக்கள் நடத்தும் கூட்டுத் துணைப்பாடத் திட்டம் மூலம் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் துணைப்பாட வகுப்புகளில் பங்கேற்க முடிகிறது. தீவு முழுவதும் இதுபோன்று மொத்தம் 111 துணைப்பாட வகுப்புகள் செயல்பாட்டில் உள்ளன.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஜுல்கிஃப்லி நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“சமூகத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்காகச் சேவையாற்றும் சுயஉதவிக் குழுக்கள் இன்றியமையாதவை. இவை குறிப்பாக கொவிட்-19 காலகட்டத்தில் சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகுக்கின்றன. மெய்நிகர் கற்றலுக்கு ஏற்ற கற்பித்தல் முறைகளை புதுமைப்படுத்தவும் மேம்படுத்தவும் அயராது உழைக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி. கொரோனா தொற்று ஏற்படுத்தி உள்ள இந்தச் சவால்களை எதிர்கொள்ள மனவலிமையுடன் செயலாற்ற வேண்டும்,” என்று திரு மசகோஸ் கேட்டுக்கொண்டார்.

சிண்டா ‘ஸ்டெப்’ துணைப்பாடத் திட்டத்தில் இருந்து மொத்தம் 181 பேர் விருதுக்குத் தகுதி பெற்றனர்.

‘ஜிசிஇ’ சாதாரண நிலை பிரிவில் விருது பெற்ற சிஎச்ஐஜே செயின்ட் ஜோசஃப் கான்வென்ட் உயர்நிலைப் பள்ளி மாணவியான சாய்ஸ்ரீ சுப்பிரமணியம் 2019ஆம் ஆண்டு சிண்டாவின் ‘ஸ்டெப்’ துணைப்பாடத் திட்டத்தில் சேர்ந்தார். அவர் தமது கடின உழைப்பால் கணிதம், அறிவியல் பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்று, தொழிற்கல்லூரியில் அடிப்படைக் கல்வித் திட்டத்தின்கீழ் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

“நான் கல்வியில் முன்னேறியதற்கு என் ஆசிரியர்கள் ஒரு முக்கிய காரணம். கடினமான பாடங்களைக்கூட பொறுமையாகவும் சுவாரசியமாகவும் நடத்தினர். ஒற்றைப் பெற்றோராக இருந்து, என்னையும் என் சகோதரர்களையும் அக்கறையுடன் கவனித்துக்கொள்ளும் என் தாயாருக்கு இவ்விருதை அர்ப்பணிக்கிறேன்,” என்றார் குமாரி சாய்ஸ்ரீ.

எதிர்காலத்தில் சிங்கப்பூர் ஆகாயப் படையில் சேர விரும்பும் இவர், தன் தாயாருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் கடினமாக உழைத்து ஒரு நல்ல நிலையை அடைய உறுதிபூண்டுள்ளார்.

“ஒவ்வோர் ஆண்டும் ‘ஸ்டெப்’ துணைப்பாடத் திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்களின் தேர்ச்சிநிலை அதிகரித்து வருகிறது. இது மகிழ்ச்சியான செய்தி. சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு ஏறத்தாழ 22% இந்திய மாணவர்கள் தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது நமது இந்திய மாணவர்கள் கல்வியில் முன்னேறி வருவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது,” என்று சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!