விஷ்ணு விஷாலைப் பாராட்டிய அமீர்கான்

விஷ்ணு விஷாலைப் பாராட்டிய அமீர்கான்

1 mins read
0362803a-f00f-4886-b155-639402598096
அமீர் கானுடன் விஷ்ணு விஷால். - படம்: ஹங்காமா எக்ஸ்பிரஸ்
Google News Preferred Icon

தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால், அடுத்தடுத்து தாம் நடிக்க உள்ள திரைப்படங்கள் குறித்து அறிவித்துள்ளார்.

‘கட்டா குஸ்தி-2’ திரைப்படத்தைத் தொடர்ந்து, விரைவில் விஷ்ணு விஷாலின் ‘இரண்டு வானம்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

அதன்பின்னர், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். இது விளையாட்டைப் பின்னணியாகக்கொண்டு உருவாகும் படம் எனத் தகவல்.

அதைத்தொடர்ந்து தமது 25வது திரைப்படத்திலும் அவர் நடிக்கவுள்ளார். ‘கட்டா குஸ்தி-2’ திரைப்படம் முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது.

இதனிடையே, பாலிவுட் நடிகர் அமீர்கான், தனது ‘ராட்சசன்’ மற்றும் ‘எஃப் ஐ ஆர்’ படங்களைப் பார்த்துவிட்டுப் பாராட்டியதாகவும் எதிர்காலத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதித்ததாகவும் விஷ்ணு விஷால் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்த அடுத்தடுத்த அறிவிப்புகள் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்புச் சொற்கள்