தமிழ்க் காவியத்தின் வெற்றி

தமிழ்க் காவியத்தின் வெற்றி

3 mins read
-
-

அனைத்திந்­தி­யப் பட­மாக உல­கெங்­கும் பல மொழி­களில் வெளி­யீடு கண்­டுள்ள இப்­ப­டத்­தில் அன்­றைய தமி­ழர்­க­ளின் கோயில், குடி­யி­ருப்பு உணவு, பானங்­க­ளை­யும் காட்­டி­ தமிழின் தனிச் சிறப்பைக் காட்டியி­ருக்­க­லாம். ஒரு பொதுத்­தன்மையே அவற்­றில் இருந்­தது.

நாவ­லின் சுருக்­கத்­தை­யும் கதைக் களத்­தை­யும் வரை­ப­டம் வழி­யாக படத்­தின் தொடக்­கத்­தில் கூடு­த­லாக விவ­ரித்­தி­ருந்­தால் நாவ­லைப் படிக்­கா­த­வர்­க­ளுக்கு கதை­யைப் புரிந்­து­கொள்ள உத­வி­யாக இருந்­தி­ருக்­கும். பார்வையாளர்கள் நாவ­லின் கதைச் சுருக்­கத்­தை­யா­வது படித்­து­விட்­டுச் சென்­றால் படத்தை முழு­மை­யா­கப் புரிந்­து­கொண்டு பார்க்க முடி­யும்.

கல்­கி­யின் நாவல், பாகு­பலி போன்ற படங்­கள் ஆகி­ய­வற்­று­டன் ஒப்­பீ­டு­க­ளைச் செய்­யா­மல் இருந்­தால் உல­கப் பெரும் மன்­னர்­களில் ஒரு­வ­னான ராஜ­ராஜ சோழ­னின் சிறு­வ­ய­துக் கதையை உல­கத்­துக்கு எடுத்­துச் சொல்­லும் பொன்­னி­யின் செல்­வன் சிறந்­த­தொரு படம்.

70 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு கல்­கி­யின் நாவ­லுக்கு புத்­து­யிர் ஊட்டி, உல­கெங்­கும் வாழும் தமி­ழர்­களை மீண்­டும் தமிழ் வாசிக்க வைத்­தி­ருப்­பது இப்­ப­டத்­தின் மற்­றொரு வெற்றி. சோழ­ரின் புலிக்­கொ­டியை உல­க­மெங்­கும் பெரும் வர­வேற்­பு­டன் பறக்­க­விட்­டி­ருப்­பது தயா­ரிப்­பா­ளர் சுபாஸ்­க­ரன், இயக்­கு­நர் மணி­ரத்­னம் ஆகிய இருவரின் மாபெ­ரும் முயற்சி.

எனினும், தமிழர் சிறப்பை தமிழரும் உலகமும் அறியச் செய்வது இலக்கென்றான் அதை இப்படம் அடையவில்லை என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட 430 ஆண்டுகள் தமிழகத்தின் நிலப்பரப்புகளுக்கும் அப்பால், கடல்கடந்தும் விரிந்திருந்த பிற்காலச் சோழ வல்லரசின் தொடக்ககால கதை. தமிழரின் ஆடல், பாடல், ஓவியம், கட்டடக் கலைகள் சிறந்திருந்த காலம்.

குடத்துக் ஓலையில் பெயர் எழுதிப் போட்டு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குடவோலை முறைமூலம் உலகத்திற்கு வாக்குச்சீட்டு முறையை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்கள். கல்லணையும் வீராணம் ஏரியும் கட்டி, மிகச் சிறந்தொரு நீர்பாசன முறையை

உருவாக்கியவர்கள். வீரமும், கலைகளையும், அறிவும் நிர்வாகமும் சிறந்து தழைத்திருந்த தமிழரின் சிறப்பைச் சொல்லாலோ, காட்சியாலோ காட்ட இந்தப் படம் முனையவில்லை.

கதையைச் சொல்லிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலிருந்த படக்குழுவினர் தங்கள் வேரையும் அடையாளத்தையும் காட்சியாகப் பார்த்துப் பூரிக்க வரும் மக்களை மறந்துவிட்டார்கள்.

புலவர்களையும் சமயக்குரவர்களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் போற்றி வளர்த்தவர்கள் தமிழ் மன்னர்கள். பழைய கருப்பு வெள்ளைத் தமிழ்ப் படங்களில் வருவதுபோல் இப்பெருமக்களை ஒரு காட்சியிலாவது அரசவையில் அமரவைத்து அழகுபார்த்திருக்கலாம். ஆதித்த கரிகாலனின் போர் வெறியையும் குடியாட்டத்தையும் காட்டியவர்கள், பொன்வேய்ந்த அவனது காஞ்சி மாளிகையையும் காட்டியிருக்கலாம்.

புத்தரின் பிரம்மாண்டத்தைக் காட்டியதுபோல், சோழர்களின் மாடக்கோயில்களையும் கற்கோயில் சிறப்புகளையும் காட்டியிருக்கலாம். பல கோயில்களை எழுப்பிய செம்பியன் மாதேவியின் சிவ வழிபாட்டைக் காட்டியிருக்கலாம். திருமுறையில் இடம்பெற்றிருக்கும் கண்டராதித்தின் ஒரு பாட்டைச் சொல்லியிருக்கலாம். கட்டியவீட்டுக்குக் குறைசொல்வது நோக்கமல்ல.

சினிமா எனும் பெரும் சக்தி வாய்ந்த ஊடகத்தில் வாரதுவந்த மாமணிபோல பல ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழரின் வரலாற்று பேசப்படும்போது, அது தமிழ் மக்களையும் மற்றவர்களையும் அசைத்துப் பார்க்கத் தவறிவிட்டதோ என்ற ஆதங்கம்தான். வழக்கம்போல இது மணிரத்னம் படம் என மௌனமாகப் போய்விட முடியவில்லை.

துணைப் பாத்­தி­ரங்­க­ளைப் போலவே, முக்­கிய பெண் பாத்­தி­ரங்­கங்­களும் மாநி­றத் தமிழ் முகங்­க­ளாக இருந்­தி­ருந்­தால் படம் இன்­னொ­ரு­படி உயர்ந்­தி­ருக்­கும். பாண்டி­யர்­க­ளுக்கு கருப்­பும் சோழர்­க­ளுக்கு வெள்­ளை­யும் என்­பது போன்ற குறி­யீ­டு­கள் பொருந்­தா­தவை. படத்­தில் சீனர்­கள் சம்­பந்­தப்­பட்ட காட்­சி­கள் வரலாற்றுக்கு மாறாக சற்று அதி­க­மா­கவே உள்­ளது. இதை ஒரு கற்­ப­னை­கள் நிறைந்த கதை­யின் திரைப்­ப­ட­மாக ரசிப்­ப­தோடு நிறுத்­திக்­கொள்ள வேண்­டும். உண்மை வர­லா­றாக உணர்ச்சி பொங்­கத் தேவை­யில்லை.

இப்­ப­டத்­தின் வர்த்­தக வெற்றி, மேலும் பல தமிழ்க் கதை­கள் பெரும் திரைப்­ப­டங்­க­ளாக வழி­வ­குக்­கும். இதன்­மூ­லம் தமிழ் சினி­மா­வும் தமிழ்ச் சிந்­த­னை­யும் வளர்ச்­சி­யைக் காணும்.

ரூ.450 கோடி, 120 நாள்கள்

தமிழ்ச் சினி­மா­வின் அண்­மைய பிரம்­மாண்­டப் படைப்­பு­க­ளைத் தயா­ரித்­துள்ள லைக்கா நிறு­வ­னம்­தான் 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தை­யும் தயா­ரித்­துள்­ளது.

இப்­ப­டத்­தின் மொத்த செலவு 450 கோடி ரூபா­யில் அடங்­கி­விட்­டது என்று கூறப்படுவது ஒட்­டு­மொத்த இந்­திய திரை­யு­ல­கை­யும் அசர வைத்­துள்­ளது.

120 நாள்­களில் மொத்த படத்­தை­யும் இரு பாகங்­க­ளாக எடுத்து முடித்­துள்­ளார் இயக்கு­நர் மணி­ரத்­னம். 'பாகு­பலி' படத்­துக்கு இதை­விட அதிக செல­வும் கால­மும் ஆன­தாக சிலர் சுட்டிக்­காட்­டு­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் உள்ள பெரும்­பா­லான திரை­ய­ரங்­கு­களில் நேற்று 'பொன்­னி­யின் செல்­வன்' படம் வெளி­யீடு கண்­டது. முதல் நாள் வசூல் ஐம்­பது கோடி ரூபாய் என்­கி­றார்­கள்.

முதல் பாகத்­தின் மொத்த வசூல் 700 கோடி ரூபா­யாக இருக்­கும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது. இரண்­டாம் பாக­மும் வசூலை அள்­ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.