தமிழர் பேரவையின் ‘தமிழோடு வளர்வோம்’

நமது தாய்மொழியை என்றும் மறவாமல் அதை வாழும் மொழியாகக் காக்‌க நமது பங்கை ஆற்ற வேண்டும் என்ற கருத்தை இளையர்களிடத்தில் சேர்க்‌கும் எண்ணத்தோடு தமிழர் பேரவை ‘தமிழோடு வளர்வோம்’ என்ற கருத்தரங்கிற்கு ஏப்ரல் 20ஆம் தேதி ஏற்பாடு செய்தது.

சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடை­பெற்ற இந்நிகழ்ச்­சி­யில் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவர் டாக்டர் டி. சந்துரு சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்துகொண்­டார்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் தமிழர் பேரவையின் துணைத் தலைவருமான முனைவர் முஹைதீன் நிசார் அன்வர் வரவேற்புரையாற்றினார்.

வெவ்வேறு வேலை­யி­டங்களிலும் தமிழ்ப் புழக்­கம் தேவை­ப்படும் என்பதைத் தொடக்‌கநிலை 5, 6 மற்றும் உயர்நிலை 1, 2 மாணவர்களுக்‌கு எடுத்துரைப்பதற்காக நான்கு ஆற்றல் வாய்ந்த இளையர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளர்களாகப் பங்கேற்றனர்.

ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் வாசுதாஸ், ‘லவ் அண்ட் லைட்’ அறக்கட்டளை மற்றும் ‘சுவி­ஃப்ட் அக்­க­வுன்­டிங் பிஐ’யின் நிறுவனர் கன­கேஸ்­வரி மோஹன தாஸ், மூத்த ஆய்­வா­ளர் மற்றும் பல்கலைக்‌கழக இணையாசிரியர் காளிச்சரண் வீரசிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

செய்திப் படைப்பாளர் இலக்கியா செல்வராஜி, நிகழ்ச்சியின் தொகுப்பாளராகத் தன் வேலையிடத்தில் தமிழ்மொழியின் முக்‌கியத்துவத்தை உணர்த்திய சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இதன்பின் மேலும் ஆழ்ந்த கருத்தாடலை ஊக்‌குவிக்‌கும் எண்ணத்தோடு மாணவர்கள் சிறு குழுக்‌களாகப் பிரிக்கப்பட்டனர். இந்தக் கருத்தாடல் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களால் வழிநடத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக நான்கு பேச்சாளர்களைக்‌கொண்ட கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது.

“தமிழ் பேசுவதற்குச் சிரமப்பட்டாலும், விடாமல் முயற்சி செய்து பேச வேண்டும்,” என்று தமிழர் பேரவையின் மேலாண்மை குழு உறுப்பினரும் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான திருமதி வெள்ளிநிலா குணாளன் வலியுறுத்தினார்.

“நமது தமிழ்மொழியை மேலும் புரிந்துகொண்டு கற்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்ட இதுபோன்ற நிகழ்ச்சிகள் துணைபுரிகின்றன,” என்றார் பாசிர் ரிஸ் க்ரெஸ்ட் உயர்நிலைப்பள்ளியின் மாணவர் லோகித் பிரசாந்த்தராஜ், 13.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!