நடிகரும் தயாரிப்பாளருமான கலைப்புலி ஜி.சேகரன் காலமானார்

நடிகரும் தயாரிப்பாளருமான கலைப்புலி ஜி.சேகரன் காலமானார்

படம்: ஊடகம்

14 Apr 2025 - 3:27 pm

1 mins read

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்ட கலைப்புலி ஜி.சேகரன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73.

‘யார்?’ தமிழ்ப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இவர், ‘ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்’, ‘காவல் பூனைகள்’, ‘உளவாளி’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

‘ஜமீன் கோட்டை’ படத்தில் நாயகனாக நடித்தவர், ‘கட்டுவிரியன்’ என்ற படத்தை இயக்கி, இசையமைத்தும் இருந்தார்.

குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிப்பவர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஜி.சேகரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இந்நிலையில் அவர் காலமானதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
நடிகர்இயக்குநர்உயிரிழப்பு