தமிழில் வெளியான ‘மாயக் கண்ணாடி’, ‘அழகிய தீயே’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்த நவ்யா நாயரின் துணிச்சலை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். என்ன நடந்தது என்கிறீர்களா?
அண்மையில் கேரளாவில் நடைபெற்ற இசைத்தொகுப்பு வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தன் காரில் சென்றுகொண்டிருந்தாரம் நவ்யா.
பட்டணங்காடு என்ற பகுதிக்கு அருகே சென்றபோது சைக்கிளில் சென்று கொண்டிருந்த ரமேஷ் என்பவர் மீது லாரி மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
அதைக்கண்டு சாலையில் சென்ற பொதுமக்கள் திகைத்து நிற்க, அந்த லாரியோ நிற்காமல் சென்றுவிட்டது.
இதைக்கண்டு கடும் கோபமடைந்த நவ்யா, அந்த லாரியை சில கிலோ மீட்டர் தூரம் தனது காரிலேயே துரத்திச்சென்று மடக்கிப் பிடித்துள்ளார். பின்னர் காவல்துறையினருக்கும் தகவல் சொல்ல லாரி ஓட்டுநர் கைதானாராம்.
காயமடைந்த ஆடவர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நவ்யாவின் துணிச்சலைப் பலரும் வெகுவாக பாராட்டினர்.

