நுனிப்புல் மேயாமல் திறன்களை ஆழமாகக் கற்பதில் பொறுமையும் மன உறுதியும் தேவை.
கற்கும்போதே வேலைப்பயிற்சிகளை மேற்கொண்டால் எந்தெந்தத் திறன்கள் தங்களது வருங்கால வேலையிடத்திற்குத் தேவைப்படும் என்பது குறித்த முன்அனுபவத்தைப் பெறலாம்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் அவ்வப்போது ஏற்படுவதால் அதுபற்றி தெரிந்தவர்களுடன் தொடர்பில் இருப்பது நல்லது.
கற்றலுடன் நின்றுவிடாமல் அது குறித்து தொடர்ந்து கேள்வி கேட்பதன் மூலம் படைப்பூக்கத்தை வளர்த்துக்கொள்ள முடியும்.

