இணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்

பிற­ரு­டன் இணை­யும் வச­தியை நமக்கு தந்­துள்ள இணை­யத்தை அச்­சு­றுத்­த­லுக்­காக பயன்­ப­டுத்­து­கின்­ற­னர் சிலர். தாங்­கள் பகிர்ந்து­கொள்­ளும் கருத்­து­கள் மற்­றும் செயல்­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கத்தை இவர்­கள் உணர்­வ­தில்லை.

பெயர், முகம், அடை­யா­ளம் தெரி­யாத ஒரு­வர் இணை­யம் வழி நம்மை அச்­சு­றுத்­தும்­பொ­ழுது என்ன செய்ய வேண்­டும், சூழலை எவ்­வாறு கையாள வேண்­டும் என்ற விழிப்­பு­ணர்வு பல இளம் வய­தி­ன­ரி­டையே இருப்­ப­தில்லை. அத்­து­டன் அச்­சு­றுத்­த­லுக்கு ஆளா­கி­யுள்­ளதை உண­ரா­மல் உதவி பெற முன்­வ­ரா­த­வர்­களும் இருக்­கின்­ற­னர்.

இவர்­க­ளுக்­குக் கைகொ­டுக்­கும் வித­மாக தமி­ழர் பேரவை இளை­யர் பிரி­வி­னர் மற்­றும் ‘மெண்­டல் ஆக்ட்’ (mentalact) அமைப்­பி­னர் இணைந்து ‘சைபர்­அ­வேர்’ (CyberAware) என்ற கருத்­த­ரங்­குக்கு ஏற்­பாடு செய்­துள்­ள­னர். காலை முதல் இரவு வரை இணை­யத்­தில் மூழ்­கி­யி­ருக்­கும் இளை­ஞர்­களும் இணை­யப் பயன்­பாட்­டில் ஆழ்ந்­தி­ருக்­கும் சிறு­வர்­க­ளின் பெற்­றோரும் கலந்­து­கொள்ள வேண்­டிய நிகழ்ச்சி இது.

இணைய அச்­சு­றுத்­த­லு­டன் போரா­டும் இந்­திய இளை­ஞர்­க­ளுக்­கும் சிறு­வர்­க­ளின் பெற்­றோருக்­கும் உதவ, வழி­காட்­டு­தல் குறிப்­பு­க­ளு­டன் பய­னுள்ள வளங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வ­தை­யும் நோக்­க­மாக கொண்­டுள்­ளது இந்தக் கலந்­து­ரை­யா­டல்.

“கொவிட்-19 தொற்­றால் நம்­மில் பலர் முன்­பைக்­காட்­டி­லும் தற்­போது சமூக ஊட­கங்­களை அதி­க­மாக பயன்­ப­டுத்­து­கி­றோம். அதே சம­யத்­தில் சமூக ஊட­கத் தளங்­களில் இணைய அச்­சு­றுத்­தல் உட்­பட பல வடி­வங்­களில் தீமை­களும் ஏற்­ப­டு­கின்­றன.

இது­போன்ற இணைய அச்­சு­றுத்­தல்­க­ளின் விளை­வு­கள் மோச­மாக இருக்­கக்­கூ­டும். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் நற்­பெ­யரை சேதப்

­ப­டுத்­து­வ­தோடு மன­ரீ­தி­யா­க­வும் அதி­க­ள­வில் பாதிக்­கின்­றது,” என்று தெரி­வித்­தார் ஏற்­பாட்­டுக் குழு தலை­வர்­களில் ஒரு­வ­ரான டாக்­டர் மா.பிரெ­மிக்கா.

இணைய அச்­சு­றுத்­தல்­க­ளின் உள­வி­யல் பின்­னணி, பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எதிர்­கொள்­ளும் விளை­வு­கள், பாதிப்­பி­லி­ருந்து தற்­காத்து கொள்­ள­வும் மீண்டுவர­வும் இளை­ஞர்­கள் மற்­றும் குடும்­பங்­கள் என்ன செய்ய முடி­யும் என்­ப­தைப் பற்றி இந்த இணை­யக் கருத்­த­ரங்­கில் மன­நல நிபு­ணர்­களும் ஆர்­வ­லர்­களும் பகிர்ந்­து­கொள்­ள­வி­ருக்­கின்­ற­னர்.

மேலும் இணைய அச்­சு­றுத்­தல் சார்ந்த குற்­றங்­க­ளைக் கையாள்­வது குறித்த சட்­ட­ரீ­தி­யான கண்­ணோட்­டத்தை ஒரு வழக்­க­றி­ஞர் வழங்­க­வி­ருக்­கி­றார். கருத்­த­ரங்­கின் முன்­னோட்­ட­மாக மூன்று காணொ­ளித் தொடர்­களை தமி­ழர் பேரவை இளை­யர் பிரி­வும் மெண்­டல் ஆக்ட்­டும் தங்­கள் சமூக ஊட­கப் பக்­கங்­களில் வெளி­யிட்­டி­ருந்­த­ன. இணைய அச்­சு­றுத்­த­லால் பாதிப்­ப­டைந்­த­வர்­கள் அவர்­க­ளது அனு­ப­வங்­களை இவற்­றில் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

இணைய அச்­சு­றுத்­தல் மற்­றும் அத­னு­டன் தொடர்­பு­டைய மன உளைச்­ச­லுக்கு ஆளா­ன­வர்­க­ளுக்­கும், குறிப்­பாக இளை­ஞர்­கள் மற்­றும் சிறு­வர்­க­ளின் பெற்­றோருக்­கும் விழிப்­பு­ணர்­வூட்­டும் வகை­யில் இந்த காணொளி தொட­ரும் கருத்­த­ரங்­குக்கு துணை­பு­ரி­யும் என்று ஏற்­பாட்டு குழு எதிர்­பார்க்­கிறது. மேலும் இந்­திய சமூ­கத்­தில், மன­நல பிரச்­சி­னை­க­ளைப் பற்­றிய உரை­யா­டல்­களை ஊக்­கு­விக்­கும் நோக்­கத்­தை­யும் கருத்­த­ரங்கு கொண்­டுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!