தக்காளி நீண்டநாள் கெடாமல் பாதுகாக்க...

தக்காளி நீண்டநாள் கெடாமல் பாதுகாக்க...

1 mins read
5d47c7a5-6b73-4077-9f8d-4be491130fcf
தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், அதனைப் பல நாள்களுக்குக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் வழிமுறையையும் தெரிந்துகொள்வது நல்லது. - படம்: பிக்சாபே

இந்தியாவில் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில் பலரும் தக்காளியைக் குறைவாகப் பயன்படுத்த முயன்று வருகின்றனர்.

இந்நிலையில், அதிக காசு கொடுத்து வாங்கி வரும் தக்காளியைப் பல நாள்களுக்குக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் வழிமுறையையும் தெரிந்துகொள்வது நல்லது.

நன்கு பழுத்திருக்கும் தக்காளியை முதலில் பயன்படுத்த வேண்டும். நிறைய தக்காளி பழுத்திருந்தால் அவற்றை மட்டும் குளிர்பதனப் பெட்டியில் வைத்து முதலில் அவற்றை பயன்படுத்தலாம்.

தக்காளியின் காம்புப் பகுதியை மேல் பக்கமாக வைக்கலாமல், கீழ்ப்பக்கமாக இருக்கும்படி தக்காளியை அடுக்கி வைக்கலாம். இதனால் தக்காளி விரைவில் கெட்டுப்போகாது.

தக்காளியை வாங்கி வந்ததும், அதனை குழந்தையைக் குளிப்பாட்டுவதுபோல மெல்ல கழுவி, நல்ல துணியால் துடைத்துவிட்டு, ஒரு கூடையில் வைத்துப் பாதுகாக்கலாம்.

ஒரு வேளை அதிக நாள்கள் தக்காளியை வைத்திருக்க வேண்டும் என்றால், நன்கு பழுத்த தக்காளிகளை விட சற்று பச்சை நிறத்தில் இருக்கும் தக்காளியாகப் பார்த்து வாங்கி வந்து அறை வெப்பநிலையிலேயே வைத்திருந்தால் கூட ஒரு வாரத்துக்கு தாங்கும். அறை வெப்பநிலையில் அதிக ஈரப்பதம் இல்லாமல் இருத்தல் நலம்.

குறிப்புச் சொற்கள்