இயற்கைக்காக குரல் எழுப்பியோருக்கு அங்கீகாரம்

இயற்கை, சுற்­றுப்­பு­றப் பாது­காப்­பில் அரும்­பங்­காற்­றிய பத்து இளை­யர்­க­ளுக்கு ‘10 ஃபோர் ஜீரோ’ விரு­து­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இயற்கை சூழல், நிலை­யான வளர்ச்சி, பரு­வ­நிலை பாது­காப்பு ஆகி­யவை மீது ஆர்­வ­முள்ள இளை­யர்­களை அடை­யா­ளம் கண்டு அவர்­களைப் பாராட்­டு­வ­தற்­கும் அங்­கீ­க­ரிப்­ப­தற்கு ‘கன்­சர்­வே­ஷன் இன்­டர்­நே­ஷ­னல்’ அமைப்பு இந்த­வி­ருதை மே 24ல் அறி­மு­கப்­படுத்­தி­யுள்­ளது.

இளை­யர்­கள் அனை­வ­ரின் கட­மை­யு­ணர்வு, உழைப்பு, உற்­சா­கம் ஆகி­ய­வற்­றைப் பாராட்­டு­வ­தாக ‘கன்­சர்­வே­ஷன் இன்­டர்­நே­ஷ­னல்’ வாரி­யத்­தின் அறங்­கா­வ­ல­ரும் விரு­து­க­ளுக்­கான நடு­வ­ரு­மான திரு­வாட்டி கெட்­ட­லின் டான் தெரி­வித்­தார்.

விரு­து­பெற்ற அந்­தப் பத்து இளை­யர்­கள், அனைத்­து­ல­கச் சுற்­றுப்­புற நிபு­ணர்­க­ளின் வழி­காட்­டு­த­லை­யும் பயிற்­சி­யை­யும் பெற­வுள்­ள­னர். வெளி­நா­டு­களில் நடை­பெ­றும் பரு­வ­நிலை சம்­பந்­தப்­பட்ட உச்­ச­நிலை மாநாடு, வெளிப்­புற ஆய்வு, பயி­ல­ரங்­கு­கள் ஆகி­ய­வற்­றில் கலந்­து­கொண்டு தங்­க­ளது தொடர்பு வட்­டங்­களை விரி­வு­படுத்­தும் வாய்ப்­பி­னைப் பெறு­வர். விரு­து­பெற்­றோ­ரில் இந்­தி­யர்­க­ளான இரு­வ­ரைத் தமிழ் முரசு பேட்டி கண்­டது.

 

பன்­மு­கத்­தன்­மை­யைக் காப்­ப­தில் முனைப்பு

சிறு­வ­னாக இருந்­த­போது சரா­வாக்­கில் ஓராங் ஊத்­தான் குரங்­கு­க­ளைக் கண்­ட­தால் பூத்த களிப்பு, இயற்­கை­யின் பன்­மு­கத்­தன்­மை­யைப் பேண­வேண்­டும் என்ற கடப்­பா­டாக முகம்­மது நஸ்ரி அப்­துல் நாசி­ரின் மன­தில் வளர்ந்­தது. சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தில் நஸ்ரி வழி­காட்­டி­யா­கப் பணி­யாற்றி இந்­தத் துறை­யில் அனு­ப­வத்தை மெல்­லச் சேக­ரிக்க ஆரம்­பித்­தார்.

அப்­போ­துள்ள ஜூரோங் பற­வைப் பூங்­கா­வின் பறவை மருத்­து­வ­ம­னை­யில் விலங்கு தாதி­ய­ரா­கப் பயிற்சி பெற்­றதை மகிழ்ச்­சி­யு­டன் நினை­வு­கூர்ந்­தார் இந்த 24 வயது இளை­யர்.

“சிங்­கப்­பூ­ரைப் பூர்­வி­க­மா­கக் கொண்ட பல்­வேறு பற­வை­க­ளைப் பரா­ம­ரிக்­கும் பொறுப்­பில் இருந்­தேன். அங்கு தொடங்­கிய என் ஆர்­வத்தை உள்­ளூர் இயற்­கைக் குழுக்­கள் மேலும் மூட்­டின,” என்று அவர் கூறி­னார். பின்­னர், ‘பன்­மு­கத்­திற்­கான சிங்­கப்­பூர் இளை­ய­ரின் குரல்­கள்’ என்ற அமைப்­பைப் பற்­றிக் கேள்­விப்­பட்டு அவர் அதில் சேர்ந்­தார்.

இயற்­கைப் பன்­மு­கத்­தன்­மை­யைப் பற்­றிய கொள்கை ஆய்­வின் மீது கவ­னம் செலுத்­தும் இந்த அமைப்பு, மிக உயர்ந்த நிலை­யில் ஏற்­படும் முடி­வு­களில் இளை­யர்­களும் பங்­க­ளிக்­க­லாம் என்­பதை நஸ்­ரிக்கு உணர்த்­தி­யது.

2020ஆம் ஆண்­டில் இந்த அமைப்­பில் சேர்ந்த நஸ்ரி, கடந்த ஆண்டு அதன் நிர்­வாக இயக்­கு­ந­ரா­கப் பொறுப்­பேற்­றார். நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யத்­தின் பெருந்­திட்­டத்­தி­னால் இயற்கை அபா­யம் ஏற்­ப­டக்­கூடிய இடங்­க­ளுக்­குச் சுற்­று­லாக்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யும் ‘அரு­கி­வ­ரும் இருப்­பி­டங்­கள்’ இயக்­கத்தை அவர் அறி­மு­கம் செய்­தி­ருக்­கி­றார்.

 

தூய்­மைப்படுத்­து­வ­தில் ஆர்­வம்

கட­லோ­ரப் பகு­தி­க­ளி­லி­ருந்து குப்­பை­களை அகற்­று­வ­தில் ஆர்­வம் காட்­டு­கி­றார் 27 வயது யாசீர் அமீன். கடற்­க­ரை­க­ளின் தூய்­மை­யைப் பரா­ம­ரிக்­கும் ஈஸ்ட் கோஸ்ட கடற்­க­ரைத் திட்­டத்­தின் இணைத் தலை­வ­ராக அவர் செய­லாற்ற ஆரம்­பித்­தார்.

இந்த நட­வ­டிக்கை மூலம் தன்­னைப் போல சிந்­திக்­கும் பல­ரு­டன் தொடர்­பில் இருக்க முடி­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

“சுற்­றுப்­பு­றத்­தைத் தூய்­மைப்­ப­டுத்த பலர் வரு­வ­தைக் காணும்­போது எனக்கு மகிழ்ச்­சி­யாக இருக்­கிறது,” என்று அவர் கூறி­னார்.

பிற­நா­டு­க­ளைக் காட்­டி­லும் சிங்­கப்­பூ­ரின் கட­லோ­ரத் தூய்மை நல்ல நிலை­யில் இருப்­ப­தால் அது­பற்றி பலர் அதி­கம் யோசிப்­ப­தில்லை என்றா­லும் சுற்­றுப்­பு­றத்­தில் ஏற்படும் பிரச்­சி­னை­க­ளைத் தெரிந்­து­கொள்ள அங்கு சென்று சேவை செய்ய அமீர் ஊக்­கு­விக்­கி­றார்.

“இத்­த­கை­ய திட்­டங்­களை ஏற்­பாடு செய்­வ­தன் மூலம் சிங்கப்­பூ­ரின் கட­லோர, கடல்­சார் சுற்­றுப்­பு­றங்­களை என்­னால் மேலும் தெரிந்­து­கொள்ள முடிந்­தது. கழிவு நிர்­வா­கத்­தில் உள்ள சிக்­கல்­க­ளை­யும் துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­கள் எதிர்­கொள்­ளும் சிர­மங்­க­ளை­யும் பற்றி தெரிந்­து­கொள்ள முடி­கிறது,” என்று அவர் கூறி­னார்.

கழிவு நிர்­வா­கத்­தில் தமது திறனை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல கடந்த ஆண்­டின் முற்­ப­கு­தி­யில் அமீர் ‘ஸ்ட்­ரைடி’ அமைப்­பில் அதன் சமூக, திட்­டத் தலை­வ­ரா­கச் சேர்ந்­தார்.

அதே ஆண்­டில் அவர் அதன் தலைமை அதி­கா­ரி­யாகப் பொறுப்­பேற்­றார். பய­னீட்­டாளர்கள் தாங்­கள் பெருக்­கும் குப்பையை ஊக்­கு­விக்­கும் ‘ஸ்ட்ரைடி’ செயலி தற்­போது 74 நாடு­களில் 5,700 பேரால் பயன்படுத்த பட்டு வரு­கிறது.

 

janark@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!