வசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்

 

மலையாளிகளின் மரபில் முக்கியமாக கருதப்படும் ஓணம் பண்டிகையை இங்குள்ள இளையர்கள் சிலர், வசதி குறைந்தோருக்கு உதவியவாறு கொண்டாடினர். இத்திருநாளன்று சிறப்பாகத் தயாரிக்கப்படும் ‘ஓண சத்யா’ விருந்தை சிங்கப்பூர் மலையாளி சங்கத்தின் இளையர் அணியினர், வீடு வீடாக விநியோகம் செய்தனர்.

“தற்போதைய நிச்சயமற்ற சூழலில் இதுபோன்ற சிறு உதவிகள் தேவைப்படுவோரை நாம் தேடிச் செல்லவேண்டும். அந்த வகையில் குடும்ப சேவைகள் நிலையம் ஒன்று எங்களுக்கு உதவி செய்திருந்தது. 

“இரண்டாம் கட்ட தளர்வு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் இந்த உணவு விநியோகத்திற்கு ஏற்பாடு செய்ய நாங்கள் திட்டமிட ஆரம்பித்தோம்,” என்று இளையர் அணியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளரான முகம்மது ஷஃபிக், 24, கூறினார். 

“கலந்துரையாடல்களை நேரில் இல்லாமல் இணையக் காணொளி வழியாக திட்டமிட வேண்டி இருந்தது. அத்துடன் அனைவரும் ஒன்றுகூடாமல் சிறு சிறுக் குழுக்களாக செயல்பட்டது சற்று சவாலாக இருந்ததாகவும் அவர் சொன்னார். “இருந்தாலும் உணவைப் பெற்ற அனைவரது பூரிப்பு என் உள்ளத்தைக் குளிரச் செய்தது,” என்று அவர் கூறினார்.
மலையாளச் சமூகத்தின் பிணைப்பை வலுப்படுத்துவதுடன் இதுபோன்ற அறப்பணிகள் வழி பிற சமூகத்தினரைச் சென்றடைய வேண்டும் என்று இளையர் பிரிவினர் விரும்புவதாக அதன் தலைவர் அத்தீனா மைக்கெல் கூறினார். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!