விளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்

- கி.ஜனார்த்­த­னன்

கணினி, திறன்பேசி விளையாட்டுகளில் அதிக பிரபலம் அடைந்துவரும் கூறுகளில் ஒன்றான ‘லூட் பாக்ஸ்’ (loot box) பற்றி தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் விளக்கவுள்ளன.

விளையாட்டுகளில் உள்ள பரிசுப் பெட்டிகளைப் போன்றது இந்த ‘லூட் பாக்ஸ்’ எனப்படும் பெட்டி. இணைய காற்பந்து விளையாட்டுகள் மற்றும் துப்பாக்கிச்சூடு விளையாட்டுகளிலும் இத்தகைய பெட்டிகள் காணப்படலாம்.

குறிப்பிட்ட ஒரு விளையாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் ஆடைகள், உபகரணங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ள பொருட்கள் உள்ள ஒரு பெட்டிக்காக விளையாட்டாளர்கள் விளையாட்டு உலகத்திலுள்ள நாணயங்களைச் செலவு செய்ய வேண்டும் அல்லது நிஜ உலக பணத்தைச் செலவு செய்ய வேண்டும்.

சிக்கல் என்னவென்றால், இதற்கான பணத்தைச் செலவு செய்யும் போது பெட்டியில் உங்களுக்குப் பிடித்த பொருள் கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. செலவு செய்த பின்னும் ஒருவருக்கு நல்ல பொருள் கிடைக்கலாம் அல்லது எதுவும் கிடைக்காமல் போகலாம். பிடித்த பொருள் பெட்டியிலிருந்து கிடைக்கும்வரை சிலர் பெட்டிக்கு மேல் பெட்டிகளை வாங்கி செலவு செய்வர். இதனால் ‘லூட் பாக்ஸ்’ ஒருவித சூதாட்டம் என்று குறை கூறப்படுகிறது.

தீய பழக்கமான சூதாட்டத்தில் ஈடுபடுவது மாணவர்களுக்கு ஏற்புடையது அல்ல. சட்ட விரோதமாக அதில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

‘லூட் பாக்ஸ்’க்காக ஒரு சில மாணவர்கள் 3,000 டாலர் வரை செலவு செய்வதாக கூறப்படுகிறது.சீனா, ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இது குறித்து எச்சரிக்கைப் போக்கை கையாள்கின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!