தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சண்டையிட விரும்பும் ஆலியா பட்

2 mins read
a54405a0-1192-4234-852b-30766b3e70a4
ஆலியா பட். - படம்: ஊடகம்

இந்தித் திரையுலகில் முக்கியமான நடிகையாக இருக்கும் ஆலியா பட் 2012ஆம் ஆண்டு ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ படத்தில் அறிமுகமாகி ‘கங்குபாய் கதியவாடி’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர்.

ஆலியா பட் நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் பலத்த வரவேற்பினைப் பெற்றன. நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்திவரும் ஆலியா, தற்போது ஜிக்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரைத் திருமணம் செய்த ஆலியாவுக்கு, ராஹா எனும் பெண் குழந்தை உள்ளது.

சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் கணவர் ரன்பீருடன் லவ் அன்ட் வார் படத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

மேலும், உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் நடிகை ஆலியா பட் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

ஜிக்ரா படம் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ஆலியா பட் அதிரடியான சண்டைக்காட்சிகளில் நடிப்பது மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.

மேலும், “ஒரு பெண் சண்டையிடும்போது அதில் பெண் சண்டையிடுகிறாள் எனப் பார்க்க தேவையில்லை. ஒரு மனிதர் ஏதோ ஒரு காரணத்துக்காக சண்டையிடுகிறார். ஆண், பெண் என்பதைத் தாண்டி வலுவான கதாபாத்திரமாக இருந்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

“நான் இந்தப் படத்தில் இருக்கிறேன். சண்டையிட்டுள்ளேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. ஜிக்ரா படத்தில் எனக்கு பிடித்தது அந்தக் கதாபாத்திரத்தின் வலிமையும் உணர்ச்சிகளுமே,” என்றார் ஆலியா.

குறிப்புச் சொற்கள்