தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துலக கணினி நிரலாக்கப் போட்டியில் மூன்றாம் பரிசை வென்ற சிங்கப்பூர் மாணவர்

1 mins read
72907ee1-9c6f-4a82-9f5c-da15ef5287f7
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் வெனெஸ் விஜயா (வலது). - படம்: டிசிஎஸ் நிறுவனம்

‘டாடா கன்சல்டன்சி’ நிறுவனம் நடத்திய அனைத்துலக ‘கோட்விட்டா’ எனும் கணினி நிரலாக்கப் போட்டியில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் வெனெஸ் விஜயா மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற ஆகப் பெரிய கணினி நிரலாக்கப் போட்டி இது. தொடர்ந்து 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப்போட்டியில், 94 நாடுகளை சேர்ந்த 444,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இரு கட்டங்களைத் தாண்டி, ஒன்பது நாடுகளை சேர்ந்த 25 பேர் பங்கேற்ற இறுதிப் போட்டியில் மூன்றாமிடம் வென்றுள்ளார் வெனெஸ். இவருக்கு மூவாயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிசு வழங்கப்பட்டது.

உலகின் பல பகுதிகளில் பயிலும் மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொணர இந்தப் போட்டி சிறந்த களமாக அமைவதாக டி.சி.எஸ் நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி ஹாரிக் வின் கூறினார்.

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு, டிசிஎஸ் நிறுவனத்தின் ஆய்வு புத்தாக்கக் குழுவில் உள்ளகப்பயிற்சி வாய்ப்பு அளிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்