முழுமைத் தற்காப்பு அனுபவம் பெறும் வாய்ப்பு

முழுமைத் தற்காப்பு அனுபவம் பெறும் வாய்ப்பு

2 mins read
4c68e298-16ad-4b7f-a65b-eee4dbbffe04
'சேண்ட்பாக்ஸ்' திட்டத்தின் கீழ் 77 யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. படம்: தற்காப்பு அமைச்சு -

முழு­மைத் தற்­காப்பு தினம் ஆண்­டு­தோ­றும் பிப்­ர­வரி 15ஆம் தேதி­யன்று அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது. இந்நாளை முன்­னிட்டு கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் அறி­முகப்­ப­டுத்­தப்­பட்ட முழு­மைத் தற்­காப்பு 'சேண்ட்­பாக்ஸ்' திட்­டத்­தின் கீழ் 77 யோச­னை­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டன. அவற்­றில் நான்கு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டன.

சமூ­கத்­தில் ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய தாக்­கம், முழு­மைத் தற்­காப்பு அம்­சங்­கள் போன்­ற­வற்­றைக் கருதி தேர்­வா­கின.

இதில் 'கொலை மர்­மம் தொடர்­பாக பாத்­தி­ர­மேற்­றல்' விளை­யாட்­டும் ஒன்று. கேலப் டான், ஷெங் ஜியான்­காய் ஆகிய இரு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட இவ்­வி­ளை­யாட்­டில், குற்­றம் நடந்த கற்­ப­னைச் சூழ­லில் கொலையின் பின்னணியில் உள்ள மர்­மத்தை ஆராய வேண்­டும். தீவி­ர­வா­தம், பரு­வ­நிலை மாற்­றம் போன்ற வெவ்­வேறு அச்­சு­றுத்­தல்­க­ளைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை விளை­யாட்டு ஏற்­ப­டுத்­து­கிறது.

இம்­மா­தம் 22-26 தேதி வரை பொது­மக்­கள் சிங்­கப்­பூர் டிஸ்­க­வரி சென்­ட­ருக்­குச் சென்று இந்த விளை­யாட்­டில் இல­வ­ச­மா­கப் பங்­கு­பெ­ற­லாம். விளை­யாட்­டிற்குப் பதிவு செய்ய https://go.gov.sg/tdmmrp என்ற இணை­யத்­த­ளத்தை நாட­லாம்.

கோபு­ரத் தற்­காப்பு விளை­யாட்டு, முழு­மைத் தற்­காப்­புத் தடம் 2.0, சமூ­கத்­தில் அவ­ச­ர­கா­லச் சம்­ப­வங்­கள் தொடர்­பான பாவ­னைப் பயிற்சி ஆகி­யவை தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மற்ற மூன்று திட்­டங்­க­ளா­கும்.

ராணு­வம், சமூ­கம், பொரு­ளி­யல், மின்­னி­யல், உள­வி­யல், குடி­மைத் தற்­காப்பு என்ற ஆறு முழு­மைத் தற்­காப்பு அம்­சங்­க­ளை­யும் இவை வெளிக்­காட்­டும்.

"இத்­திட்­டத்­திற்கு பொது­மக்­கள் அளிக்­கும் ஆத­ரவு, உற்­சா­கம் அளிப்­ப­தாக உள்­ளது. நமது அன்­றாட வாழ்­வில் முழு­மைத் தற்­காப்பு கொண்­டுள்ள முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­து­வ­தாக தேர்­வான இத்­திட்­டங்­கள் விளங்கு­கின்­றன," என்று நெக்­சஸ் நிறு­வ­ன­ரான கொலொ­னல் கொ ஜெரிக்கா கூறி­னார்.

முழு­மைத் தற்­காப்­பு தினத்­தை­யொட்டி மேலும் பல நிகழ்ச்­சி­களும் நட­வ­டிக்­கை­களும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

பொது­மக்­கள் தொடர்ந்து மே 11ஆம் தேதி வரை முழு­மைத் தற்­காப்பு 'சேண்ட்­பாக்ஸ்' திட்­டத்­திற்­குத் தங்­க­ளது யோச­னை­க­ளைச் சமர்ப்­பிக்­க­லாம்.