பார்வை 2023: அன்பின் ஐந்திணை

அனுஷா செல்­வ­மணி

மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நேரடி நிகழ்­வாக நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தமிழ் இலக்­கிய மன்­றம், சங்க இலக்­கி­யத்­தைத் தழு­விய ‘பார்வை’ எனும் படைப்பை மேடை­ஏற்­றி­யது.

குறுந்­தொ­கையை ஒட்­டிய இந்­தப் படைப்பு, ‘அன்­பின் அழகே’ எனும் தலைப்­பில் சங்க காலக் காதலை இக்­கா­லத்து இளை­யர்­களுக்கு எளி­தில் கொண்டு சேர்க்­கும் விதமாகவும் அவர்­களின் ஆர்­வத்­தைத் தூண்­டும் வகையிலும் அமைந்­தது.

“13 ஆண்­டு­க­ளாக செயல்­பட்டு வரும் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தமிழ் இலக்­கிய மன்­றம், ஒவ்­வோர் ஆண்­டும் தமிழ் மொழி மாதத்­தின்­போது, பார்­வையை மேடை­யேற்­றும். இம்முறை சங்க காலத்­தில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட காதலை அழ­காகச் சித்­தி­ரித்­துள்­ளது,” என்­றார் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தமிழ் இலக்­கிய மன்­றத் தலை­வர் ஸ்ரீவைஷ்­ணவி.

காத­லிக்­கும் இரு­வ­ரி­டையே நில­வும் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­ப­தோடு எந்தவொரு சிறிய சிக்­கலாக இருந்­தா­லும் அதை அப்­படியே விட்­டு­வி­டா­மல் அந்­தப் புனி­த­மான உற­வின் மேல் நம்­பிக்கை வைக்க வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தும் வித­மாக அமைந்­தது நாட­கம்.

நட­ன­ம­ணி­கள், பாட­கர்­கள் எனக் கலை­ஞர்­கள் படைப்புக்கு மேலும் வலுசேர்த்­த­னர்.

நகைச்­சுவை பாணி­யில் கடந்த 1ஆம் தேதி­யன்று உட்­லண்ட்ஸ் வட்­டார நூல­கத்­தில் வளர்­த­மிழ் இயக்­கம் மற்­றும் தமிழ்­மொ­ழிக் கற்­றல் வளர்ச்­சிக் குழு­வின் ஆத­ர­வில் இடம்­பெற்ற இந்­நிகழ்ச்சி, 200 பார்­வை­யா­ளர்­களை ஈர்த்­தது.

நான்கு மாதத் திட்­ட­மி­டு­தலின்­போது இளை­யர்­கள் தமிழ்­மொழி மீது ஆர்­வத்தை வளர்த்­துக்­கொள்­ள­வும் தமிழை ஒரு பாட­மாகப் பிற்­கா­லத்­தில் அவர்­கள் பயில ஊக்­கு­விக்­க­வும் பார்வை அமை­ய­வேண்­டும் என்ற நோக்­கில் சங்க இலக்­கி­யத்­தில் இடம்­பெற்ற முக்­கிய அம்­சங்­கள் கருப்­பொரு­ளா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்

­பட்­டன.

மேலும், காதல் உணர்வை முன்­னிலைப்­படுத்­தி­னால் அது புத்­தாக்க முயற்­சி­யாக இருப்­ப­தோடு இளை­யர்­களை விரை­வில் சென்­ற­டை­யும் என்­றும் உறு­தி­யாக இருந்­த­னர், பார்வை படைப்­பின் இயக்­கு­நர்­க­ளான சிவ­சண்முக பிரியா, 19, மற்­றும் மரியா இமெ­கி­யூ­லட், 21.

வச­னம் எழு­து­தல், படிப்­பிற்­கும் ஒத்­தி­கைக்­கும் நேரத்தை வகுத்­தல், நாட­கத்­திற்­குக் கதா­பாத்­தி­ரங்­களைத் தேர்ந்­தெ­டுத்­தல், குறிப்­பாக அவர்­க­ளுக்­குக் குறுந்­தொ­கை­யைப் புரிய வைத்­தல் போன்ற சவால்­களை இவர்­கள் சந்­தித்­த­போ­தும் பார்வை வெற்றி­க­ர­மாக அரங்­கே­றி­யது.

கதை­யோட்­டம் இல்­லாமல் வெறும் பாடல்­களின் மூலம் சங்க இலக்­கி­யத்­தில் இடம்­பெ­றும் ஐந்­தி­ணை­க­ளைக் கோர்­வை­யாக நாடக வடி­வில் படைப்­பது எளி­தல்ல. இருப்­பினும், தேசிய கல்வி கழ­கத்­தில் தமிழ்­மொ­ழித் துறை­யில் இளங்­க­லைப் பட்­டம் பயி­லும் மரி­யா­வும் பிரி­யா­வும் தங்­க­ளின் விரி­வு­ரை­யா­ளர்­களின் உத­வி­யோடு இதைப் படைத்­த­னர்.

தமிழ் இலக்­கிய மன்­றத்­தின் நாட­கப் பிரி­வில் உறுப்­பி­ன­ராக இருக்­கும் ஸ்ரு­திகா குமார், 19, பெரி­த­ள­வில் நடை­பெ­றும் படைப்­பில் நடித்­தது இதுவே முதல் முறை.

இனி­யாள் கதா­பாத்­தி­ர­மாக, முல்லைக் காட்டுப் பெண்­ணாக நடித்த இவர், “படிப்புச் சுமை அதி­க­மாக இருந்­தா­லும், நடிப்­ப­தில் எனக்குப் பேரார்­வம். மேடை நாட­கத் திறன்­களை வளர்த்­துக்­கொண்­ட­தோடு எனக்கு ஒரு முக்­கி­யக் கதா­பாத்­தி­ரம் அளித்­தது மகிழ்ச்­சிக்­கு­ரி­யது,” என்று பூரிப்­பு­டன் தெரி­வித்­தார்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் முன்­னாள் மாண­வி­யும் நிகழ்ச்­சி­யின் பார்­வை­யா­ளர்­களில் ஒரு­வ­ரு­மான 22 வயது சீனி­வா­சன் ஸாந்­தினி, “நீண்ட காலம் கழித்து மீண்­டும் பார்வை நிகழ்ச்­சி­யைப் பார்­வை­யிட வந்­தது எனக்கு என் பழைய நினை­

வ­லை­களில் பய­ணிப்­பது போல் இருந்­தது. நிகழ்ச்சி மிகப் புது­மை­யா­க­வும் இக்­கா­லத்து இளை­யர்­கள் தொடர்­புப்­ப­டுத்­திப் பார்க்­கும் வகை­யா­க­வும் அமைந்­தது,” என்று பகிர்ந்­து­கொண்­டார்.

படம்: ஏற்பாட்டுக்குழு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!