‘பள்ளி எனக்கு இன்னொரு குடும்பம்’

செயின்ட் ஜோசப் கல்வி நிலை­யத்­தில் பயின்­ற­தன் மூலம் தாம் இரண்டு முக்­கி­யப் பாடங்­க­ளைக் கற்­றுக்­கொண்­ட­தாக 27 வயது திரு வருண்­மூர்த்தி நெடுஞ்­செ­ழி­யன் எங்­க­ளி­டம் கூறி­னார். கல்­வி­யில் ஆர்­வத்­தைத் தூண்­டிய இடம் அது. அத்­து­டன் அன்று கற்ற வாழ்க்­கைப் பாடங்­களே இன்று தாம் அடைந்­துள்ள முன்­னேற்­றத்­திற்­குக் கைகொ­டுத்­துள்­ளன என்று அவர் குறிப்­பிட்­டார்.

திரு வருண், 2011ஆம் ஆண்­டில் எஸ்­ஜே­ஐ­யில் தம் கல்­விப் பய­ணத்தை முடித்­தார். இன்று சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­தில் தேவை­கள் அறி­யும் ஆய்­வா­ள­ரா­க­வும் திட்ட மேலா­ள­ரா­க­வும் பணி­யாற்றி வரு­கி­றார்.

தற்­போ­தைய பணிக்­காக தேவைப்­படும் அடிப்­ப­டை அம்சங்களைச் செய்து முடிக்க, உயர்­நி­லைப் பள்­ளி­யில் கற்­றுக்­கொண்ட கணி­த­மும் இதர பாடங்­களும் பேரு­தவி புரிவதாக அவர் கூறி­னார்.

பள்ளி ஆசி­ரி­யர்­கள் தமக்­குத் துணை­பு­ரிந்த நாள்­களை நினை­வு­கூர்ந்த திரு வருண், பாடத்­தை­யும் மிகுந்த ஈடு­பாட்­டு­டன் தெளி­வுற விளக்­கிய தம்­மு­டைய உயி­ரி­யல் ஆசி­ரி­யர் திரு லிம், வரலாற்று ஆசிரியர் திரு டெரன்ஸ் ஆகியோர் தமக்கு உத்­வே­க­மாய் இருந்­த­தைக் குறிப்­பிட்­டார்.

ஒரு முறை­கூட எரிச்­ச­ல­டை­யா­மல் பாடத்­தைத் தெளி­வா­கக் கற்­பிக்க திரு லிம் முயல்­வ­து­டன் பாடத்தை உற்­சா­க­மாக கற்­றுக்­கொள்ள புதுப்­புது சலிப்பு தட்­டாத வழி­க­ளைக் கண்­ட­றிந்து அவர் சொல்­லிக் கொடுத்து திரு வரு­ணின் மன­தில் நீங்கா இடத்­தைப் பிடித்­தார்.

இத­னால் பாடங்­களை வெறும் தேர்­வுப் பாடங்­க­ளாகப் பார்க்­கா­மல் கதை­யாக பார்க்­கும் அணு­கு­மு­றையை அறிந்து­கொண்டு தேர்­வுகளிலும் திரு வருண் சிறப்­பா­கச் செய்­தார்.

பொது­வா­கவே செயின்ட் ஜோசப் கல்வி நிலை­யத்­தில் படித்­த­வர்­கள் அனை­வ­ரும் ஒரு பெரிய குடும்­பம் என்று திரு வருண்­மூர்த்தி குறிப்­பிட்­டார். மற்ற பள்­ளி­களில் அதி­கம் காணப்­ப­டாத இந்த உறவு, தமது முன்­னாள் பள்­ளி­யில் உள்­ள­தாக அவர் பெரு­மை­யு­டன் கூறி­னார்.

எங்­க­ளி­ட­மி­ருந்து விடை­பெ­று­வ­தற்கு­முன் அவர், “பிடித்­த­மா­ன­தைச் செய்­யும்­போது தோல்வி ஏற்­பட்­டால்­கூட அதை வெற்­றி­யாக மாற்ற வேண்­டும் என்ற ஊக்கம் எப்போதுமே ஒரு­வ­ருக்­குத் தேவை,” என்­றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!