நாக் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் ஆலியா பட் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார் ஆலியா பட்.
அதன் பின்னர், ‘கங்குபாய் கத்தியவாடி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை குறித்து இவரிடம் கூறினாராம் நாக் அஸ்வின்.
கதை பிடித்துப்போனதால் அதில் நடிக்க ஆலியா தயக்கமின்றி ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
திருமணத்துக்குப் பிறகும் அதிக ஊதியம் கேட்கிறாராம் ஆலியா. எனினும், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அவரை இயக்குநர்கள் ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மகாநதி’, பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் நாக் அஸ்வின்.