தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறப்புத் தேவையுடையோருக்காக வேலையிடப் புத்தாக்கங்கள்

2 mins read
97b365b8-db45-49bf-8e7c-410cb300441d
‘இன்க்லூஸ்’ ஆட்சேர்ப்பாளர் ஃபதிமா சோரா, L’Oréal, SGP உணவுகள், Infosys நிர்வாகிகளுடன் சிறப்புத் தேவை உடையோருக்கான வேலைவாய்ப்புகள் பற்றிய கலந்துரையாடலை நடத்தினார். 2017ல் விபத்தினால் கழுத்துக்குக்கீழ் அசைவை இழந்த ஃபதிமா (இடது), தற்போது சிறப்புத் தேவையுடையோருக்குக் குரல் கொடுக்கிறார்; உடற்பயிற்சியிலும் அசத்திவருகிறார். - படம்: ரவி சிங்காரம்

சிறப்புத் தேவையுடையோர் மேலும் எளிதில் வேலை செய்வதற்குத் தொழில்நுட்பம்வழி ஆதரவு தரும் நோக்கில், இளையர்கள் சிலர் புத்தாக்கத் தீர்வுகளை உருவாக்கியுள்ளனர்.

18 முதல் 30 வயது வரையிலான ஆறு இளையர் அணிகளைச் சார்ந்த 30 இளையர்கள், நான்கு மாதங்களாகத் திட்டமிட்டு இவற்றை உருவாக்கியுள்ளனர்.

செப்டம்பர் 30ஆம் தேதி, ‘எஞ்சினியரிங் குட்’ அறநிறுவனத்தின் ஐந்தாவது வருடாந்தர ‘டெக் ஃபார் குட்’ சமூக விழாவில் அவை காட்சிக்கு வைக்கப்பட்டன.

தேசிய இளையர் மன்றம், ‘ஏஎம்டி’, ‘கூகல்’, ‘கேப்லென்’, ‘ஜேம்ஸ் டைசன்’ அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவில் இவ்வாண்டு விழா நடைபெற்றது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேசிய நூலக வாரிய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் நாம் ஒவ்வொருவரும் பங்களிக்கலாம். இன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புத்தாக்கத் தீர்வுகள் இதற்கு நல்ல சான்று.

“இவ்வாண்டு நம் சமூக சேவைப் பங்காளிகளைப் பாராட்டும் வேளையில், பொதுச் சேவை, தனியார் துறை, மக்கள் சேவை ஆகியவற்றில் உள்ள அனைத்துப் பங்காளிகளையும் பாராட்டுகிறேன்,” என்றார் திரு சுவா.

நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக, திரு எரிக் சுவாவிற்கும் ‘மைக்கேல் பேஜ்’ நிறுவனத்தின் ‘டைவர்சிடி, இங்க்லூசிவிடி’ வாடிக்கையாளர் தீர்வுகள் பிரிவின் தலைவர் ஆலிஸ்டருக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது. ஆலிஸ்டர் சக்கர நாற்காலியைப்  பயன்படுத்துபவர்.
நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக, திரு எரிக் சுவாவிற்கும் ‘மைக்கேல் பேஜ்’ நிறுவனத்தின் ‘டைவர்சிடி, இங்க்லூசிவிடி’ வாடிக்கையாளர் தீர்வுகள் பிரிவின் தலைவர் ஆலிஸ்டருக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது. ஆலிஸ்டர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர். - படம்: ரவி சிங்காரம்

விழாவின் கருப்பொருள் ‘அனைவரையும் உள்ளடக்கிய வேலை வாய்ப்புகள்’. இதனையொட்டி, சிறப்புத் தேவைகள் கொண்டோரை வேலைசெய்ய தயார்ப்படுத்தும் நோக்கில், ஆறு சமூகப் பங்காளிகளோடு இணைந்து ஆலோசித்தனர் இளையர்கள்.

தசை வலுவிழப்பு நோயாளிகள் நலச் சங்கம், ‘இன்க்லூஸ்’, ‘செயிண்ட் ஆண்ட்ரூஸ் ஆட்டிசம்’ மையம், ‘மைண்ட்ஸ்’, ‘சிங் மீடியா’, ஆலிஸ்டர் ஆகிய பங்காளிகளுடன் இணைந்து ஆறு சவால்களுக்கு அவர்கள் தீர்வுகண்டனர்.

பங்குபெற்ற ஆறு அணிகளின் தொழில்நுட்பத் தீர்வுகளைப் பின்வரும் புகைப்படங்களில் காணலாம். அவற்றைச் சோதிக்க விரும்புவோர் ‘எஞ்சினியரிங் குட்’டைத் தொடர்புகொள்ளலாம். மேல்விவரங்களுக்கு: https://tech4good.engineeringgood.org

பெண்டிமியரில் அமைந்திருக்கும் ‘எஞ்சினியரிங் குட்’ அறநிறுவனம், பழைய மடிக்கணினிகளை நன்கொடையாகப் பெற்று, மறுசுழற்சி செய்து, வசதி குறைந்தோருக்கு வழங்கிவருகிறது. அன்றாடப் பொருள்களை சிறப்புத் தேவையுடையோர், மூத்தோருக்கான கருவிகளாகவும் மறுவடிவமைத்து வழங்குகிறது.

‘மைண்ட்ஸ்’ அடுமனையாளர்கள், தேவையான உணவுப் பொருள்களின் எடையைக் கணக்கிட சிரமப்படுவதால் ஒளிமூலம் எடையைக் குறிக்கும் தராசைத் தன் குழுவினருடன் வடிவமைத்துள்ளார் ‘ஐடிஇ ஈஸ்ட்’ மாணவி பாலாஜி இலக்கியா, 18.
‘மைண்ட்ஸ்’ அடுமனையாளர்கள், தேவையான உணவுப் பொருள்களின் எடையைக் கணக்கிட சிரமப்படுவதால் ஒளிமூலம் எடையைக் குறிக்கும் தராசைத் தன் குழுவினருடன் வடிவமைத்துள்ளார் ‘ஐடிஇ ஈஸ்ட்’ மாணவி பாலாஜி இலக்கியா, 18. - படம்: ரவி சிங்காரம்
‘சிங் மீடியா’, ‘எஸ்ஜிஎனேபல்’ உடன் இணைந்து சிறப்புத் தேவையுடையோருக்கு புகைப்படம், காணொளிப் பயிலரங்குகளை வழங்கிவருகிறது. பக்கவாதத்தினால் கைகளில் வலு குன்றி, சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் புகைப்படக் கருவியை அங்குமிங்கும் நகர்த்த சிரமப்படுவதால் இத்துறையில் வேலைவாய்ப்புகள் அவர்களுக்கு அரிது. இதற்குத் தீர்வுகண்டுள்ளனர் ‘மீடியாபிலிடி’ குழுவினர்.
‘சிங் மீடியா’, ‘எஸ்ஜிஎனேபல்’ உடன் இணைந்து சிறப்புத் தேவையுடையோருக்கு புகைப்படம், காணொளிப் பயிலரங்குகளை வழங்கிவருகிறது. பக்கவாதத்தினால் கைகளில் வலு குன்றி, சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் புகைப்படக் கருவியை அங்குமிங்கும் நகர்த்த சிரமப்படுவதால் இத்துறையில் வேலைவாய்ப்புகள் அவர்களுக்கு அரிது. இதற்குத் தீர்வுகண்டுள்ளனர் ‘மீடியாபிலிடி’ குழுவினர். - படம்: ‘சிங் மீடியா’
தசை வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டோர் வரைய, ஓவியம் தீட்ட உதவும் கருவியை முப்பரிமாண அச்சுமுறையைப் பயன்படுத்திச் செய்துள்ளனர் ‘எஸ்யூடிடி’ பல்கலைக்கழக கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு மாணவி அத்வைதா காத்தவராயன், 22 (வலது) மற்றும் குழுவினர்.
தசை வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டோர் வரைய, ஓவியம் தீட்ட உதவும் கருவியை முப்பரிமாண அச்சுமுறையைப் பயன்படுத்திச் செய்துள்ளனர் ‘எஸ்யூடிடி’ பல்கலைக்கழக கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு மாணவி அத்வைதா காத்தவராயன், 22 (வலது) மற்றும் குழுவினர். - படம்: ரவி சிங்காரம்
சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் மத்திய வர்த்தக வட்டாரத்தில் வேலையிடங்களுக்குச் செல்லும்போது மேடான சாலை ஓரங்கள், கட்டட நுழைவாயிலில் படிகள், எட்டாத உயரத்தில் நுழைவு அட்டை செலுத்துமிடங்கள், கூரையில்லாத நடைபாதைகள் போன்ற சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவற்றுக்குத் தீர்வு கண்டுள்ளனர் ‘வசீல்ஸ்’ குழுவினர்.
சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் மத்திய வர்த்தக வட்டாரத்தில் வேலையிடங்களுக்குச் செல்லும்போது மேடான சாலை ஓரங்கள், கட்டட நுழைவாயிலில் படிகள், எட்டாத உயரத்தில் நுழைவு அட்டை செலுத்துமிடங்கள், கூரையில்லாத நடைபாதைகள் போன்ற சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவற்றுக்குத் தீர்வு கண்டுள்ளனர் ‘வசீல்ஸ்’ குழுவினர். - படம்: ரவி சிங்காரம்
‘இன்க்லூஸ்’ நிறுவனம், வேலைபார்க்கும் சிறப்புத் தேவையுடையோரை மனரீதியாகவும் தொழில்ரீதியாகவும் ஆதரிக்க செயலி ஒன்றைத் தயாரித்துள்ளனர். செயலியை மேம்படுத்த இளையரணி பரிந்துரைகள் வழங்கியுள்ளது.
‘இன்க்லூஸ்’ நிறுவனம், வேலைபார்க்கும் சிறப்புத் தேவையுடையோரை மனரீதியாகவும் தொழில்ரீதியாகவும் ஆதரிக்க செயலி ஒன்றைத் தயாரித்துள்ளனர். செயலியை மேம்படுத்த இளையரணி பரிந்துரைகள் வழங்கியுள்ளது. - படம்: ரவி சிங்காரம்
‘ஹைட்ரோஃபோனிக்ஸ்’ முறையில் விவசாயம் செய்யும் மதியிறுக்க  பாதிப்புடையோர் ஒவ்வொரு விதையாக நடுவதற்கு சிரமப்படுகின்றனர். இதற்குப் புத்தாக்கத் தீர்வு வழங்கியுள்ளனர் இந்த இளையரணி.
‘ஹைட்ரோஃபோனிக்ஸ்’ முறையில் விவசாயம் செய்யும் மதியிறுக்க பாதிப்புடையோர் ஒவ்வொரு விதையாக நடுவதற்கு சிரமப்படுகின்றனர். இதற்குப் புத்தாக்கத் தீர்வு வழங்கியுள்ளனர் இந்த இளையரணி. - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்