அச்சத்தை முறியடித்து வாழ்வில் உச்சம் அடைந்து பீடு நடைபோட ஆசை

அச்சத்தை முறியடித்து வாழ்வில் உச்சம் அடைந்து பீடு நடைபோட ஆசை

2 mins read
79489939-19e9-4978-8b4a-3e2359756f2b
-

சபிதா ஜெய­கு­மார்

அச்­சங்­கள் பல­வற்றை வென்று படைப்­பி­ரிவு தள­ப­தி­யாக தனது பய­ணத்தைத் தொடர ஆவ­லு­டன் எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கி­றார் இளை­ஞர் கார்த்­திக் ராஜ் கருணா­நிதி.

மின்­னல் படை­யைச் சேர்ந்த கார்த்­திக், கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற பயிற்சி அதி­காரி பதவி நிய­மன அணி­வ­குப்­பில் அதி­கா­ரி­யாக நிய­மிக்­கப்­பட்­டார்.

இரண்­டாம் லெஃப்டி­னண்ட் பத­விக்கு உயர்த்­தப்­பட்­டுள்ள 21 வயது கார்த்­திக் ராஜ் வரும் காலத்­தில் அவர் மேற்­பார்­வை­யின்­கீழ் இருக்­கும் அணியை சிறப்­பாக வழி­ந­டத்த நோக்­கம் கொண்­டுள்­ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமது தேசிய சேவை­யைத் தொடங்­கிய கார்த்­திக், பல்­வேறு சிர­மங்­க­ளை­யும் சவால்­க­ளை­யும் எதிர்­நோக்­கி­னார்.

"ஒவ்­வொருநாளும் புதிய சவால்­கள் தோன்­றின. ஆனால் அவற்­றைச் சமா­ளித்­துப் பணி­யைச் செய்து முடிக்­கும் பழக்­கத்தை வளர்த்­துக்கொண்­டேன்," என்று குறிப்­பிட்­டார் கார்த்­திக்.

கடி­ன­மான அடிப்­படை ரா­ணு­வப் பயிற்­சி­யி­லும் அது கற்­றுத்­தந்த பாடங்­க­ளை­யும் வழங்­கிய அனு­ப­வங்­க­ளை­யும் பக்­கு­வத்­து­டன் கார்த்­திக் ஏற்­றுக்­கொண்­டார். ஒவ்­வொரு ராணுவ வீரனுக்கும் பரிச்­ச­ய­மான அடிப்­படைத் திறன்­களை அந்தப் பயிற்சி தமக்குக் கற்­றுக் கொடுத்­தது என்றார் கார்த்திக்.

பின்பு மின்னல் படைத் தள­பதி பிரிவு பயிற்சித் திட்­டத்­தில் இணைந்­து­கொண்­டார் கார்த்­திக்.

"அங்கு மீள்­தி­றன், பொறுப்­பு­ணர்ச்சி முத­லிய முக்­கிய விழு­மி­யங்­க­ளைக் கற்­றுக்­கொண்­டேன். குறிப்­பாக, தலை­மைத்­து­வத்­தின் அர்த்­தத்தை இந்தப் பயிற்சி எனக்குக் கற்றுத் தந்தது. நான் பங்­கெ­டுத்த ஒவ்­வொரு பயிற்சி வகுப்­பும் எனது திறன்களை மேம்படுத்தியது. அத­னால் என் தேசிய சேவை அனு­ப­வ­மும் செழு­மை­யா­னது," என்று தெரி­வித்­தார் கார்த்­திக்.

ஆறு மாதப் பயிற்­சி­யில் தொடர்ந்து முனைப்­பு­டன் ஈடு­படு­வது கார்த்­திக்­கிற்குக் கடி­ன­மாக இருந்­தது. பயிற்சியை ஏன் தொடர வேண்­டும் என்ற கேள்வி­கள் அவ்­வப்­போது தமது மன­தில் தோன்­றியதாக அவர் கூறினார்.

ஆனால் பயிற்சியைத் தொடர எடுத்த முடிவு பலன் தந்துள்ளதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

"உயரமான இடங்களில் இருப்பது எனக்குப் பயத்தை ஏற்படுத்தும். தள­ப­தி­யாகப் பயிற்சி பள்­ளி­யில் சேர்ந்­த­போது வான்­குடை சாக­சம் செய்ய வேண்­டும் என்ற நிபந்­தனை இருந்­தது.

"ஹெலி­காப்­ட­ரில் இருந்து வெளியே அடி எடுத்து வைக்க என்­னால் முடி­ய­வில்லை. என்னைப் போன்ற, பயந்தவர்கள் அதைச் செய்­ததைக்கண்­டேன்.

"என்னால் முடியும் என்ற உணர்வும் பயிற்­று­விப்­பா­ளர்­களின் உந்­து­த­லும் தடை­களைத் தாண்ட உத­வின," என்று பகிர்ந்து ­கொண்­டார் கார்த்­திக் ராஜ்.

பயிற்சி அதி­கா­ரிப் பள்­ளி­யில் அவ­ருக்குத் துணை­யாக இருந்த தள­ப­தி­கள் மாண­வர்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி செயல்­பட்­ட­னர். எவ்­வ­ளவு வேலைப் பளு இருப்­பினும் சக வீரர்­க­ளின் நிலையைப் புரிந்து நடந்துகொண்­ட­னர்.

"இவர்­கள் போன்ற ஒரு சிறந்த தலை­வ­ராக வளர்ந்து மிளிர ஆசைப்­ப­டு­கி­றேன். அவர்­கள் அளித்த ஊக்­கம்தான் என்னை இந்தப் பாதை­யில் செல்ல ஊக்­கு­வித்­தது," என்று கூறி­னார் கார்த்­திக்.

sabitha@sph.com.sg