நம் தாய்மொழி, நம் அடையாளம்

காயத்­திரி காந்தி

கடந்த மாதம் நடந்­தே­றிய ‘தாய்­மொ­ழிக் கருத்­த­ரங்கு 2022’ நிகழ்ச்­சி­யில் கல்வி அமைச்­சர் சான் சுன் சிங், இரு­மொ­ழிக் கொள்­கை­யைப் பற்­றி­யும் தாய்­மொ­ழி­யின் முக்­கி­யத்­து­வம் பற்­றி­யும் பேசி­யி­ருந்­தார்.

அதை­ய­டுத்து தமிழ்­மொ­ழிப் புழக்­கத்தை ஊக்­கு­விப்­ப­தன் முக்­கி­யத்­து­வத்தை கடந்த ஞாயிறு தமிழ் முர­சின் தலை­யங்­கம் எடுத்­து­ரைத்­தது. தமிழ் நமது அதி­கா­ரத்­துவ மொழி­யாக இருப்­ப­தை­யும் தாண்டி, அது எவ்­வாறு நம் அடை­யா­ளத்­தின் ஓர் அங்­க­மாக இருக்க வேண்­டும், எப்­படி தமிழை செழித்­தோங்­கச் செய்­வது போன்ற கருத்­து­கள் தலை­யங்­கத்­தில் வலு­வாக முன்­வைக்­கப்­பட்­டன. பல­ரும் இக்­க­ருத்­து­க­ளுக்­குத் தங்­க­ளின் ஆத­ர­வைத் தெரி­வித்­த­னர்.

“பிற இனத்­த­வ­ரி­டம் பேசும்­போ­தும் பிற மொழி பேசு­ப­வர்­க­ளி­டம் நம்மை அறி­மு­கப்­ப­டுத்­தும்போதும், நம்­மைத் தனித்­துக் காட்­டக் கூடிய திறன் தமிழ்­மொ­ழிக்கு உண்டு.

“தமிழை ஒரு மொழி­யாக மட்­டும் பாரா­மல் கலா­சா­ரக் கூறு­களும் நாம் தின­மும் பின்­பற்­றும் நெறி­களும் அடங்­கி­ய­தா­கப் பார்க்­க­வேண்­டும்,” என்று கூறி­னார் உள்­ளூர்க் கலை­ஞர் கார்த்­தி­கே­யன் சோமசுந்தரம்.

தமிழ் நமக்கு ஓர் அடை­யா­ளத்­தைத் தரு­வ­து­டன் இரு மொழிக் கற்­ற­ல் நம் வளர்ச்­சி­யி­லும் பெரும் பங்­காற்­று­கிறது.

“இரு­மொழி அறிவு இருப்­ப­தால் நம் திறன்­கள் வலுப்­பெ­றும். தமி­ழில் பேசும்­போது எங்­கி­ருந்­தா­லும் எனக்­கும் தமிழ் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­கும் இடையே நெருங்­கி­ய தொடர்பு உரு­வாகி ­வி­டு­கிறது.

“தமிழ்­மொழி நம் அடை­யா­ளத்­தில் பிணைந்­தி­ருக்­கும் வேளை­யில் நாம் வள­ரும்­போது நம்­மோடு சேர்ந்து நம் தமிழ்­மொ­ழி­யும் வள­ரும்,” என்று கூறி­னார் உள்­ளூர் படைப்­பா­ளர் மற்­றும் இயக்குநர் விக்­னேஷ் ஆர்.எஸ்.

இன்­றைய கால­கட்­டத்­தில், தமிழ்­மொழிப் புழக்­கம் குறைந்து வரு­கிறது. ஆகை­யால் அதன் பயன்­பாட்டை அதி­க­ரிக்­கும் முயற்­சி­யில் ஈடு­படும் பொறுப்பு, இளம் தலை­மு­றை­யி­ன­ரி­டம் உள்­ளது.

“பல்­லி­னச் சூழ­லில் நாமே நம் மொழி­யைப் பேசா­மல், அதை நம் அடை­யா­ள­மாக அர­வ­ணைக்­கா­மல் இருந்­தால் நம் கலா­சா­ரத்­தைப் பற்றி மற்­ற­வர்­க­ளுக்கு எப்­படி கற்­பிக்­க­வும் புரி­ய­வைக்­க­வும் முடி­யும் என்­ப­தைப் பற்றி சிந்­திக்க வேண்­டும். தமி­ழில் பேச முயற்சி எடுப்­பது நம் தமிழ் சமூ­கம் வளர்­வ­தற்­கான வழியை அமைத்­தி­டும்,” என்று கூறி­னார் தெம்­ப­னிஸ் மெரீ­டி­யன் தொடக்­கக் கல்­லூ­ரி­யில் பயி­லும் மாணவி கா.பாரதி.

இதற்­கி­டையே தமிழ்­மொ­ழிப் புழக்­கத்தை இளை­ய­ரி­டையே ஊக்­கு­விப்­ப­தில் பெற்­றோ­ரின் பங்­கும் இன்­றி­ய­மை­யா­தது.

“இளம் பிள்­ளை­க­ளைத் தாய்­மொ­ழி­யில் பேச ஊக்­கு­விக்­கும் பழக்­கம் வீட்­டி­லி­ருந்தே தொடங்க வேண்­டும்.

“ஒரு கலா­சா­ரத்­தைப் பற்றி கற்­றுக்­கொள்­வ­தற்­கான நுழை­வா­யிலே மொழி­யா­கும். எனவே, அது இளம் வய­தி­லேயே விதைக்­கப்­பட்டு, வளர்க்­கப்­பட வேண்­டும்,” என்று கூறி­னார் மூத்த நிதி ஆலோ­ச­கர், கல்­பனா சிவன்.

தலை­யங்­கத்­தில் குறிப்­பி­டப்­பட்­ட­து­போல் நாம் நம் தாய்­மொ­ழி­யைப் பயன்­ப­டுத்­து­வ­தைக்­கொண்டே அதன் முக்­கி­யத்­து­வம் அமை­யும். அதை அள­வு­கோ­லாக வைத்து­தான் அதன் தேவை­யும் நிலைக்­கும். தமிழ்­மொழி ஓர் அதி­கா­ரத்­துவ மொழி என்­ப­தற்­கும் மேல், நமக்கு ஓர் அடை­யா­ளம் என்­பதை நாம் உணர வேண்டும். நம் தாய்­மொ­ழியை நிலை­நாட்ட, சூழல் அமை­யும்­போ­தெல்­லாம் தமி­ழில் பேச வேண்­டிய பெரும்­பொ­றுப்பு இளை­யர்­க­ளா­கிய நமக்கு உண்டு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!