வாழ்க்கைச் சம்பவங்களும் பள்ளிப் பாடங்களாகும்

நாம் இன்று நவ­நா­க­ரிக உல­கில் வாழ்­கி­றோம். ஆனால் வச­தி­கள் பல இல்­லாத ஒரு கால­கட்­டத்­தில் இரண்டு வேலை­க­ளைச் செய்­த­வாறு படிக்க வேண்­டிய சூழ்­நி­லை­யில் வளர்ந்­தார் திரு லூயிஸ் எல்­வின் நாதன்.

கல்­வி­யைக் கைவி­டா­மல் தேர்ச்­சி­யும் பெற்ற திரு எல்­வினை, நாங்­கள் எங்­கள் பள்­ளி­யின் முன்­னாள் மாண­வர் என்ற பெரு­மி­தத்­து­டன் பேட்டி காண முடிவெடுத்தோம்.

நமது வாழ்க்­கை­யில் நாம் மட்­டுமே மாற்­றங்­க­ளைக் கொண்­டு­வர முடி­யும் என்று திரு எல்­வின் வழி­யாக நாங்­கள் உணர்ந்­தோம்.

இன்று 47 வயது திரு எல்­வின், ஒரு பொறி­யா­ள­ராக உயர்ந்து தம் பணி­யி­டத்­தில் ஒரு குழு­வுக்­குத் தலை­வராக இருக்­கி­றார்.

வானூர்­தி­க­ளுக்கு உரிய பாது­காப்பு கிடைப்­பது தொடர்­பான ஒப்­பந்­தங்­களில் கையெ­ழுத்­தி­டும் பொறுப்பையும் திரு எல்­வின் மேற்கொள்கிறார்.

சிங்­கப்­பூ­ரில் பிறந்த இவர், கம்­போங் பாரு­வில் அமைந்­தி­ருந்த டி லா சால் தொடக்­கப்­பள்­ளி­யில் பயின்­றார்.

சிறு­வ­ய­தி­லி­ருந்தே கட்­ட­டங்­கள் மீது அதிக ஆர்­வம் கொண்­டி­ருந்த அவர், தமது வீட்­ட­ரு­கில் நடக்­கும் கட்­டட வேலை­களைக் கவ­னித்து வந்­தார்.

நெச­வுத்­தொ­ழில், மருத்­து­வத் தொழில் அல்­லது பொறி­யி­யல் துறை ஆகி­ய­வற்­றி­லி­ருந்து ஏதே­னும் ஒரு துறை­யைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டி­ய நிலை ஏற்பட்டபோது, அவர் கட்­ட­டங்­கள் மீதி­ருந்த தம் ஆர்­வத்தால் பொறி­யி­யல் துறை­யைத் தேர்ந்­தெ­டுத்­தார்.

பொறி­யி­யல் துறை­யில் வேக­மான வளர்ச்சி இருக்­கும் என்­றும் தமக்கு நிறைய வாய்ப்­பு­கள் கிட்­டும் என்­றும் எண்ணி அதற்­கான படிப்­பை­யும் மேற்­கொண்­டார்.

ஒவ்­வோர் ஆணின் வெற்­றிக்­குப் பின்­னால் ஒரு பெண் இருப்­பார் என்­பது போல இவ­ருக்­குப் பக்­க­ப­ல­மாக இருந்­தது இவ­ரின் தாயார்.

மலாய் மொழி படித்து வந்த திரு எல்­வினை, கல்வி அமைச்­சி­டம் பேசி தமிழ்மொழிப் பாடத்­துக்கு மாற்­ற­வும் வைத்­தார் அவர் அன்னை.

திரு­ம­ண­மான பின், மனை­வி­யி­ட­மும் ஆலோ­சனை நாடி தம்மை மேம்­படுத்­திக்­கொள்ள திரு எல்­வின் முற்­பட்­டார்.

அவ­ரின் திரு­மண வாழ்க்கை தொடங்­கி­ய­போது குறை­வான சம்­ப­ளமே அவ­ருக்­குக் கிடைத்­தது. பெண் குழந்தை ஒன்­றும் அவ­ருக்­குப் பிறப்­பதாக இருந்­தது.

அதே­ச­ம­யம் அவ­ரு­டைய தாயா­ருக்கு உடல்­ந­ல­மில்­லா­மல் போனது. சிறு வய­தில் ஒரு தம்­பி­யும் அவருக்கு இருந்­தார்.

இவ்­வாறு வாழ்க்­கைக்­குச் சவால் விடுக்­கும் பல பொறுப்­பு­கள் அவரை வந்து சேர்ந்­தன.

தம் புதிய பொறுப்­பு­க­ளைச் சமா­ளிக்க திரு எல்­வின் துணைப்­பாட வகுப்­பு­கள் நடத்­தி­னார். அவ­ரி­டம் படித்த மாண­வர்­கள் பலர், இன்று சாத­னை­யா­ளர்­க­ளாக தமக்­குப் பெருமை சேர்த்து வரு­வ­தாக அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

வாழ்க்­கைச் சம்­ப­வங்­கள் நமக்­குப் பாடங்­க­ளை­யும் கற்­பிக்­கின்­றன என்று கூறிய திரு எல்­வின், சவா­லைச் சங்­க­ட­மா­கக் கரு­தா­மல் வாழ்க்­கை­யின் ஓர் அங்­க­மாக எண்ணி நடை­போட வேண்­டும் என்­றார்.

செயின்ட் ஜோசப் கல்வி நிலை­யத்­தில் தாம் படித்த காலத்­தில் தம்­மு­டைய ஆசி­ரி­யர் திரு­மதி சிசி­லியா, தமக்கு அதிக ஊக்­க­ம­ளித்­த­தாகத் தெரி­வித்­தார்.

ஓர் ஆசி­ரி­ய­ராக மட்­டு­மல்­லா­மல் வாழ்க்­கைக்கு ஒரு வழி­காட்­டி­யா­க­வும் விளங்­கி­னார் அவர் என்று திரு எல்­வின் நினை­வு­கூர்ந்­தார்.

பாடங்­க­ளுக்­கும் பொழு­து­போக்­கு­களுக்­கும் நேரத்­தைச் சம­மாக ஒதுக்கி ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­மு­றை­யைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று ஆசி­ரி­யர்­கள் வலி­யு­றுத்­தி­ய­தை­யும் அவர் குறிப்­பிட்­டார்.

தடை­க­ளைக் கண்டு அஞ்­சா­மல் இன்­று­வரை பீடு­நடை போட்டு வரும் திரு எல்­வினை, எங்­கள் தலை­மு­றை­யி­னர் ஒரு சிறந்த முன்­னு­தா­ர­ண­மா­கக் கரு­து­கி­றோம்.

படங்கள்: நேர்காணலில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், செய்தித் தொகுப்பு: ஹர்ஷிதா பாலாஜி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!