இந்திய முஸ்லிம் இளையர்களுக்கான மாநாடு

2 mins read
34ff2b9a-4005-4d7f-a862-b2a7174d404f
இளையர்கள் பங்குபெற்ற மெய்நிகர் கலந்துரையாடல். படம்: இந்திய முஸ்லிம் இளையர் மாநாடு ஏற்பாட்டுக் குழு -

சமூக மேம்­பாட்­டில் இளை­யர்­களின் ஈடு­பாடு குறை­வாக உள்­ளது என்று பல­வா­றான கருத்­து­கள் கூறப்­படும் வேளை­யில், அதை முறி­ய­டிக்­கும் வகை­யில் IMYouth, IM Collective, Im.Prof ஆகிய அமைப்­பு­கள் ஒன்­றி­ணைந்து இந்­திய முஸ்­லிம் இளை­யர் மாநாடு ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

மாநாட்­டில் பங்­கு­பெற்ற 50 இளை­யர்­கள், இந்­திய முஸ்­லிம் சமூ­கம் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­கள், சமூ­கத்­தின் தேவை­கள் போன்­ற­வற்றை அடை­யா­ளம் கண்டு அது­கு­றித்த கலந்­து­ரை­யா­டல் மேற்­கொண்டு அவற்­றுக்­கான தீர்­வு­க­ளை­யும் முன்­வைத்­த­னர்.

ஜன­வரி 16ஆம் தேதி இணை­யம்­வழி நடை­பெற்ற இந்த மாநாட்­டில், இந்­திய முஸ்­லிம் சமூ­கத்­தில் பாலின சமத்­து­வம், தலை­மைத்­து­வத்­தில் இளை­யர்­க­ளின் ஈடு­பாடு, சமூ­கத்­தில் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டிய ஒருங்­கி­ணைப்பு, ஒற்­றுமை, மன­ந­லம் குறித்த விழிப்­பு­ணர்வு ஆகிய தலைப்­பு­களில் வெளிப்­ப­டை­யாக கலந்­து­ரை­யா­டல்­கள் நடை­பெற்­றன.

இந்­திய முஸ்­லிம் சமூக மேம்­பாட்­டில் இளை­யர்­களை ஈடு­படுத்தி அவர்­க­ளது கருத்­து­க­ளை­யும் யோச­னை­க­ளை­யும் பகிர்ந்­து­ கொள்ள ஒரு தளத்தை உரு­வாக்கி தரு­வதை நோக்­க­மா­கக் கொண்­டது இந்த மாநாடு.

எந்­த­வொரு சவா­லை­யும் சந்­திக்க நேரி­டும்­போது, ஒட்­டு­மொத்த சமூ­க­மாக ஒன்­று­சேர்ந்து செயல்­ப­டு­வது மிக­வும் முக்­கி­யம். இந்­திய முஸ்­லிம் சமூ­கம் ஒன்­று­பட்டு இயங்க வேண்­டும் என்­பது மாநாட்­டில் பல இளை­யர்­கள் முன்­வைத்த முக்­கிய கருத்­து­களில் ஒன்று.

மாநாடு நடை­பெ­று­வ­தற்கு முன்பே இந்­திய முஸ்­லிம் இளை­யர்­க­ளின் தேவை­க­ளை­யும் எண்­ணங்­க­ளை­யும் புரிந்­து­கொள்ள ஏற்­பாட்­டா­ளர்­கள் பகுப்­பாய்வு ஒன்றை நடத்­தி­னர். இதில் இளை­யர்­கள் குறிப்­பிட்­டவை பின்­னர் மாநாட்­டில் விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.

இந்த மாநாட்­டில் பகிர்ந்­து­கொள்­ளப்­பட்ட முக்­கிய கருத்­து­களை இந்­திய முஸ்­லிம் சமூ­கத் தலை­வர்­க­ளின் கவ­னத்­திற்கு கொண்­டு­செல்­வதே அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை என்று ஏற்­பா­ட்டுக்­ குழு தெரி­வித்­தது.

மேலும், இந்­திய முஸ்­லிம் இளை­யர் குழுக்­கள் ஒன்­றி­ணைந்து பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள சில திட்­டங்­க­ளைத் தான் வைத்­தி­ருப்­ப­தா­க­வும் ஏற்­பாட்­டுக்­ குழு கூறி­யது.

செய்தி: இந்து இளங்­கோ­வன்