அனைத்துலக அளவில் விருதுகளை அள்ளிக் குவித்து வரும் 'டு லெட்'

அனைத்துலக அளவில் விருதுகளை அள்ளிக் குவித்து வரும் 'டு லெட்'

1 mins read
9ab0c17e-b9e7-4698-89db-a3a7ee93f01f
Google News Preferred Icon

சிறந்த தமிழ்ப் படத்துக்கான இந்திய தேசிய விருதை வென்ற 'டு லெட்' திரைப்படம் பல்வேறு அனைத்துலக விழாக்களிலும் பங்கேற்று விருதுகளைக் குவித்து வருகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ள இப்படம், 26 விருதுகளைப் பெற்றுள்ளன. தவிர, 80 முறை விருதுக்காக முன்மொழியப்பட்டுள்ளது. "தமிழகத்தில் வாடகைக்கு வீடு கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல. இவ்வாறு வீடு தேடுவதில் உள்ள சிக்கல்கள், சிரமங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது 'டு லெட்'. எனவே யதார்த்தமான காட்சிகளுடன் படத்தை உருவாக்கியுள்ளோம்," என்கிறார் இதன் இயக்குநர் செழியன். இந்தப் படம் இன்னும் திரையரங்குகளில் வெளியீடு காணவில்லை. அநேகமாக பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் எனத் தகவல்.