தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துடிப்பான வாழ்க்கைமுறையில் இளையர் ஆர்வம்

5 mins read
d0be6053-2f35-4d69-b38a-c1372c7c1904
சிங்­கப்­பூ­ரில் ஆரோக்­கிய நிலையை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் மக்­க­ளின் உண­வுப் பழக்­கங்­களை மாற்­று­வ­தற்­கும் வீட்­டி­லும் கடை­க­ளி­லும் ஆரோக்­கி­ய­மான உண­வு வகைகளை மக்­கள் தேர்ந்­தெ­டுக்க வழி­காட்­டு­வ­தற்­கும் சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் பல்­வேறு முயற்­சி­க­ளை எடுத்து வரு­கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 5

கரு­ணா­நிதி துர்கா

சிங்­கப்­பூ­ரர்­கள் ஆரோக்­கி­ய­மான, சுறு­சு­றுப்­பான வாழ்க்­கை­மு­றையை மேற்­கொள்ள வேண்­டும் என்­ப­தற்­காக அர­சாங்­கம் பல திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்தி வரு­கிறது. சிங்­கப்­பூ­ரில் ஆரோக்­கிய நிலையை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் மக்­க­ளின் உண­வுப் பழக்­கங்­களை மாற்­று­வ­தற்­கும் வீட்­டி­லும் கடை­க­ளி­லும் ஆரோக்­கி­ய­மான உண­வு வகைகளை மக்­கள் தேர்ந்­தெ­டுக்க வழி­காட்­டு­வ­தற்­கும் சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் பல்­வேறு முயற்­சி­க­ளை எடுத்து வரு­கிறது.

இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­

மு­றை­யின் முக்­கி­யத்­து­வத்தை எடுத்­து­ரைப்­பது மட்­டு­மல்­லா­மல் மூத்­தோ­ருக்­கான துடிப்­பு­டன் மூப்­ப­டை­தல் திட்­டங்­களும் செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

உடற்­ப­யிற்சி பற்றி இளை­யர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வூட்­டு­வ­தோடு அவர்­க­ளுக்கு அதற்­கான வாய்ப்­பை­யும் அர­சாங்­கம் ஏற்­ப­டுத்­தித் தரு­கிறது.

தொழில்­நுட்­ப­மும் இதற்கு முக்­கி­யப் பங்­காற்றி வரு­கிறது.

ஆரோக்­கி­யத்­துக்­குக் கைகொ­டுக்­கும் செய­லி­கள்

அர­சாங்­கம் 'ஆக்­டிவ்­எஸ்ஜி', 'ஹெல்தி 365' போன்ற தளங்­க­ளின் மூலம் ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­மு­றையை வலி­யு­றுத்தி வரு­கிறது.

'ஆக்­டிவ்­எஸ்ஜி' செய­லி­யைக் கொண்டு பொது­மக்­க­ள் எளி­தில் உடற்­ப­யிற்சி வச­தி­க­ளைப் பயன்­ப­டுத்த முன்­ப­திவு செய்ய முடி­வ­து­டன் பல­த­ரப்­பட்ட வகுப்­பு­க­ளுக்­கும் பதிவு செய்­து­கொள்­ள­வும் முடி­கிறது.

'ஹெல்தி 365' செய­லி­வழி உடற்­ப­யிற்சி மட்­டு­மல்­லாது பொது­மக்­கள் ஆரோக்­கி­ய­மான உண­வு­மு­றை­யைக் கடைப்­பி­டிப்­பது ஊக்­கு­விக்­கப்­ப­டு­கிறது.

உடற்­ப­யிற்சி ஆர்­வ­ல­ராக விளங்­கும் சிட்­டி­பாபு அஸ்­வின், 18, உடற்­ப­யிற்சி சார்ந்த அர­சாங்­கத் திட்­டங்­க­ளால் தான் பலன் அடைந்துள்ளதா­கக் கூறுகிறார்.

'ஹெல்தி 365' செய­லி­யில் உள்ள 'ஹெல்த்­பாய்ன்ட்ஸ்' (Healthpoints) என்ற அம்­சத்­தின் வாயி­லாக புள்­ளி­கள் சேக­ரித்து அவற்­றின் மூலம் பல சலு­கை­

க­ளைத் தன்­னால் பெற முடி­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"ஒரு குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யில் புள்­ளி­க­ளைச் சேக­ரித்­து­விட்­டால் அடுத்த முறை இல­வ­ச­மா­கவோ அல்­லது சலு­கை­க­ளு­டனோ நம்­மால் உடற்­ப­யிற்சி வச­தி­க­ளுக்­கும் வகுப்­பு­க­ளுக்­கும் பதி­வு­செய்ய முடி­கிறது," என்­றார் அஸ்­வின்.

இச்­செ­யலி தனது உண­வு­முறை ஆரோக்­கி­ய­மாக இருப்­பதை உறு­தி­செய்ய உத­வு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

"சில உண­வ­கங்­களில் சாப்­பிட்ட பிறகு அதன் ரசீ­தி­லுள்ள 'கியூ­ஆர்' குறி­யீட்டை வருடி, நாம் ஆரோக்­கி­ய­மான உணவை வாங்­கி­யி­ருந்­தால் புள்­ளி­கள் பெற­லாம். இம்­மு­யற்­சி­கள் நிச்­ச­யம் ஆரோக்­கிய வாழ்க்­கை­மு­றைக்­கும் ஆரோக்­கிய உண­வுப் பழக்­கத்­திற்­கும் வழி­வ­குத்­துள்­ளன," என்று தெரி­வித்­தார் அஸ்­வின்.

'ஆக்­டிவ்­எஸ்ஜி' செய­லி­யை­யும் பயன்­ப­டுத்­தும் இவர், அச்­செ­ய­லி­யின் மூலம் தன்­னால் சுல­ப­மாக விளை­யாட்டு இட வச­தி­க­ளுக்­குப் பதிவு செய்ய முடி­வ­தோடு அந்­நே­ரத்­தில் அந்­தந்த இடங்களில் விளையாட்டு வச­தி­களில் உள்ள கூட்­டத்­தை­யும் அறிந்­திட முடி­கிறது என்­றார்.

நீச்­ச­லில் அதீத ஆர்­வம் கொண்ட ஸாத­னாஸ்ரீ தச­ர­தன், 18, 'ஆக்­டிவ்­எஸ்ஜி' செய­லியை அதி­க­மா­கப் பயன்­ப­டுத்­திப் பலன் அடைவதாகக் கூறி­னார்.

'ஆக்­டிவ்­எஸ்ஜி'யில் வழங்­கப்­படும் பல­த­ரப்­பட்ட நட­வ­டிக்­கை­களும் விளை­யாட்­டு­களும் இவரை ஒவ்­வொரு முறை­யும் வெவ்­வேறு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட ஊக்­கு­விப்­ப­தோடு அவ­ரால் தொடர்ந்து புதி­ய­ன­வற்­றைக் கற்­றுக்­கொள்ள முடி­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

'ஆக்­டிவ்­எஸ்ஜி' உறுப்­பி­ன­ராக இருக்­கும் 15 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு $100 தங்­க­ளது 'ஆக்­டிவ்­எஸ்ஜி' கணக்­கில் நிரப்­பப்­படும்.

"இவ்­வா­றான சலு­கை­களை வழங்­கு­வ­தால் தொடர்ந்து உடற்­ப­யிற்சி செய்ய வேண்­டும் அல்­லது புதி­ய­ன­வற்­றைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்ற ஆர்­வம் அதி­க­ரிக்­கிறது. பணத்தை இதற்­காக முத­லீடு செய்­யத் தேவை இருக்­காது," என்று ஸாத­னாஸ்ரீ கூறி­னார்.

ஆரோக்­கி­யம் தொடர்­பான விழிப்­பு­ணர்வு அவ­சி­யம்

அர­சாங்­கம் ஆரோக்­கிய வாழ்க்கை ­மு­றையை ஊக்­கு­விக்­கும் திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்தி இருந்­தா­லும் சில­ருக்கு இன்­ன­மும் இது தொடர்­பான விழிப்­பு­ணர்வு இல்லை. இருப்­பி­னும் பெரும்­பா­லான இளை­யர்­கள் ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­மு­றை­யைப் பின்­பற்­று­வ­தற்கு முயற்சி எடுத்து வரு­வ­து­டன் வெவ்­வேறு தளங்­க­ளின் மூல­மா­க­வும் ஆரோக்­கிய வாழ்க்­கை ­மு­றை­யைக் கடைப்­பி­டித்து வரு­கின்­ற­னர்.

'ஆக்­டிவ்­எஸ்ஜி', 'ஹெல்தி 365' போன்ற செய­லி­க­ளைத் தான் பயன்­ப­டுத்­தி­ய­தில்லை என்­றா­லும் ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­மு­றை­யைப் பின்­பற்­றத் தான் முயன்று வரு­வ­தாக ரமேஷ் குமார் சகானா அவந்­திகா, 18, கூறி­னார்.

பெரும்­பா­லும் தன் வீட்­டிற்கு அருகே அமைந்­துள்ள நடை­பா­தை­கள், மெது­வோட்­டப் பாதை­களில் இவர் மெது­வோட்­டம் செல்­வ­துண்டு. மிதி­வண்டி ஓட்­டு­தல், மெது­வோட்­டம், சறுக்­கு­தல், 'தைச்சி', தற்காப்புக் கலைப் பயிற்சி, நீர் விளை­யாட்­டு­கள் போன்ற நட­வ­டிக்­கை­களை தேசிய பூங்­காக் கழ­கத்­தின் பூங்­காக்­களில் மேற்­கொள்­ள­லாம்.

சுற்­றுச்­சூ­ழல், கட்­ட­மைப்பு ஆகிய அம்­சங்­க­ளின் மூல­மா­க­வும் அர­சாங்­கம் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே மேலும் சுறு­சு­றுப்­பான வாழ்க்­கை­மு­றையை ஊக்­கு­விக்க முயற்­சி­கள் எடுத்து வரு­கிறது.

"உடல் ஆரோக்­கி­யத்­திற்கு மட்­டு­மல்­லாது மன­ந­ல­னுக்­கும் கூடு­தல் முக்­கி­யத்­து­வம் கொடுப்­ப­தோடு அத­னைப் பற்­றிய விழிப்­பு­ணர்வு கூடு­த­லாக வேண்­டும்," என சகானா வலி­யு­றுத்­தி­னார்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் 'ஆக்­டிவ்­எஸ்ஜி' செய­லி­யைப் பயன்­ப­டுத்தி வந்த கிரித்­திஷா மாரி­முத்து, 18, பள்ளி வாழ்க்­கை­யின்­போது உடற்­ப­யிற்­சிக்­காக நேரம் ஒதுக்­கச் சிர­மப்­பட்­டார்.

பள்ளி நாள்­களில் உடற்­ப­யிற்­சிக்­கென ஏற்­கெ­னவே பள்ளிப் பாட அட்டவணையில் நேரம் ஒதுக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் இச்­செ­ய­லி­யின் அவ­சி­யம் குறைவே என்று கிரித்­திஷா கரு­தி­னார்.

"ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­முறை எனும்­போது அதில் ஆரோக்­கிய உண­வும் முக்­கி­யப் பங்கு வகிக்­கிறது. நான் பெரும்­பா­லும் வீட்டு உண­வையே உண்ப­தால் எனது உண­வு ­மு­றையை என்­னால் சுல­ப­மா­கத் திட்­ட­மிட முடி­கிறது," என்­றார் கிரித்­திஷா.

ஆற்­றலை வளர்த்­துக்­கொள்ள அர­சாங்க ஆத­ரவு

அண்­மை­யில் வெளியான அறி­விப்பில் 4 முதல் 12 வயது வரை­யி­லான சிறு­வர்­க­ளின் 'ஆக்­டிவ்­எஸ்ஜி' கணக்­கில் மே 1ஆம் தேதி­யன்று $100 நிரப்­பப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இதற்­குத் தகு­தி­பெற சிறு­வர்­கள் சிங்­கப்­பூ­ரர் அல்­லது நிரந்­த­ர­வாசி மற்­றும் 'ஆக்­டிவ்­எஸ்ஜி' உறுப்­பி­ன­ராக இருக்க வேண்­டும்.

இந்­நி­லை­யில் 12 வய­துக்­கும் குறைந்­த­வர்­கள் 'ஆக்­டிவ்­எஸ்ஜி' உறுப்­பி­னர் ஆக முடி­யா­தென்­றா­லும் பெற்­றோ­ரின் கணக்­கில் துணை உறுப்­பி­ன­ராக இருந்து சலு­கை­க­ளைப் பெற­லாம்.

இம்­மு­யற்­சி­யின் மூலம் கூடு­த­லான சிறு­வர்­கள் உடற்­ப­யிற்சி செய்ய முன்­வ­ரு­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அதே நேரத்­தில், தகு­தி­பெ­றும் சிறு­வர்­கள் மே 1ஆம் தேதி முதல் அக்­டோ­பர் 31ஆம் தேதிக்­குள் 'ஆக்­டிவ்­எஸ்ஜி' உறுப்­பி­ன­ரா­கத் தங்­க­ளைப் பதிந்­து­கொண்­டால் மொத்­தம் $200 நிரப்­புத்­தொ­கைக்­குத் தகு­தி­பெ­று­வர்.

அது­மட்­டு­மல்­லா­மல் 13 வயது முதல் 17 வயது வரை­யி­லான சிங்­கப்­பூ­ரின் உள்­ளூர் இளம் காற்­பந்­தாட்ட வீரர்­க­ளுக்­குக் கூடு­தல் ஆத­ரவு அளிக்­கும் வகை­யில் தேசிய இளை­யர் அணி­கள் அமைக்­கப்­பட்டு புதிய தேசிய காற்­பந்து மேம்­பாட்டு மையங்­களில் அவர்கள் பயிற்சி பெறு­வர்.

உள்­ளூர்க் காற்­பந்­தாட்ட விளை­யாட்­டா­ளர் அணியை உரு­வாக்­கும் முயற்­சி­யில் இத்­திட்­டம் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அண்­மை­யில் கலா­சார, சமூக, இளை­யர் ­துறை அமைச்­சர் திரு

எட்­வின் டோங் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

தலை­சி­றந்த இளம் விளை­யாட்டாளர்­கள் தங்­க­ளின் பயிற்­சிக்­காக வெளி­நாட்­டுக் கல்­விக்­கூ­டங்­க­ளுக்­கும் அனுப்பி வைக்­கப்­ப­டு­வர்.

'ஆக்­டிவ்­எஸ்ஜி' வழங்­கும் வகுப்­பு­கள், வச­தி­கள் ஆண்டு தொடக்­கத்­தி­லி­ருந்து பொருள் சேவை வரி அதி­க­ரித்­தா­லும் பொது விளை­யாட்டு வச­தி­க­ளின் நுழை­வுக் கட்­ட­ணங்­கள் உயர்த்­தப்­ப­ட­வில்லை.

அது­மட்­டு­மல்­லா­மல் 'ஆக்­டிவ்­ஜிம்' திட்­டத்­தின்­கீழ் உடற்­ப­யிற்­சிக் கூடங்­களில் வகுப்­பு­களும் பயி­ல­ரங்­கு­களும் நடத்­தப்­ப­டு­கின்­றன. அவற்­றில் மெய்­நி­கர் உடற்­ப­யிற்சி நட­வ­டிக்­கை­கள், நட­னம் சார்ந்த உடற்­ப­யிற்சி வகுப்­பு­கள், 'கிக்­பாக்­சிங்' போன்ற 'கார்­டியோ பயிற்­சி­கள், மன அமை­திக்­கான யோகா வகுப்­பு­களும் அடங்­கும். மேல்­வி­வ­ரம் அறிய https://www.myactivesg.com/ என்ற இணை­யப்­பக்­கத்தை நாட­லாம், அல்­லது 'ஆக்­டிவ்­எஸ்ஜி' செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்து பயன்­ப­டுத்­த­லாம்.

சிங்­கப்­பூ­ரின் சிறார்­கள், பதின்ம வய­தி­னர் பிரி­வில் 50 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் மேற்­பட்­டோர் ஒரு நாளுக்­குத் தேவை­யான உடற்­ப­யிற்­சி­க­ளைச் செய்­வ­தில்லை என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் அண்­மைய ஆய்வு தெரி­வித்­துள்­ளது. அத்­து­டன் 13 முதல் 17 வய­துப் பிரி­வி­ன­ரி­டையே 23.7 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே மித­மான அளவு முதல் தீவிர அளவு வரை­யி­லான உடற்­ப­யிற்­சி­களை மேற்­கொள்­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் சிங்­கப்­பூ­ரில் வழங்­கப்­படும் வச­தி­களை வாய்ப்­பு­க­ளா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு இளை­யர்­கள் பல­த­ரப்­பட்ட விளை­யாட்­டு­களில் ஈடு­படும் நிலை மேம்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.