‘பரதம் என்னைக் கைவிடவில்லை, நானும் பரதத்தை கைவிடமாட்டேன்’

மாதங்கி இளங்­கோ­வன்

தொடக்­கப்­பள்­ளி­யில் ஓர் இணைப்­பாட நட­வ­டிக்­கை­யா­கத் தொடங்­கிய சர­ணி­யா­வின் நட­னப் பய­ணம், இப்­போது அவர் வாழ்க்­கை­யி­லி­ருந்து பிரிக்க முடி­யாத ஓர் அம்­ச­மா­கி­விட்­டது.

‘வழி’ என்ற நடன படைப்பை, கடந்த மாதம் 6ஆம் தேதியன்று ஸ்டாம்­ஃபர்ட் கலை நிலை­யத்­தில், பாஸ்­கர்ஸ் கலைக் கழ­கத்­தின் ‘பிர­சாந்­தம்’ நடன விழா­வின் ஓர் அங்கமாக மேடை­யேற்­றி­னார் 29 வயது சர­ணியா ராம­தாஸ்.

சிறு­வ­யது முதல் நட­னம் எவ்­வாறு தன் வாழ்க்­கை­யில் ஓர் அங்­க­மா­னது என்­ப­தைப் பிர­தி­ப­லிக்­கும் வகை­யில் இந்த நட­னப் படைப்­பின் கதைக்­க­ளம் அமைந்­தி­ருந்­தது.

தான் 20 ஆண்­டு­க­ளாக பர­தம் கற்­றுக்­கொண்­ட­தற்கு இந்­தப் படைப்பு ஒரு சிறு சமர்ப்­ப­ணம் என்­கி­றார் சர­ணியா.

சர­ணி­யா­வின் பர­த­நாட்­டிய குரு­வான நீவின் ஹெர்­ஷெல், இந்­தப் படைப்­பின் நடன இயக்­கு­ந­ரா­வார்.

சர­ணி­யா­வின் தொடக்­கப்­பள்ளி நடன ஆசி­ரி­ய­ராக இருந்த வசந்தா காசி­நாத், சர­ணி­யா­வுக்கு நாட்­டி­யத்­தில் திற­மை­யுண்டு என்­பதை உணர்ந்­த­தால் பர­த­நாட்­டிய வகுப்­பு­க­ளுக்­குச் செல்­லு­மாறு ஊக்­கு­வித்­தார்.

தொடக்க காலத்­தில் பாஸ்­கர்ஸ் கலைக் கழ­கத்­தில் பர­த­நாட்­டிய வகுப்­பு­க­ளுக்­குச் சென்ற சர­ணி­யா­வுக்கு, அதில் அவ்­வ­ள­வாக ஈடு­பாடு இல்லை என்­றார்.

ஆனால், பர­த­நாட்­டி­யம் ஓர் அற்­பு­த­மான கலை­யென்­பதை நாள­டை­வில் அவர் உண­ரத் தொடங்­கி­னார்.

நீவின், நீரஜா, சாந்தா பாஸ்­கர் போன்ற பல நடன ஆசி­ரி­யர்­க­ளி­டம் பர­த­நாட்­டி­யம் கற்­றுக்­கொண்ட சர­ணியா, ஒவ்­வோர் ஆசி­ரி­ய­ரி­ட­மும் தான் புதி­ய­ன­வற்­றைக் கற்­றுக்­கொண்­ட­தா­கக் கூறுகிறார். அத்­து­டன் அவர்­கள் அமைத்த அடித்­த­ளத்­தைக்­கொண்­டு­தான் இன்று தன்­னால் சொந்­த­மாக ஒரு நாட்­டிய பாணியை உரு­வாக்க முடிந்­தது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

உதா­ர­ணத்­திற்கு, வலி­மை­யா­க­வும் அங்­க­சுத்­தத்­தோ­டும் எவ்­வாறு ஆடு­வது என்­பதை நீவி­னி­டம் கற்­றுக்­கொண்­டார். சாந்தா பாஸ்­க­ரி­டம் நளி­ன­மா­க­வும் பாவ­னை­க­ளோ­டும் பெண்­மையை வெளிப்­

ப­டுத்­தும் வண்­ணம் எவ்­வாறு ஆடு­வது என்­ப­தைக் கற்­றார்.

தேசிய கலை­ மன்ற தொழில்­துறை, வர்த்­தக உரு­மாற்­றப் பிரி­வின் துணை நிர்­வா­கி­யாக பணி­பு­ரி­யும் சர­ணியா, வாரத்­தில் ஐந்து முறை­யா­வது நடன வகுப்­பு­களுக்கு நேரம் ஒதுக்­கிச் செல்­கி­றார்.

“வேலைக்­கும் நட­னத்­திற்­கும் தமக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்­கும் நேரம் ஒதுக்­கு­வது சற்று சிர­ம­மாக இருந்­தா­லும், நாட்­டி­யம் என் மன­துக்கு அமைதி தரும் ஒன்­றாக அமைந்­து­விட்­டது. எது நடந்­தா­லும் நாட்­டி­யத்தை நான் நிச்­ச­யம் கைவி­ட­மாட்­டேன்,” என்­கிறார் சர­ணியா.

சிறு­மி­யாக இருந்­த­போது மேடை­யில் நட­ன­மா­டப் பயந்த சர­ணியா, தன் உணர்ச்­சி­களை வெளிப்­ப­டுத்­தும் ஒரு தள­மாக இன்று அந்த மேடை மாறி­விட்­ட­தா­கக் கரு­து­கி­றார். திற­மை­யான நட­ன­ம­ணி­யா­கத் திக­ழும் இவர், ஸ்பெ­யின் நாட்­டின் புகழ்­பெற்ற ‘பாச்­சாத்தா’ நட­னத்தை முறை­யா­கக் கற்று வரு­கி­றார். பாஸ்­கர்ஸ் கலைக் கழ­கத்­தில் நடன வகுப்­பு­க­ளை­யும் நடத்தி வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!