இளையர் மனதை கொள்ளை கொண்டுள்ள 'ஹே பேபி'

இளையர் மனதை கொள்ளை கொண்டுள்ள 'ஹே பேபி'

3 mins read
00117b08-dbf2-4ac9-bb82-1ce33e6957bc
சக்தியின் 'ஹே பேபி' பாடல் வெளியீடு. படம்: ரிஷி வர்மன் -

சில நாட்­க­ளா­கவே இங்­குள்ள தமிழ் இளை­யர்­கள் முணு­மு­ணுத்­துக் கொண்­டி­ருக்­கும் ஒரு பாடல் 'ஹே பேபி'. இந்­தப் பாட­லுக்கு உயிர் கொடுத்­த­வர், வளர்ந்து வரும் கலை­ஞர் பிசிபி சக்தி. தான் எழுதி, தயா­ரித்து, பாடி­யும் உள்ள இப்­பாடலை 'ஸ்பாட்­டிஃபை' இசைத் தளத்­தில் 24 வயது சக்தி அண்­மை­யில் வெளி­யிட்­டி­ருந்­தார். இவர் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சட்­டத்துறை­யில் பயின்று வரு­கி­றார்.

நடிகர் அர்ஜுன் புகழாரம்

'ஆக்­‌ஷன் கிங்' அர்­ஜுன் சர்ஜா இப்­பா­ட­லைத் தனது சமூக ஊட­கப் பக்­கங்­களில் முதன்­மு­த­லில் ஆகஸ்ட் 19ஆம் தேதி­யன்று வெளி­யிட்­ட­போது சக்­தி­யின் திற­மை­யைப் பாராட்­டி­யி­ருந்­தார். பாட­லை­ப் பற்றி நல்ல விமர்­ச­னம் அளித்­தி­ருந்­தார். அதைத் தொடர்ந்து பாட­லின் காணொளி, இளை­ஞர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்­பைப் பெற்று வரு­கிறது.

அனுபவம் இல்லை என்றாலும்...

இசையை முறை­யா­கப் பயி­ல­வில்லை என்­றா­லும் தனது முதல் பாடல் எப்­படி அமைய வேண்­டும் என்­ப­தை­யும் அதன் மெட்டு, இசை, தொனி ஆகியவற்றை மிக நுணுக்­க­மாக திட்­ட­மிட்­ட­தை­யும் பற்றி கூறினார் சக்தி. இசையமைப்பாளர் கார்த்­திக் கண்­ணன் உத­வி­யு­டன் பின்னர் பாடலை உரு­வாக்­கி­னார்.

"சிறு வய­தி­லி­ருந்தே தமிழ் பாடல்­கள் கேட்­ப­தி­லும் பாடு­வ­தி­லும் நிறைய ஆர்­வம் இருந்­தது. 10 வரு­டங்­க­ளுக்கு முன்பு மேடை­யில் பாடும் முதல் வாய்ப்பு எனக்கு கிடைத்­தது. அதன் பிறகு எனது தொடக்க கல்­லூரி நாட்­களில் ஒரு நிகழ்ச்­சி­யில் பாடி­னேன். அதில் பாடிய பாட­கர்­கள் பலர் சங்­கீ­தம் பயின்­ற­வர்­க­ளா­க­வும் இயல்­பா­கவே அழ­காக பாடும் திறன் வாய்ந்­த­வர்­க­ளா­க­வும் இருந்­த­னர்.

"அத­னால் அப்­போது எனது தன்­னம்­பிக்­கையை அது பாதித்­தது. ஆனால் அதற்கு பிறகு என்னை மேம்­ப­டுத்­திக்­கொள்ள நானே சுய­மாக நிறைய முயற்­சி­கள் எடுத்­தேன். நான் பாடும் விதத்தை கண்டு பலர் என்­னைக் கேலி செய்­தி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு பதி­ல­டி­யாக ஒரு நாள் சொந்த பாடல் ஒன்றை வெளி­யிட வேண்­டும் என்று நினைத்­தேன்," என்று தம் உணர்­வு­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டார் சக்தி. கொவிட்-19 கிரு­மிப் பர­வல் முறி­ய­டிப்பு நாட்­க­ளின்­போது வீட்­டில் பொழு­து­போக, பாடல் எழு­தத் தொடங்­கி­னார் சக்தி.

திருப்தி பெறும்வரை திருத்தம்

"இசையை முறையாக பயி­லாத எனக்கு பாடலை உருவாக்கும் பணி சவாலாக இருந்­தது," என்றார் அவர். 'ஹே பேபி' பாட­லுக்­காக தானா­கவே இசை­யைப் பற்­றிய அடிப்­படை கூறு­க­ளைக் கற்­றுக்கொண்டு, தனது பாடல் எவ்­வாறு அமையவேண்டும் என்­று இசை­ய­மைப்­பா­ள­ரி­டம் விளக்­கி­னா­ராம் சக்தி.

இசைக் காணொ­ளி­யில் வரும் 'செக்­ஸ­ஃபோன்' இசை பல­ருக்­கும் பிடித்த ஓர் அம்­சம். தனது பாடல் ஒரு­வித 'நவ­நா­க­ரீ­க­மான' உணர்­வைத் தர வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் இந்த 'செக்­ஸ­ஃபோன்' இசை­யைச் சேர்த்­த­தாக கூறி­னார் சக்தி. இதற்­காக இந்­தி­யா­வின்

'செக்­ஸ­ஃபோன்' கலை­ஞர் ஒரு­வ­ரை­யும் அணு­கி­னர். சக்தி இப்­பாடலை தனது சொந்த செல­வில் தயா­ரித்­தி­ருக்­கி­றார்.

தோள் கொடுத்த நண்பர்கள்

பாடல் காணொ­ளி­யைத் தயா­ரித்­த­வர் சக்­தி­யின் நெருங்­கிய நண்­ப­ரும் உள்­ளூர் கலை­ஞ­ரு­மான ரிஷி வர்­மன். இவ­ரும் இப்­பா­ட­லின் ஒரு பகு­தி­யில் 'ராப்' செய்­துள்­ளார்.

காணொ­ளி­யைத் தயா­ரிக்க நண்­பர்­கள் கைகொ­டுத்­த­தா­கவும் கூறி­னார் சக்தி. பட்­டக் கல்­வி­யின் நான்­கா­வது ஆண்­டில் உள்ள சக்தி, படிப்­பில் கவ­னம் செலுத்த விரும்­பு­வ­தா­க­வும் டிசம்­பர் மாதத்­தில் இன்­னொரு பாட­லுக்­கான தயா­ரிப்­புப் பணி­க­ளைத் தொடங்க ஆர்­வத்­து­டன் காத்­தி­ருப்­ப­தா­க­வும் கூறி­னார்.