பயின்ற பள்ளியில் ஆசிரியர்

தாம் படித்த அதே பள்­ளி­யில் இன்று ஆங்­கில ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரி­யும் 41 வயது திரு பேட்­ரிக் சாகா­ராமை நாங்­கள் எங்­கள் நேர்­கா­ண­லுக்­காக அணு­கி­னோம்.

திரு சாகா­ராம் 1997ல் தமது கல்­வியை செயின்ட் ஜோசப் கல்வி நிலை­யத்­தில் முடித்­து­விட்டு மேல்­ப­டிப்­புக்­காக ஆஸ்­தி­ரே­லியா சென்­றார்.

குறிப்­பாக தமது மொழிப் பாடங்­களில் அவர் சிறப்­புத் தேர்ச்சி பெற்­ற­தால் மொழி சார்ந்த ஒரு படிப்பை மேற்­கொள்ள முடி­வெ­டுத்­தார். ஆங்­கில மொழி­யில் இருந்த ஆர்­வத்­தால் அவர் அதையே ஆழ­மா­கப் படிக்­க­வும் தீர்­மா­னித்­தார்.

எதிர்­கா­லத்­தில் எந்த வாழ்க்கைத் தொழில் பாதை­யைத் தேர்வு செய்­வது என்ற யோச­னை­யில் இருந்­த­போது, தாம் படித்த பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பணி­யாற்­றும் ஆசி­ரி­யர் ஒரு­வர் கூறிய ஆலோ­ச­னை­யில் ஆசி­ரி­யர் தொழி­லைத் தாம் தேர்ந்­தெ­டுத்­த­தாக திரு சாகா­ராம் குறிப்­பிட்­டார்.

கலைத்­து­றை­யில் எதிர்­கா­லம் இல்லை என்று பலர் தவ­றாக எண்­ணி­வி­டு­கி­றார்­கள் என்று கூறிய அவர், அத்­துறை பாராட்­டப்­ப­டாத ஒரு பாதை என்­றார். அறி­வி­யல், சட்­டம் தொடர்­பான டிப்பை மேற்­கொள்ள விரும்­பு­வோர், கலைத்­து­றை­யில் பகுப்­பாய்வு அம்­சத்­திற்கு முக்­கி­யத்­து­வம் தரப்­ப­டு­வ­தைக் கவ­னிக்­கத் தவ­றி­வி­டு­கின்­ற­னர் என்­றார்.

இன்­றைய உலக வாழ்க்­கைக்­குப் பல வகை­யி­லும் உத­வும் ஒன்று, இந்த பகுப்­பாய்­வுத் திறன் என்­றும் அவர் கூறி­னார்.

கலைத்­துறை தொடர்­பில் ஆராய்ந்­துள்ள ஆசி­ரி­யர் என்ற நிலை­யில், அனு­ப­வ­பூர்­வ­மாக அதன் முக்­கி­யத்­துவத்தை அவ­ரால் குறிப்­பிட முடிந்­தது.

கலைத்­துறை சார்ந்த கல்­வி­யின் வழி, மாண­வர்­கள் வாழ்க்­கைத் திறன்­களை­யும் கற்­றுக்­கொள்­ள­லாம் என்­பது அவ­ரின் கருத்து.

அர­சி­யல், கலை ஆகிய துறை­களில் தாம் பயின்ற கார­ணத்­தால் வாழ்க்­கை­யில் தாம் எதிர்­நோக்­கிய பல சிக்­கல்­களை, பகுத்­தா­ராய்ந்து தீர்க்க முடிந்­த­தா­க­வும் திரு சாகா­ராம் எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.

இன்று தமது ஆசி­ரி­யர் பணி­யி­லும் அதே திறன் கைகொ­டுப்­ப­தாக அவர் கூறி­னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!