பெற்றோரைப்போலவே ஆசிரியராக விரும்பும் சஹானா

ஒரு பிள்­ளை­யின் வாழ்க்­கை­யில் ஒரு நல்ல தாக்­கத்தை உண்­டா­க் கும் சக்தி ஓர் ஆசி­ரி­ய­ருக்கு உண்டு என்­பதை திண்­ண­மாக நம்­பு­கி­றார் யுனோயா தொடக்­கக் கல்­லூ­ரியைச் சேர்ந்த சஹானா தேவி. ‘ஜிசிஇ’ மேல்நிலை தேர்வை முடித்த மாண­வர்­கள் அடுத்த கட்­ட­மாக என்ன செய்­ய­லாம், என்ன படிக்­க­லாம் என்று சிந்­தித்­துக்­கொண்­டி­ருக்­கும் வேளை­யில் சஹானா ஆசி­ரி­ய­ரா­கும் தமது கனவை நெருங்க பயிற்சி மேற்­கொண்டு வரு­கி­றார். ‘ஏ’ நிலை தேர்வு முடிந்­த­தும் அவர் ‘ஹோப் சென்­டர்’ என்­னும் இடத்­தில் தொடக்­கப்­பள்ளி மாண­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக தமிழ் மற்­றும் கணக்கு துணைப்­பாட வகுப்­பு­களை நடத்தி வரு­கி­றார்.

சஹா­னா­வின் பெற்­றோர் இரு­வரும் ஆசி­ரி­யர்­கள். சிறு வய­தி­லி­ருந்தே ஆசி­ரி­யர் தொழி­லி­லும் மாண­வர்­க­ளின் வளர்ச்­சி­யி­லும் தமது பெற்­றோர் காட்­டிய ஈடு­பாடும் அக்­க­றை­யும் சஹா­னா­வின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளன. சிறு­வ­ய­தில் தந்தை தமக்கு கணிதப் பாடம் சொல்­லி­க்கொ­டுக்­கும்­போது அந்­தப் பாடத்­தின் மீதான அவ­ரது பற்றை சஹா­னா­வால் உணர முடிந்­தது. தந்­தையைப் போல எதிர்­காலத்­தில் பல மாண­வர்­க­ளின் கல்விப் பய­ணத்­தில் ஒரு நல்ல வழி­காட்­டி­ யாக இருக்­க­வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­கி­றார் இவர்.

“ஒரு முறை ‘ஹோப் சென்­ட­ரில்’ ஒரு தமிழ் மாண­விக்கு நான் தமிழ்ப் பாடம் நடத்­திக்­கொண்­டி­ருந்­தேன். அப்­போது அந்த மாணவி வாக்­கி­யங்­களைப் புரிந்­து­கொள்­ள சிர­மப்­பட்­டுக்­கொண்­டி­ருந்­ததை அறிந்­தேன். தொடக்­கத்­தில் கடி­ன­மாக இருப்­ப­தால் அந்தப் பாடத்­தையே மொத்­த­மாக அவர் வெறுத்­து­விடக்­கூ­டாது என்று நினைத்து, தமிழை அவ­ருக்குப் புரி­யும் வகை­யில் சுவா­ர­சி­ய­மாகக் கற்­பித்­தேன். அவர் மெல்ல சில வாக்­கி­யங்­களைப் புரிந்து­கொள்ள தொடங்­கி­னார். அதைக் கண்டு நான் பெற்ற மன­நி­றை­வுக்கு அளவே இல்லை,” என்­றார் சஹானா.

பள்­ளி­யி­லும் சஹா­னா­விற்கு பக்­க­ப­ல­மாக இருந்து அவ­ருக்கு வழி­காட்­டி­யி­ருக்­கின்­ற­னர் அவ­ரது ஆசி­ரி­யர்­கள்.

சஹா­னா­வுக்கு தமிழ் மீது நிறைய ஆர்­வம் இருக்­கிறது. இது அவரை உயர்­தரம் மூன்று தமிழ்ப் பாடம் எடுக்க தூண்­டி­யது.

தமிழ் கலாசா­ரத்­தின் மீதும் மொழி­யின் மீதும் உள்ள அவ­ரது ஆர்­வம் வளர்­வ­தில் அவ­ரது தமிழ் ஆசி­ரி­யர்­கள் பெரும்­பங்­காற்­றி­யுள்­ள­னர் என்று கூறிய சஹானா ‘சொற்­சிலம்­பம்’, லிஷா தமிழ் பேச்சாளர் மன்றம் ஆகிய நிகழ்ச்­சி­களில் தமது பேச்­சாற்­றலை வெளிப்­ப­டுத்­தி­யிருக்­கிறார்.

பொருளியல் பாட ஆசிரியராக விரும்பினாலும் தமிழ்த் துறைக்கும் சமூகத்திற்கும் தம்முடைய பங்கை ஆற்ற உறுதி பூண்டுள்ளார் இளை யர் சஹானா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!