இந்தியர்கள் நல்வாழ்வுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்று 23 வயது கு.அஷ்டலட்சுமி தம் நண்பர் களுடன் கலந்தாலோசித்தார்.
'ஸும்பா' உடற்பயிற்சி வகுப்பைத் தொடங்கலாம் என்ற யோசனை அதில் பிறந்தது.
தொடக்கத்தில் ஃபேஸ்புக் தளம் வழியாகத் தமது 'ஸும்பா' வகுப்புகளை அவர் நேரலையாக நடத்தினார். பலரும் 'ஸும்பா' உடற்பயிற்சியைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டியதை அஷ்டலட்சுமி கவனித்தார்.
பிறகு, 2020ல் ஞாயிற்றுக்கிழமைகள் அன்று நேரடி வகுப்புகளைத் நடத்த தொடங்கினார்.
தற்போது கொவிட்-19 கிருமிப்பரவலால் அஷ்டலட்சுமி 'ஸூம்' தளம் வழியாக தமது ஸும்பா வகுப்பை நடத்துகிறார்.
ஸும்பா பயிற்சியில் ஒரு மணி நேரத்தில் 600 கலோரிகளிலிருந்து 1,000 கலோரிகள் வரை எரிக்கலாம்.
மேலும், உடல் எடையைக் குறைக்கவும் உடலை மேலும் வலுவாக்கவும் ஸும்பா உதவுகிறது.

