இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதைக் கொண்டாடும் விதமாக, வரும் ஜனவரி 7ஆம் தேதி அவரது பிறந்தநாளில் சென்னையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க வருமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினைத் தன் மனைவி பூர்ணிமாவுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார் பாக்யராஜ்.
இந்தப் பாராட்டு விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு பாக்யராஜை வாழ்த்திப் பேசவுள்ளதாகத் தெரிகிறது.
தமிழ்த் திரையுலகில் திரைக்கதை மன்னன் எனப் பாராட்டப்படுபவர் பாக்யராஜ். பாரதிராஜாவின் சீடரான இவர், ‘16 வயதினிலே’ படத்தின் காலம் முதல் அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.
பிறகு தாமே படங்களை இயக்கி, நடித்து, இசையமைத்து திரை ஆளுமையாக உருவெடுத்தார்.

