தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கூலி’யில் ரஜினியுடன் இணையும் அமீர்கான்

1 mins read
2b49ccdc-815c-4b83-8c90-31846b1668f2
ரஜினிகாந்த், அமீர்கான். - படம்: ஊடகம்

‘வேட்டையன்’ படத்தின் இரண்டு நாள் வசூல் 100 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி அடுத்து நடிக்கும் ‘கூலி’ படத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடிக்கும் தகவல் உறுதியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நாகார்ஜுனா, ஷ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

‘கூலி’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 17ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என்றும் அப்போது அமீர்கான் சம்பந்தப்பட்ட காட்சிகள், ரஜினியின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்