தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான்கு சுவர்களுக்குள் கார் பந்தயத்தில் போட்டியிடும் சுரின்

3 mins read
43694493-54a6-4503-8684-cab1a177562e
பாவனைப் பயிற்சி கார் பந்தய விளையாட்டில் ஈடுபடும் சுரின். - படம்: அனுஷா செல்வமணி

அறையின் நான்கு சுவர்களுக்குள் ஒரு கார் பந்தயம் நடக்கிறது என்றால் நம்ப முடியாத ஒன்றாகச் சிலருக்குத் தோன்றும்.

ஆனால், வீட்டிலேயே இவ்வாறு பாவனைப் பயிற்சி கார் பந்தயச் சூழலை உருவாக்கியுள்ளார் 34 வயது சுரின் செல்வராஜு.

மோட்டார் விளையாட்டுகள், மோட்டார் பைக் பந்தயங்கள் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள சுரின், தற்போது முழுநேரமாக ‘சிம் ரேசிங்’, அதாவது பாவனைப் பயிற்சி கார் பந்தய விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்.

முழுநேரமாக ‘சிம் ரேசிங்’ எனப்படும் பாவனைப் பயிற்சி கார் பந்தயத்தில் ஈடுபட்டு வரும் சுரின்.
முழுநேரமாக ‘சிம் ரேசிங்’ எனப்படும் பாவனைப் பயிற்சி கார் பந்தயத்தில் ஈடுபட்டு வரும் சுரின். - படம்: அனுஷா செல்வமணி

மெய்நிகர்ச் சூழலில் மோட்டார் விளையாட்டில் போட்டியிடுவதுதான் இவருக்கு வாடிக்கை.

“ஒரு காரை எதார்த்தமாக மெய்நிகர் பாணியில் ஓட்டுவதுதான் ‘சிமுலேஷன் ரேசிங்’. பொதுவாக கணினிகளில் விளையாடப்படும் கார் பந்தய விளையாட்டுகளில் பிரேக் பிடித்தால் கார் நிற்பது, திசைமாற்றி[Ϟ]யைப் பிடிக்கும்போது காரின் திசை மாறுவது போன்றவற்றை உணர முடியாது. ஆனால் இந்தப் பாவனைப் பயிற்சி விளையாட்டில் அவற்றை உணர முடியும்,” என்று விளக்கினார் சுரின்.

இளம் வயதிலிருந்தே அதிக உற்சாகம் தரும் பொழுதுபோக்குகளை நாடியவர் சுரின். அதனால் அவர் 21 வயதிலிருந்து அவ்வப்போது அண்டைநாடுகளுக்குச் சென்று பந்தயங்களில் ஈடுபடுவதும் உண்டு.

முன்னர் சிங்கப்பூர் ஆகாயப் படையில் பொறியாளராகப் பணியாற்றிய சுரின், பணி நிமித்தமாக ஈராண்டு காலம் அமெரிக்காவில் பணிபுரிய வேண்டியிருந்தது. அங்கு அவருக்கு எதேச்சையாகப் பாவனைப் பயிற்சி கார் பந்தயம் பற்றித் தெரியவந்தது.

அதன் மேல் துளிர்விட்ட ஆர்வம், ஈராண்டுகளில் அது குறித்து அதிகம் ஆராய்ந்து யூடியூப் காணொளிகள் பார்த்துப் பயிற்சி மேற்கொள்ளத் தூண்டியது.

சிங்கப்பூர் திரும்பியதும் உடனே பாவனைப் பயிற்சி கார் பந்தயத்தில் ஈடுபடாமல் படிப்[Ϟ]படியாகத் தம்மை அதில் மேம்[Ϟ]படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் இறங்கினார்.

“முதலில் நான் இதில் ஈடுபடுவதற்கு என் வீட்டில் போதுமான வசதிகளை அமைக்க வேண்டும் என்பதற்காக நான் பந்தயத்திற்குத் தேவையான பாகங்களை வாங்கி என் அறையை அதற்குத் தகுந்தாற் போல அமைக்கத் தொடங்கினேன்,” என்று சுரின் சொன்னார்.

இந்த விளையாட்டில் ஈடுபடப் பல மென்பொருள்கள் உள்ளன. அதில் சுரின் ‘ஐரேசிங்’ எனும் தளத்தைப் பயன்படுத்துகிறார். இவரைப் போல உலகமெங்கும் ‘சிமுலேஷன் ரேசிங்’ பிரியர்களுடன் போட்டியிடும் சுரின் முக்கியமாகக் கவனம் செலுத்துவது ஜிடி3 ரக கார்களாகும்.

அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பிய சில ஆண்டுகளில் சுரின் முழுநேரமாக இந்த விளையாட்டில் இறங்க முடிவெடுத்தார்.

“இதில் ஒருவரால் அதிக பணத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால், பணமா ஆர்வமா என்று யோசித்தபோது எனக்கு ஆர்வம்தான் பெரிதாக இருந்தது. அதனால் ஆகாயப் படையை விட்டு வெளி[Ϟ]யேறினேன்,” என்று சுரின் கூறினார்.

தற்போது சுரின் இந்த பாவனைப் பயிற்சி கார் விளையாட்டுவழி ஈட்டும் பணத்தைக் கொண்டு தமது வாழ்க்கையை நடத்தி வருகிறார். ‘பிஜிசெட்’ குழுவைப் பிரதிநிதிக்கிறார் சுரின்.

“நான் தொடங்கும்போது முதல் ஒன்றரை ஆண்டில் ஐம்பது வெள்ளிக்கும் குறைவான லாபத்தைத்தான் பார்க்க முடிந்தது. ஆனாலும் இது எனக்கு மனநிறைவை அளிக்கிறது. என்னால் இதில் வெறித்தனமாக இயங்க முடிகிறது,” என்றார் சுரின்.

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் இந்த விளையாட்டு மீது ஆர்வமுள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகக் கூறி வருந்திய சுரின், விழிப்புணர்வு அதிகரிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

“சிலர் என்னிடம் நான் என்ன செய்கிறேன் என்று கேட்ட பிறகு வியந்து போகின்றனர். அவர்களால் இதை ஒரு முழுநேரப் பணியாகப் பார்க்க முடிவதில்லை. அந்த கண்ணோட்டம் மாற வேண்டும்,” என்றார் சுரின்.

குடும்பத்தினர் தாம் எடுத்துள்ள முடிவை ஆதரிப்பதாகக் குறிப்பிட்ட சுரின், வாரத்தில் ஆறு நாள்கள் இந்த பாவனைப் பயிற்சி கார் பந்தயத்துக்கென ஒதுக்குகிறார்.

ஜெர்மனியில் உலகின் மிகப் பெரிய பந்தயப் பாதை இருப்பதாகக் கூறிய சுரின், வருங்காலத்தில் அங்கு சென்று போட்டியிட விரும்புகிறார்.

இதில் ஒருவரால் அதிக பணத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால், பணமா ஆர்வமா என்று யோசித்தபோது எனக்கு ஆர்வம்தான் பெரிதாக இருந்தது.
சுரின் செல்வராஜு, 34
குறிப்புச் சொற்கள்